தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-99

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 82

தலைக்கு ‘மஸ்ஹ்’ செய்யும் எண்ணிக்கை.

98. பாங்கு பற்றிய கனவு கண்டவரான அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ) அங்கத்தூய்மை செய்ததைப் பார்த்தேன். அவர்கள் தம் முகத்தை மூன்று முறையும்; தம் இரு கைகளையும், இருகால்களையும் இரண்டிரண்டு முறையும் கழுவினார்கள். தம் தலைக்கு இரண்டு முறை ‘மஸ்ஹ்’ செய்தார்கள்.

(நஸாயி: 99)

عَدَدُ مَسْحِ الرَّأْسِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الَّذِي أُرِيَ النِّدَاءَ قَالَ:

«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا وَيَدَيْهِ مَرَّتَيْنِ، وَغَسَلَ رِجْلَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ بِرَأْسِهِ مَرَّتَيْنِ»


Nasaayi-Tamil-98.
Nasaayi-TamilMisc-98.
Nasaayi-Shamila-99.
Nasaayi-Alamiah-98.
Nasaayi-JawamiulKalim-98.




இந்தச் செய்தியில் தலைக்கு மஸஹ் செய்வது இரண்டு முறை என்று வந்துள்ளது.

  • இதன் கருத்து, தலையின் பின்பாகத்திலிருந்து முன்பாகமும், முன்பாகத்திலிருந்து பின்பாகமும் மஸஹ் செய்ததைத்தான் இரண்டுதடவை என்று கூறப்பட்டுள்ளது என்றும் பொருள்கொள்ளலாம்.
  • இதை இரண்டு தடவைகள் செய்தார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

  • முதல் கருத்தின்படி பொருள் கொண்டால் இதில் பிரச்சனை இல்லை. இரண்டாவது கருத்தின்படி பொருள் கொண்டால் இதன் அறிவிப்பாளர்தொடர் சரியானது தான் என்றாலும் இது ஷாத் ஆகும்.

இதற்கான காரணம்:

இந்தச் செய்தியை அம்ர் பின் யஹ்யா அவர்களிடமிருந்து இமாம் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
உஹைப் பின் காலித், காலித் பின் அப்துல்லாஹ், அப்துல்அஸீஸ் பின் அபூஸலமா, ஸுலைமான் பின் பிலால், முஹம்மத் பின் ஃபுலைஹ் ஆகிய ஆறுபேரும் அறிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும், “தலைக்கு ஒரு தடவை மஸஹ் செய்ததாக” அறிவித்துள்ளனர். (சிலர் ஒரு தடவை என்று வார்த்தையில் கூறியும், சிலர் மற்ற உறுப்புகளை பற்றி எத்தனை தடவை என்று கூறியதை தலைக்கு மஸஹ் செய்யும் விசயத்தில் கூறாமலும் அறிவித்துள்ளனர்)

(பார்க்க: புகாரி-185186191 , 197199 ,

  • அம்ர் பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்கள் தான், “தலைக்கு இரண்டு தடவை மஸஹ் செய்ததாக” அறிவித்துள்ளார்.
  • இந்த செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 91
    அவர்களிடமிருந்து 3 முறை கேட்டுள்ளேன். ஒரு முறை அறிவிக்கும் போது, “ஒரு தடவை தலைக்கு மஸஹ் செய்தார்கள்” என்று அறிவித்தார். மற்ற இரண்டுமுறைகளில் அறிவிக்கும் போது “இரு தடவை தலைக்கு மஸஹ் செய்தார்கள்” என்று அறிவித்தார் என்று தனது தந்தை அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஹம்பல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதில் ஸுஃப்யான் அவர்கள் தவறாக அறிவித்துள்ளார் என்பதால் இது ஷாத் ஆகும்.


குறிப்பு: கனவில் பாங்கு கூறப்படும் முறையை காட்டிக் கொடுக்கப்பட்ட நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அப்து ரப்பிஹ் என்பவர் ஆவார். இந்தச் செய்தியை அறிவிக்கும் நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் என்பவர் ஆவார். இந்தச் செய்தியில் நபித்தோழரை தவறாக கூறியது இப்னு உயைனா தான் என்று இப்னு அப்துல்பர் கூறியுள்ளார்.

நூல்: அத்தம்ஹீத்-20/115, (12/471)


மேலும் பார்க்க: புகாரி-186 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.