அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்தக் கருத்தில் வந்துள்ள செய்திகளிலேயே இதுதான் மிகவும் சரியானது. இமாம் புகாரி அவர்கள் இதை ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்லாத வேறு நூலில் பிஷ்ர் பின் மர்ஹூம் —> மர்வான் பின் முஆவியா —> அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா-அல்அன்ஸாரி-அல்ஹுனாஈ —> ஸலமா பின் உபைதுல்லாஹ் —> உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். அபூஈஸா-திர்மிதீ இமாம் அவர்களும் இவ்வாறுதான் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பாளர்தொடரில் அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா அவர்களுக்கும் ஸலமா அவர்களுக்கும் இடையில் அப்துர்ரஹ்மான் அவர்களின் தந்தையான அபூஷுமைலா என்பவரை குறிப்பிடவில்லை.
(shuabul-iman-9878: 9878)حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السَّلَمِيُّ , إِمْلَاءً , أَنَا أَبُو بَكْرٍ أَحْمَدُ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ , أَنَا الْعَبَّاسُ بْنُ الْفَضْلِ الْأَسْفَاطِيُّ , نَا سُرَيْجُ بْنُ يُونُسَ , نَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ أَبِي شُمَيْلَةَ , عَنْ أَبِيهِ , عَنْ سَلَمَةَ يَعْنِي ابْنَ عُبَيْدِ اللهِ بْنِ مِحْصَنٍ , عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ , فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا
هَذَا أَصَحُّ مَا رُوِيَ فِي هَذَا الْبَابِ , وَقَدْ ذَكَرَهُ الْبُخَارِيُّ فِي غَيْرِ الْجَامِعِ , عَنْ بِشْرِ بْنِ مَرْحُومٍ , عَنْ مَرْوَانَ بْنِ مُعَاوِيَةَ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي شُمَيْلَةَ الْأَنْصَارِيِّ الْهُنَائِيِّ , عَنْ سَلَمَةَ , عَنْ أَبِيهِ , وَلَمْ يَقُلْ: عَنْ أَبِيهِ , عَنْ سَلَمَةَ , وَكَذَلِكَ قَالَهُ أَبُو عِيسَى
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-9878.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்