தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

raavi-28048-உஸ்மான் பின் ஸுலைமான்

A- A+

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

உஸ்மான் பின் ஸுலைமான்-இப்னு அபுல்ஆதிகா – عثمان بن سليمان الأزدي – ابن أبي العاتكة

இறப்பு: ஹி-155.

தரம்: …


இயற்பெயர்: உஸ்மான்

தந்தை பெயர்: ஸுலைமான்

வமிசம்: அஸ்தீ, திமஷ்கீ, மதனீ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஹஃப்ஸ், இப்னு அபுல்ஆதிகா.

ஊர் பெயர்: திமஷ்க்-டமாஸ்கஸ்

பிறப்பு: ஹிஜ்ரி-..

இறப்பு: ஹிஜ்ரி-155.

கால கட்டம்: 7.


الجرح والتعديل – ابن أبي حاتم (6/ 163):
نا عبد الرحمن أخبرنا يعقوب بن إسحاق فيما كتب إلى أنا عثمان بن سعيد قال قلت ليحيى بن معين عثمان بن ابى العاتكة؟ قال ليس بشئ،
نا عبد الرحمن قال سألت ابى عن عثمان بن ابى العاتكة فقال ‌لا ‌بأس ‌به ‌
بليته ‌من ‌كثرة ‌روايته ‌عن ‌على ‌بن ‌يزيد فاما ما روى عن عثمان عن غيرعلى بن يزيد فهو مقارب يكتب حديثه.


تقريب تقريب التهذيب (2/ 385):
* [4483] عثمان بن أبي العاتكة سليمان الأزدي أبو حفص الدمشقي القاص صدوق ضعفوه في روايته عن علي بن يزيد الألهاني من السابعة مات سنة ثنتين وخمسين بخ د ق
قلت: حسن الحديث: ذكره ابن حبان في مشاهير علماء الأمصار (1449) وقال “كان على قضاء الشام كنيته أبو حفص من متقنى أهلها” ولم يذكر ذلك صاحب التهذيب. وأيضاً قال أبو حاتم “‌لا ‌بأس ‌به ‌بليته ‌من ‌كثرة ‌روايته ‌عن ‌على ‌بن ‌يزيد” وقال دحيم “لا بأس به كان قاص الجند ولم ينكر حديثه عن غير علي بن يزيد والأمر من علي بن يزيد” والعجلي “لا بأس به” (تهذيب التهذيب 7/ 124) فالحمل على علي (ضعيف). وأخرج له ابن حبان في صحيحه (1/ 443 رقم 631). وأما قول النسائي “ليس بالقوي” فجرح محتمل وأما قوله مرةً “ضعيف” فجرح مبهم.

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28048-உஸ்மான் பின் ஸுலைமான்-இப்னு அபுல்ஆதிகா என்பவர் பற்றி வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
    இறப்பு ஹிஜ்ரி 207
    வயது: 77
    பலமானவர் என்றும், இப்னு ஸஃத்,பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் சுமாரானவர்-நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • இவர் பலவீனமானவர் என்று அபூமுஸ்ஹிர் கூறியதாக இஸ்ஹாக் பின் ஸய்யார் அவர்கள் கூறியுள்ளார். மேலும் அபூமுஸ்ஹிர் அவர்கள் இவர் கதை சொல்பவர். இவரின் செய்தியில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்கு இவர் தான் காரணம் என்று கூறியதாக மைமூன் பின் அஸ்பஃக் அறிவித்துள்ளார்.
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அவர்களும், இவர் ஒரு பொருட்டே அல்ல கூறியதாக இப்னு முஹ்ரிஸ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவரின் செய்தியை ஏற்கமாட்டார் என்று ஜவ்ஸஜானீ அவர்கள் கூறியுள்ளார்.
  • யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னுல் ஜாரூத், உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    இப்னு ஷாஹின், அபூஅஹ்மத்-ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக்-நடுத்தரமானவர்,நடுத்தரமானவர் - حسن الحديث தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
  • துஹைம்,பிறப்பு ஹிஜ்ரி 170
    இறப்பு ஹிஜ்ரி 245
    வயது: 75
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோர் இவர் அதிகம் அலீ பின் யஸீத் வழியாக அறிவித்திருப்பதால் விமர்சிக்கப்பட்டுள்ளார். அலீ பின் யஸீத் பலவீனமானவர். இவர் அலீ பின் யஸீத் அல்லாதவர்களிடமிருந்து அறிவித்தால் அதை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/163, அஸ்ஸிகாத்-7/202, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-6/280, தஹ்தீபுல் கமால்-19/397, அல்இக்மால்-9/155, அல்காஷிஃப்-3/387, தாரீகுல் இஸ்லாம்-4/147, தஹ்தீபுத் தஹ்தீப்-3/65, தக்ரீபுத் தஹ்தீப்-1/664, தக்ரீபு தக்ரீபுத் தஹ்தீப்-2/385)

இவரை பலவீனமானவர் என்று விமர்சித்தவர்களில் சிலர் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர்கள்; சிலர் இவர் ஊரைச் சேர்ந்தவர்கள். அபூமுஸ்ஹிர், அபூஸுர்ஆ போன்றோர் ஷாம், டமாஸ்கஸ் நாட்டின் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர்கள். துஹைம் பிறப்பு ஹிஜ்ரி 170
இறப்பு ஹிஜ்ரி 245
வயது: 75
போன்றவர்கள் இவர் அலீ பின் யஸீத் அல்லாதவர்களின் வழியாக அறிவிக்கும் செய்திகளை ஏற்கலாம்-முன்கர் அல்ல என்று கூறியிருந்தாலும் அந்த வகைச் செய்திகளிலும் முன்கரான-மறுக்க வேண்டிய செய்திகள் உள்ளன.


இதைப் பற்றி கீழ்க்கண்டவாறு அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறுகிறார்:

سلسلة الأحاديث الضعيفة والموضوعة وأثرها السيئ في الأمة (12/ 950):
ومن مناكير عثمان بن أبي العَاتكة هذا: الحديث الآتي:
‌‌5975 – (إن اَللَّه عز وجل ‌يَجْلِسُ ‌يوم ‌القيامة ‌على ‌القنطرة ‌الوسطى ‌بين ‌الجنة ‌والنار. . . وذكر حَدِيثاً طَوِيلًا) 
منكر. أخرجه العقيلي في “؛ الضعفاء ” (3 / 221) ، وعنه ابن الجوزي (1 / 137) من طريق هشام بن عمار قال: حدثنا صدقة بن خالد قال: حدثنا عثمان ابن أبي العَاتكة أبو حفص عن سليمان بن حبيب المحاربي (الأصل: المحارمي!) عن أبي أمامة مَرْفُوعًا.


இதனடிப்படையில் சில அறிஞர்கள் இவரை ஹஸன் தரம் என்று கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் இவர் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவை என்று முடிவு செய்கின்றனர்.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.