தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1521

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திடலில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தமது உரையை முடித்தவுடன் மிம்பரிலிருந்து இறங்கினார்கள்.

ஒரு ஆடு கொண்டு வரப்பட்டது. அதனை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கையினால் அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே மிகப் பெரியவன்); இது என் சார்பாகவும், என்னுடைய உம்மத்தில் உள்ஹிய்யா கொடுக்காதவர்கள் சார்பாகவும் ஆகும்” எனக் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடர் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

ஒருவர் (பிராணியை) அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும் என்பது நபித்தோழர்கள், இன்னபிற கல்வியாளர்களின் (கருத்தும்) செயலுமாகும். இப்னுல் முபாரக் அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(இதன் அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

(திர்மிதி: 1521)

بَابٌ

حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ المُطَّلِبِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ:

شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَضْحَى بِالمُصَلَّى، فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ، فَأُتِيَ بِكَبْشٍ، فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَقَالَ: «بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ: أَنْ يَقُولَ الرَّجُلُ إِذَا ذَبَحَ: بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ، وَهُوَ قَوْلُ ابْنِ المُبَارَكِ وَالمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَنْطَبٍ يُقَالُ إِنَّهُ لَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1441.
Tirmidhi-Shamila-1521.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1439.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்முத்தலிப் என்பவர் யார்?

அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் இவரின் பெயர் ராவீ-44647-அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் பின் ஹாரிஸ் பின் உபைத் பின் உமர் பின் மக்ஸூம் என்று கூறப்பட்டுள்ளது. இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது என திர்மிதீ இமாம் அவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், இவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளார்; என்றாலும் இவரை ஆதாரமாக ஏற்கப்படாது. ஏனெனில் இவர் அதிகம் முர்ஸலான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும், இவரின் அதிகமான மாணவர்கள் தத்லீஸ் செய்பவர்கள் என்றும் கூறியுள்ளார். (அதாவது நபி (ஸல்) அவர்களிடம் கேட்காதவர் நபித்தோழர்களை விட்டுவிட்டு நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதும் முர்ஸல் ஆகும்; நபித்தோழர்களிடம் நேரடியாக கேட்காதவர்கள் அறிவிக்கும் முன்கதிஃயான செய்திகளுக்கும் முர்ஸல் என்று கூறப்படும்)
  • அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரின் அதிகமான செய்திகள் முர்ஸலானவை என்றும், மேலும் இவர் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி), அனஸ் (ரலி), ஸலமா பின் அக்வஃ (ரலி), இவர்களின் காலத்திற்கு நெருக்கமான சில குறிப்பிட்ட நபித்தோழர்களைத் தவிர மற்ற நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார். (இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் விசயத்தில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்களின் கருத்து இருவகையாக வந்துள்ளது. இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்று கூறியதாகவும், கேட்டிருக்கலாம் என்று கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது)
  • அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
    இறப்பு ஹிஜ்ரி 264
    வயது: 64
    அவர்கள் இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் அதிகம் முர்ஸலாக அறிவிப்பவர் என்றும், அதிகம் தத்லீஸ் செய்பவர் என்றும் தனது தக்ரீபில் கூறியுள்ளார்.
  • தக்ரீபை ஆய்வு செய்தவர்கள், இவர் (தற்போது வழக்கில் கூறப்படும்) தத்லீஸ் செய்பவர் என்று இதற்கு முன் யாரும் கூறவில்லை. முர்ஸலாக அறிவிப்பவரை தத்லீஸ் செய்பவர் என்று கூறும் வழமையின்படி இவ்வாறு கூறியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
  • இவர் பலமானவர் என்று யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    அபூஸுர்ஆ அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 200
    இறப்பு ஹிஜ்ரி 264
    வயது: 64
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    ஆகியோர் கூறியுள்ளனர். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களும் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/359, தஹ்தீபுல் கமால்-28/81, தத்ஹீபுத் தஹ்தீப்-6755, தஹ்தீபுத் தஹ்தீப்-4/93 , தக்ரீபுத் தஹ்தீப்-1/949 , துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-1/502 , …)


المراسيل لابن أبي حاتم (ص: 210)

785 – سَمِعْتُ أَبِي يَقُولُ الْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللَّهِ بْنُ حَنْطَبٍ عَامَّةُ حَدِيثِهِ مَرَاسِيلُ لَمْ يُدْرِكْ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم إِلَّا سَهْلَ بْنَ سَعْدٍ وَأَنَسًا وَسَلَمَةَ بْنَ الْأَكْوَعِ وَمَنْ كَانَ قَرِيبًا مِنْهُمْ وَلَمْ يَسْمَعْ مِنْ جَابِرٍ وَلَا مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ وَلَا مِنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ

