தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1499

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

குர்பானி (தியாக)ப் பிராணிகளில், (ஜதஉ எனும் ஆறு மாதத்திற்கு மேல்-ஒரு வயதுக்குட்பட்ட) செம்மறி ஆட்டுக்குட்டியைப் பற்றி வந்துள்ளவை.

அபூகிபாஷ் என்பவர் கூறியதாவது:

நான், (ஜதஉ எனும் பருவத்திலுள்ள) செம்மறிஆடுகளை (சந்தையில் விற்பதற்காக) மதீனாவுக்கு ஓட்டிக் கொண்டு வந்தேன். அவை விற்பனையாகாமல் என்னிடமே இருந்தன. நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றி கேட்டேன். அதற்கவர்கள், “ஜதஉ எனும் பருவத்திலுள்ள செம்மறி ஆடுகளை குர்பானி கொடுப்பது நல்லது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(இது மக்களுக்குத் தெரிந்த பிறகு, கொள்ளையடிப்பது போன்று) மக்கள் என்னிடமிருந்து அந்த செம்மறி ஆடுகளை (விரைவாக) வாங்கிச் சென்றனர்.

(திர்மதி: 1499)

بَابُ مَا جَاءَ فِي الجَذَعِ مِنَ الضَّأْنِ فِي الأَضَاحِيِّ

حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ وَاقِدٍ، عَنْ كِدَامِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي كِبَاشٍ قَالَ:

جَلَبْتُ غَنَمًا جُذْعَانًا إِلَى المَدِينَةِ فَكَسَدَتْ عَلَيَّ، فَلَقِيتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نِعْمَ الْأُضْحِيَّةُ الجَذَعُ مِنَ الضَّأْنِ»، قَالَ: فَانْتَهَبَهُ النَّاسُ

وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ، وَأُمِّ بِلَالِ ابْنَةِ هِلَالٍ، عَنْ أَبِيهَا، وَجَابِرٍ، وَعُقْبَةَ بْنِ عَامِرٍ، وَرَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ. وَقَدْ رُوِيَ هَذَا عَنْ أَبِي هُرَيْرَةَ مَوْقُوفًا وَعُثْمَانُ بْنُ وَاقِدٍ هُوَ: ابْنُ مُحَمَّدِ بْنِ زِيَادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الخَطَّابِ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ، أَنَّ الجَذَعَ مِنَ الضَّأْنِ يُجْزِئُ فِي الأُضْحِيَّةِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1499.
Tirmidhi-Alamiah-1419.
Tirmidhi-JawamiulKalim-1415.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . யூஸுஃப் பின் ஈஸா

3 . வகீஃ பின் ஜர்ராஹ்

4 . உஸ்மான் பின் வாகித்

5 . கிதாம் பின் அப்துர்ரஹ்மான்

6 . அபூகிபாஷ்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34556-கிதாம் பின் அப்துர்ரஹ்மான் என்பவரும், ராவீ-2498-அபூகிபாஷ் என்பவரும் அறியப்படாதவர்கள் என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்…

(நூல்கள்: …)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


4 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-, அஹ்மத்-, திர்மிதீ-1499 , ஹாகிம்-, குப்ரா பைஹகீ-, தஹ்தீபுல் கமால்-,


மேலும் பார்க்க: நஸாயீ-4382 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.