அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முஸ்லிம் நாற்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரைப் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாப்பான்; பைத்தியம், தொழுநோய், வெண்புள்ளி போன்ற நோய்களிலிருந்து அவரைப் பாதுகாப்பான்.
அவர் ஐம்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது விசாரணையை எளிதாக்குவான். அவர் அறுபது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரிடம் பாவமீட்சியை வழங்குவான். அதன் காரணமாக அல்லாஹ் அவரைநேசிப்பான்.
அவர் எழுபது வயதை அடைந்தால், அல்லாஹ்வும் வானவர்களும் அவரை நேசிப்பார்கள். அவர் எண்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது நற்செயல்களை ஏற்றுக்கொள்வான். அவரது தீமைகளை அழிப்பான்.
அவர் தொண்ணூறு வயதை அடைந்தால், அவரது முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். மேலும் அவர் பூமியில் அல்லாஹ்வின் கைதி என்று அழைக்கப்படுவார். அவர் (மறுமையில்) தனது குடும்பத்தினருக்காக பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுவார்.
(முஸ்னது அஹ்மத்: 5626)حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا الْفَرَجُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَامِرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ:
” إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً، آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا: مِنَ الْجُنُونِ، وَالْبَرَصِ، وَالْجُذَامِ. وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ، وَإِذَا بَلَغَ السِّتِّينَ، رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا، وَإِذَا بَلَغَ السَّبْعِينَ، أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ، وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ، تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ، وَإِذَا بَلَغَ التِّسْعِينَ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ “
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-5369.
Musnad-Ahmad-Shamila-5626.
Musnad-Ahmad-Alamiah-5369.
Musnad-Ahmad-JawamiulKalim-5475.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்
2 . ஹாஷிம் பின் காஸிம்-அபுன்நள்ர்
3 . ஃபரஜ் பின் ஃபளாலா
4 . முஹம்மத் பின் ஆமிர்-
5 . முஹம்மத் பின் அப்துல்லாஹ்
6 . ஜஃபர் பின் அம்ர்
7 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-5626, …
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ
“خَيْرُ النَّاسِ أَنْفَعُهُمْ لِلنَّاسِ.”
رواه الطبراني في المعجم الأوسط (رقم: 5937)
தமிழில் மொழிபெயர்க்கவும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
நாம் பார்த்தவரை இந்த வார்த்தை பலவீனமான அறிவிப்பாளர்தொடரில் தான் உள்ளது. அலீ பின் பஹ்ராம் என்பவரின் நிலை அறியப்படவில்லை. இது போன்ற வேறு சில பலவீனமான அறிவிப்பாளர்தொடர்களை இணைத்தே இதை அல்பானி அவர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளார். இது ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரத்தில் உள்ள செய்தி.இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.
قال المنذري: إسناده لا بأس به
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அஹ்மத்-9198.