«الجرح والتعديل لابن أبي حاتم» (8/ 359):

«1643 – ‌مطلب ‌بن ‌عبد ‌الله ‌بن ‌حنطب (1) القرشى المخزومى أبو الحكم مدينى، وقال بعضهم عبد الله بن المطلب روى عن عمر رضي الله عنه روى عنه [محمد بن – 2] عباد بن جعفر سمعت أبي يقول ذلك.
1644 – مطلب بن عبد الله بن المطلب بن عبد الله بن حنطب روى عن
ابن عباس مرسل (3) وابن عمر مرسل، وابى موسى مرسل، وام سلمة مرسل، وعائشة، مرسل [ولم يدركها – 4] وابى قتادة مرسل [وابى هريرة، مرسل – 4] وابى رافع، مرسل (1025 ك) وجابر يشبه ان يكون ادركه، [عامة حديثه مراسيل غيرانى رأيت حديثا يقول: حدثنى خالي أبو سلمة – 4] روى عنه عمرو بن أبي عمرو والاوزاعي وكثير بن زيد ومسلم بن الوليد بن رباح وعبد الله بن عبد الرحمن بن يعلى بن كعب الثقفى وابناه الحكم وعبد العزيز سمعت أبي يقول ذلك، نا عبد الرحمن قال سئل أبو زرعة عن المطلب بن عبد الله ابن حنطب فقال: مديني ثقة: نا عبد الرحمن قال وسئل أبو زرعة هل سمع المطلب بن عبد الله [بن حنطب – 4] من عائشة؟ فقال: نرجو أن يكون سمع منها.

«إرواء الغليل في تخريج أحاديث منار السبيل» (4/ 350):

فإن رجاله كلهم ثقات ، وإنما يخشى من تدليس المطلب وقد عنعنة فى رواية الترمذى وغيره ، فلعله استغربه من أجلها ، لكن قد صرح بالتحديث فى رواية الطحاوى والحاكم وغيرهما ، فزالت بذلك شبهة تدليسه ، ثم رأيت الترمذى قد بين وجه الاستغراب بعد سطرين مما سبق نقله عنه فقال: ” والمطلب بن عبد الله بن حنطب يقال إنه لم يسمع من جابر
«قلت: ورواية الطحاوى: ترد هذا القيل. وقد قال ابن أبى حاتم فى روايته عن جابر: ” يشبه أنه أدركه “. وهذا أصح مما رواه عنه ابنه فى ” المراسيل “: ” لم يسمع من جابر»

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், ஷரஹ் மஆனில் ஆஸார்-6229 , ஹாகிம்-7553 இல் இடம்பெற்றுள்ள செய்திகளில் முத்தலிப் அவர்கள், ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்துள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
நூலை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இதைத் தவறு என்று கூறவில்லை.

திர்மிதீ இமாம் அவர்கள், இவர் தத்லீஸ் செய்பவர் என்பதால் அல்லது இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால் இந்தச் செய்தியை ஃகரீப்-அரிதான செய்தி என்று கூறியுள்ளார். ஆனால் ஷரஹ் மஆனில் ஆஸார்-6229 இல் இடம்பெற்றுள்ள செய்தியின்படி தத்லீஸ் என்ற குறை நீங்கிவிட்டது.

இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
இறப்பு ஹிஜ்ரி 327
வயது: 87
அவர்கள், இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்று தனது மராஸீல் என்ற நூலில் கூறியுள்ள தகவலை விட,  இவர் ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்கலாம் என்று தனது அல்ஜர்ஹு வத்தஃதீல் நூலில் கூறியுள்ள தகவலே மிகச் சரியாகத் தெரிகிறது என்று குறிப்பிட்டுவிட்டு, இந்தச் செய்தியின் 2 வது பகுதியின் கருத்தில் வரும் வேறு சில செய்திகளையும் குறிப்பிட்டுவிட்டு மேற்கண்ட செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்மராஸீல்-785, பக்கம்: 210, அல்ஜர்ஹு வத்தஃதீல்-1643, 1644, 8/359, இர்வாஉல் ஃகலீல்-1138)


1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

மிம்பர் பற்றிய குறிப்பு உள்ள செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-14895 , அபூதாவூத்-2810 , திர்மிதீ-1521 , தாரகுத்னீ-4760 , குப்ரா பைஹகீ-,

மிம்பர் பற்றிய குறிப்பு இல்லாத செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-14837 , 14893 , ஷரஹ் மஆனில் ஆஸார்-6229 , ஹாகிம்-7553 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு குஸைமா-1445 , ..



