கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு தடவை அபூபக்ர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில், மக்களே! நீங்கள், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன் 5:105) வசனத்தை ஓதுகின்றீர்கள். ஆனால் அதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் பொருளைத் தராமல், பொருத்தமில்லாத பொருள் கொள்கின்றீர்கள்.
(அதன் விளக்கம் என்னவெனில்) “மக்கள் ஒரு தீமையைக் கண்டும் அதைத் தடுக்காமல் இருந்தால் (நல்லோர், தீயோர்) என அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்துவிடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
(முஸ்னது அஹமது: 53)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ سَمِعْتُ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، يُحَدِّثُ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ،
أَنَّهُ خَطَبَ فَقَالَ: يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الْآيَةَ، وَتَضَعُونَهَا عَلَى غَيْرِ مَا وَضَعَهَا اللَّهُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الْمُنْكَرَ بَيْنَهُمْ، فَلَمْ يُنْكِرُوهُ، يُوشِكُ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابِِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-53.
Musnad-Ahmad-Alamiah-50.
Musnad-Ahmad-JawamiulKalim-50.
சமீப விமர்சனங்கள்