தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1002

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

இறந்தவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவது வெறுப்புக்குரியது என்பது குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறந்தவரின் குடும்பத்தினர்கள், அவருக்காக (ஒப்பாரி வைத்து) அழுவதன் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள், இப்னு உமர் (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. உமர் (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இறந்தவருக்காக அழுவதை அறிஞர்களில் சிலர் மக்ரூஹ்-வெறுப்புக்குரிய செயல் என்று கருதுகிறார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, “இறந்தவருக்காக, அவருடைய வீட்டார்கள் அழுவதின் காரணமாக அவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று கூறுகிறார்கள்.

இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள், “இறந்தவர் தனது வாழ்நாளில் (தமக்காக அழக் கூடாது என்று) அவர்களைத் தடுத்திருந்தால், அதனால் அவருக்கு எந்த வேதனையும் இருக்காது” என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்கள்.

(திர்மிதி: 1002)

بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ البُكَاءِ عَلَى المَيِّتِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»

وَفِي البَاب عَنْ ابْنِ عُمَرَ، وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ.: «حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ كَرِهَ قَوْمٌ مِنْ أَهْلِ العِلْمِ البُكَاءَ عَلَى المَيِّتِ، قَالُوا: المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ، وَذَهَبُوا إِلَى هَذَا الحَدِيثِ ” وقَالَ ابْنُ المُبَارَكِ: «أَرْجُو إِنْ كَانَ يَنْهَاهُمْ فِي حَيَاتِهِ أَنْ لَا يَكُونَ عَلَيْهِ مِنْ ذَلِكَ شَيْءٌ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1002.
Tirmidhi-Alamiah-923.
Tirmidhi-JawamiulKalim-921.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


பார்க்க: புகாரி-1286.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.