பாடம்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தன் கூட்டத்தாரிடையே அச்சமில்லாமலும், தன் உடல் ஆரோக்கியமாகவும் இருந்து, அன்றைய உணவைச் சேர்த்துவிட்டால் அவருக்கு உலகமே கிடைத்து விட்டது போலாகும்.
அறிவிப்பவர்: உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும். மர்வான் பின் முஆவியா என்பவரின் வழியாகவே இந்தச் செய்தியை நாம் அறிகிறோம்.
“ஹீஸத் – حِيزَتْ” என்பதற்கு திரட்டப்பட்டது, சேகரிக்கப்பட்டது என்று பொருள்.
இதே செய்தியை முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ அவர்கள், ஹுமைதீ —> மர்வான் பின் முஆவியா … என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபுத்தர்தா (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளது.
(திர்மிதி: 2346)بَابٌ
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَالِكٍ، وَمَحْمُودُ بْنُ خِدَاشٍ البَغْدَادِيُّ، قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي شُمَيْلَةَ الأَنْصَارِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مِحْصَنٍ الخَطْمِيِّ، عَنْ أَبِيهِ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًى فِي جَسَدِهِ عِنْدَهُ قُوتُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مَرْوَانَ بْنِ مُعَاوِيَةَ. وَحِيزَتْ: جُمِعَتْ ” حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا الحُمَيْدِيُّ قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، نَحْوَهُ وَفِي البَاب عَنْ أَبِي الدَّرْدَاءِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2268.
Tirmidhi-Shamila-2346.
Tirmidhi-Alamiah-2268.
Tirmidhi-JawamiulKalim-2280.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அம்ர் பின் மாலிக்,பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர். 3 . மஹ்மூத் பின் கிதாஷ்-அல்பஃக்தாதீ
4 . மர்வான் பின் முஆவியா
5 . அப்துர்ரஹ்மான் பின் அபூஷுமைலா-அல்அன்ஸாரீ
6 . ஸலமா பின் உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன்-ஸலமா பின் அப்துல்லாஹ்-அல்கத்மீ
7 . உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி)?
أطراف الغرائب والأفراد للدارقطني لمحمد بن طاهر المقدسي (2/ 78)
مسند عُبَيد الله بن محصن
4123- حديث: من أصبح منكم آمنا في سرية … الحديث.
تَفَرَّدَ بهِ عَبد الرحمن بن أبي شميلة، عَن سَلمة بن عُبَيد الله، عَن أَبيه.
1 . இந்தக் கருத்தில் உபைதுல்லாஹ் பின் மிஹ்ஸன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் ஹுமைதீ-443, அல்அதபுல் முஃப்ரத்-300, இப்னு மாஜா-4141, திர்மிதீ-2346, ஷுஅபுல் ஈமான்-9878, …
- முஸ்னத் ஹுமைதீ-443.
مسند الحميدي (1/ 407)
443 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي شُمَيْلَةَ الْأَنْصَارِيُّ، عَنْ سَلَمَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ مُحْصَنٍ الْأَنْصَارِيِّ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمْ آمِنًا فِي سِرْبِهِ مُعَافًا فِي جِسْمِهِ عِنْدَهُ طَعَامُ يَوْمِهِ فَكَأَنَّمَا حِيزَتْ لَهُ الدُّنْيَا»
…
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1828.
3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு ஹிப்பான்-671.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1903,
சமீப விமர்சனங்கள்