தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1076

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

ஆறுதல் கூறுவதின் சிறப்பு குறித்து வந்துள்ள மற்றொரு செய்தி.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குழந்தையை இழந்து தவிக்கும் தாயாருக்கு ஆறுதல் கூறுபவர் சொர்க்கத்தில் (மதிப்புக்குரிய) ஆடை அணிவிக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூபர்ஸா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். மேலும் இதன் அறிவிப்பாளர்தொடர் பலமானதல்ல.

(திர்மிதி: 1076)

بَابٌ آخَرُ فِي فَضْلِ التَّعْزِيَةِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ المُؤَدِّبُ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَتْنَا أُمُّ الأَسْوَدِ، عَنْ مُنْيَةَ بِنْتِ عُبَيْدِ بْنِ أَبِي بَرْزَةَ، عَنْ جَدِّهَا أَبِي بَرْزَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ عَزَّى ثَكْلَى كُسِيَ بُرْدًا فِي الجَنَّةِ»

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَلَيْسَ إِسْنَادُهُ بِالقَوِيِّ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1076.
Tirmidhi-Alamiah-996.
Tirmidhi-JawamiulKalim-994.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் ஹாதிம்

3 . யூனுஸ் பின் முஹம்மத்

4 . உம்முல் அஸ்வத்

5 . முன்யா பின்த் உபைத் பின் அபூபர்ஸா

6 . அபூபர்ஸா (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45518-முன்யா பின்த் உபைத் பின் அபூபர்ஸா என்பவர் பற்றிய நிலை அறியப்படவில்லை என்று தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
ஆகியோர் கூறியுள்ளனர்.

மேலும் இதில் வரும் ராவீ-8198-உம்முல் அஸ்வத் அவர்களை இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் பலமானவர் என்று கூறியுள்ளார். இதன்படியே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார். என்றாலும் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்….


 

பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


3 . இந்தக் கருத்தில் அபூபர்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1076 , முஸ்னத் அபீ யஃலா-7439 , ஷுஅபுல் ஈமான்-8842 , தஹ்தீபுல் கமால்-35/311 ,


تهذيب الكمال في أسماء الرجال (35/ 311):
روى لها التِّرْمِذِيّ، وقد وقع لنا حديثها بعلوٍ.
أخبرنا به أَحْمَدُ بْنُ هِبَةِ اللَّهِ بْنِ أَحْمَدَ، قال: أَنْبَأَنَا أَبُو روح عَبْد المعز بْن مُحَمَّد الْهَرَوِيُّ، قال: أَخْبَرَنَا تَمِيمُ بْنُ أَبي سَعِيد الْجُرْجَانِيُّ، قال: أخبرنا أَبُو سَعْدٍ الْكَنْجَرُوذِيُّ، قال: أخبرنا أَبُو عَمْرو بْنُ حَمْدَانَ، قال: أخبرنا أَبُو يَعْلَى الموصلي، قال: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيد الْجَوْهَرِيُّ، قال: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَتْنَا أُمُّ الأَسْوَدِ بِنْتُ يزيد مولاة بَرْزَةَ الأَسلميّ، قَالَتْ: حَدَّثَتْنِي مُنْيَةُ بنت عُبَيد بن أَبي برزة، عَنْ جَدِّهَا أَبِي بَرْزَةَ، قال: قال رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ‌مَنْ ‌عَزَّى ‌الثَّكْلَى ‌كُسِيَ ‌بُرْدًا ‌مِنَ ‌الْجَنَّةِ.

رَوَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ حَاتِمٍ الْمُؤَدِّبِ، عن يونس بن محمد الْمُؤَدِّبِ، فَوَقَعَ لَنَا بَدَلا عَالِيًا، وَقَال: غريب، وليس إسناده بالقوي.


மேலும் பார்க்க: இப்னு மாஜா-1601 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

1 . அபூபக்ர் (ரலி), இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:

عمل اليوم والليلة لابن السني (ص540):
587 – أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ الْقَطَّانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبٍ، ثنا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنِي أَبُو مُحَمَّدٍ، عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ، عَنْ أَبِي رَجَاءٍ الْعُطَارِدِيِّ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، رضي الله عنه، وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ رضي الله عنه، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: ” قَالَ مُوسَى عليه السلام لِرَبِّهِ عز وجل: ‌مَا ‌جَزَاءُ ‌مَنْ ‌عَزَّى ‌الثَّكْلَى؟ قَالَ: أَجْعَلُهُ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي “


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அபூமுஹம்மத் யாரென அறியப்படவில்லை. அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், அபூ யுஹ்மித் என்பது தவறாக இப்படி வந்திருக்கலாம். இது பகிய்யது பின் வலீதின் புனைப்பெயர் என்று குறிப்பிட்டு இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-4049)

என்றாலும் ஜவாமிஉல் கலிம் சாப்ட்வேரில் இவரின் பெயர் ஹகம் பின் உதைபா என்று இடம்பெற்றுள்ளது. இவர் பலமான அறிவிப்பாளர் ஆவார்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.