தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muwatta-Malik-792

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஆகியோர் (சூரியன் மறைந்து) இருட்டை பார்க்கும்போது நோன்பு துறப்பதற்கு முன்பு மஃக்ரிப் தொழுகையைத் தொழுவார்கள். மஃக்ரிப் தொழுகைக்குப் பின்பு நோன்பு துறப்பார்கள். இது (நடந்தது) ரமளான் மாதத்தில் ஆகும்.

அறிவிப்பவர்: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)

(முஅத்தா மாலிக்: 792)

وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَن حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ،

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَا يُصَلِّيَانِ الْمَغْرِبَ حِينَ يَنْظُرَانِ إِلَى اللَّيْلِ الأَسْوَدِ، قَبْلَ أَنْ يُفْطِرَا، ثُمَّ يُفْطِرَانِ بَعْدَ الصَّلاَةِ، وَذَلِكَ فِي رَمَضَانَ.


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-792.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-629.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14249-ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் இறந்த வருடம் பற்றி இரு கருத்துக்கள் உள்ளன.

1 . ஹிஜ்ரீ 95 இல் தனது 73 வது வயதில் இறந்தார் என்று வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
இறப்பு ஹிஜ்ரி 207
வயது: 77
கூறியுள்ளார். இதன்படி இவர் பிறந்தது ஹிஜ்ரீ 22 ஆகும்.

2 . ஹிஜ்ரீ 105 இல் இறந்தார் என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஇஸ்ஹாக் ஹர்பீ, இப்னு அபூஆஸிம், யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
ஆகியோர் கூறியுள்ளனர். இதன்படி இவர் பிறந்தது ஹிஜ்ரீ 32 ஆகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/497)

உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 23 லும், உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 35 லும் இறந்துவிட்டார்கள். இவர் ஹிஜ்ரீ 22 இல் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொண்டால் உமர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்றும், உஸ்மான் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்கலாம் என்றும் முடிவு செய்யலாம்.

இவர் ஹிஜ்ரீ 32 இல் பிறந்தார் என்பதை ஏற்றுக் கொண்டால் இவர் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று முடிவு செய்யலாம்.

இந்தச் செய்தியை சரியானது என்று ஏற்றுக் கொண்டாலும், இரு நபித்தோழர்களும், “வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!” (அல்குர்ஆன் 2:187) என்ற வசனத்தின்படி இரவை எவ்வாறு முடிவு செய்வது என்பதின்படியே நோன்பைத் தாமதமாக துறந்துள்ளனர்.

இந்த வசனத்தில் கூறப்படும் இரவு எது என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது சொல்லாலும், செயலாலும்  சூரியன் மறைந்ததிலிருந்து இரவு ஆரம்பமாகிறது என்று விளக்கிவிட்டார்கள்.

(பார்க்க: புகாரி-1954 , 1955)

நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள் என்று கூறியிருப்பதால் நபியின் சொல்லையே நாம் பின்பற்ற வேண்டும். (பார்க்க: புகாரி-1957),

1 . இந்தக் கருத்தில் ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-792 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7588 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-9792 , ஷரஹ் மஆனில் ஆஸார்-940 , குப்ரா பைஹகீ-2106 , 8126 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-1957 ,

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.