தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-678

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

678. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.

பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான்.

பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர்:  (ரலி)

 

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நபித்தோழர்.


أَخْبَرَنَا سُوَيْدٌ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، أَنَّ كَعْبَ بْنَ عَلْقَمَةَ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ مَوْلَى نَافِعِ بْنِ عَمْرٍو الْقُرَشِيِّ يُحَدِّثُ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ وَصَلُّوا عَلَيَّ؛ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرًا، ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ؛ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ أَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ، فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-671.
Nasaayi-Shamila-678.
Nasaayi-Alamiah-671.
Nasaayi-JawamiulKalim-671.

நஸாயீ இமாம்

இமாம் நஸாயீ

முழுப்பெயர்: அஹ்மத் இப்னு ஷுஐப் இப்னு அலி இப்னு ஸினான் இப்னு பஹ்ர் இப்னு தீனார் (சுனன் நஸாயீ என்ற ஹதீஸ்  நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஅப்துர்ரஹ்மான் அந்நஸாயீ

இயற்பெயர்: அஹ்மத்

தந்தை பெயர்: ஷுஐப்

பிறந்த ஊர்: இவர் நஸா எனும் ஊரில் பிறந்தார்,

பிறப்பு: ஹிஜ்ரி 215

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், அல்ஹிஜாஸ், எகிப்து, ஷாம் இன்னும் ஜஸீரா போன்ற உலகின் பல பாகங்களுக்கும் கல்விக்காகப் பிரயாணம் செய்துள்ளார்கள்.

அஸ்ஸுனன் நஸாயீ (ஸுனன் அல்குப்ரா, ஸுனன் அஸ்ஸுக்ரா),

ஃபலாயிலுல் குர்ஆன் (குர்ஆனுடைய சிறப்புகள் தொடர்பானது),

ஜுஸ்வுன் ஃபிஹி மஜ்லிஸானி,

அஷரதுந் நிஷா,

ஃபலாயிலுஸ் ஸஹாபா (சஹாபாக்களின் சிறப்புகள் தொடர்பானது),

அல்இக்ராப், அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் (ஹதீஸ்களில் பலவீனமானவர்கள் இன்னும் விடப்பட்டவர்கள் தொடர்பானது),

அமலுல் யவ்மி வல்லைலா,

அல்குனா, அத்தஃப்ஸீர்,

தஸ்மியதுல் ஃபுகஹாயில் வல்அம்ஸாரி போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா, திர்மிதி, முஹம்மது இப்னு இஸ்மாயில் இப்னு உலய்யா, முஹம்மது இப்னு இஸ்மாயில் தப்ரானீ, முஹம்மது இப்னு ஹுஸைன் இப்னு இப்ராஹீமுல் ஆமிரிய்யீ, அபூதாவூத் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

யஃகூப் இப்னு முபாரக், மன்சூர் இப்னு இஸ்மாயில் அல்ஃபகீஹ், முஹம்மது இப்னுல் காஸிம் இப்னு முஹம்மது இப்னுல் ஸியாருல் குர்துபீ, அபூதய்யிப் முஹம்மது இப்னு ஃபலுல் இப்னு அப்பாஸ், ஜஃபர் இப்னு முஹம்மது இப்னுல் ஹாரிஸ் அல்கஸாயீ, இஸ்ஹாக் இப்னு அப்துல்கரீமுஸ் ஸவாஃப் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 303ல் ஸஃபர் மாதம் 13ம்நாள் ஃபலஸ்தீனில் இறந்தார். அப்போது அவருக்கு 88 வயதாகும்.(தகவல்: பயான் சைட்)

ஸுவைத் பின் நஸ்ர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் முபாரக்

عبد الله بن المبارك

இறப்பு: ஹிஜ்ரி 181, ஹீத்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ் பின் முபாரக் பின் வாதாஹ்

தந்தை பெயர்: முபாரக் பின் வாதாஹ்

வம்சம்: அல்ஹன்ழலீ, அத்தமீமீ, பனூ ஹன்ழலா கிளையின் அடிமை

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான், அல்ஃபகீஹ்

ஊர் பெயர்: மர்வ்

பயணித்த ஊர்கள்: மர்வ், யமன், எகிப்து, ஷாம், பஸரா, கூஃபா, குராஸான், ஹிஜாஸ், ஈராக், மக்கா, மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 118, மர்வ்

இறப்பு: ஹிஜ்ரி 181, ஹீத்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் முபாரக் ரஹ் அவர்கள் ஹிஜ்ரி 118 இல் மர்வ் நகரில் பிறந்தார். இவர் ஒரு மிகப் பலமான ஹதீஸ் அறிவிப்பாளர், ஃபகீஹ், அறிஞர், கொடையாளி மற்றும் முஜாஹித் ஆவார். ஹதீஸ் அறிவைத் தேடி யமன், எகிப்து, ஷாம், பஸரா, கூஃபா, குராஸான், ஹிஜாஸ், ஈராக் போன்ற பல இடங்களுக்குப் பயணம் செய்தார்.

மாலிக் இமாம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ போன்ற பல அறிஞர்களிடம் கல்வி கற்றார். இப்னு உயைனா, அஹ்மத் பின் ஹன்பல், யஹ்யா பின் மயீன் போன்றோர் இவரைப் பெரிதும் புகழ்ந்துள்ளனர். ஹிஜ்ரி 181 இல் 63 வயதில் ஹீத் நகரில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ, ஹுமைத் பின் அபூஹுமைத், இஸ்மாயீல் பின் அபூ காலித், யஹ்யா பின் சயீத் அல்அன்ஸாரீ, ஆஸிம் அல்அஹ்வல், அப்துல்லாஹ் பின் அவ்ன், இக்ரிமா பின் அம்மார், முஹம்மத் பின் அஜ்லான், மூஸா பின் உக்பா, ஸுலைமான் அல்அஃமஷ், ஹிஷாம் பின் உர்வா, ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, மஃமர் பின் ராஷித், பகிய்யது பின் வலீத், ஸுஃப்யான் பின் உயைனா, அபுல் அஹ்வஸ், ஸலாம் பின் ஸுலைம் அல்ஹனஃபீ, ஃபுகைல் பின் இயாழ், அல்வலீத் பின் முஸ்லிம், அபூபக்ர் பின் அய்யாஷ், இப்ராஹீம் பின் முஹம்மத் பின் அல்ஹாரிஸ், ஜஃபர் பின் ஸுலைமான் அத்தபாஈ, தாவூத் பின் அப்துர்ரஹ்மான் அல்அத்தார்

வேறு பெயர்கள்: இப்னு முபாரக், பின் முபாரக்


ஆதாரம்: muslimscholars.info (20025) · Should verify

ஹய்வா பின் ஷுரைஹ்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கஅப் பின் அல்கமா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர்-அல்முஅத்தின்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.