ஆய்வுக்காக: தனிக்குறிப்பு

இவர் எந்தெந்த நபித்தோழர்களிடம் ஹதீஸ்களைக் கேட்டுள்ளார் என்பது பற்றி அறிஞர்களின் கருத்து.

1 . அபூஹாதிம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் கருத்து:

1 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)-(இறப்பு ஹிஜ்ரீ-88)

2 . அனஸ் (ரலி)-(இறப்பு ஹிஜ்ரீ-91-93)

3 . ஸலமா பின் அக்வஃ (ரலி)-(இறப்பு ஹிஜ்ரீ-74)

4 . இவர்களின் காலத்திற்கு நெருக்கமான) சில குறிப்பிட்ட நபித்தோழர்கள்…

5 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)-(இறப்பு ஹிஜ்ரீ-73/78)


2 . அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
இறப்பு ஹிஜ்ரி 264
வயது: 64
அவர்களின் கருத்து:

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் கேட்டிருக்கலாம். (இறப்பு ஹிஜ்ரீ-57/58)

(கமால்-28/81, தஹ்-4/93, துஹ்-1/502)


நபித்தோழர்களிடம் கேட்டதை மறுத்தவர்கள்:

1 . (திர்மிதீ —> புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் கருத்து)

அல்முத்தலிப், நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டாரா என்பதை நான் அறியவில்லை. நபி (ஸல்) அவர்களின் உரையைக் கேட்டவர் எனக்கு அறிவித்தார் என்று அவர் அறிவிக்கும் வாசகம் தான் எனக்கு தெரியும்.

2 . அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அத்தாரிமீ அவர்களின் கருத்து-திர்மிதீ இமாம் அவர்களின் ஆசிரியர்; ஸுனன் தாரிமீ நூலின் ஆசிரியர்.

அல்முத்தலிப், நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டாரா என்பதை நான் அறியவில்லை.

3 . இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்களின் கருத்து

அல்முத்தலிப், அனஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளார் என்ற கருத்தை மறுத்துள்ளார் என்று திர்மிதீ —> தாரிமீ.

(முஃஜமுல் முதல்லிஸீன்-157)…

4 . இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
இவர் அபூமூஸா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்று கூறியுள்ளார்…

5 . அபூஹாதிம்

இவர் உபாதா, அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
ஆகியோரிடம் கேட்கவில்லை.

(இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) கேட்டாரா கேட்கவில்லையா என்பது தெரியாது / கேட்கவில்லை என்ற கருத்து)

நபித்தோழர்களிடமிருந்தும் அறிவிக்கிறார், தாபியீன்களிடமிருந்தும் அறிவிக்கிறார் என்பதால் அபூஹாதிமின் சந்தேகம்…இக்-11/233.

ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) அவர்களிடம் கேட்கவில்லை. (இறப்பு ஹிஜ்ரீ-57/58)

6 . இப்னு அபூஹாதிம்-(ஜாபிர் (ரலி) தவிர) / இப்னு அப்பாஸ் (ரலி) , அபூகதாதா (ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி), உம்மு ஸலமா (ரலி), அபூராஃபிஉ (ரலி), அபூமூஸா (ரலி) ..அல்ஜர்ஹு-8/359.

7 . அபூஸுர்ஆ / அபூபக்ர் (ரலி), ஸஃத்.. (ரலி),

8 . இப்னு அஸாகிர் / இவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) அவர்களிடம் கேட்கவில்லை.

…..உம்மு ஹானீ (ரலி) (இப்னு ஹிப்பான்-1189)


1 . புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் கருத்து:

முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் அல்குரஷீ அல்லது அப்துல்லாஹ் பின் முத்தலிப்.

«التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل» (8/ 7):

«‌‌1942- ‌مُطَّلب ‌بْن ‌عَبد ‌اللهِ ‌بْن ‌حَنطَب، القُرَشِيُّ. وقَالَ بعضهم: عَبد اللهِ بْن المُطَّلب. سَمِعَ عُمَر. رَوَى عَنه: مُحَمد بْنُ عَبّاد بْنِ جَعفر. يُعَدُّ فِي أهل الحِجاز. قَالَ إِسحاق: حدَّثنا يَحيى بْن بُكَير.هو أَبو الحَكَم»

இவர் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டுள்ளார். இவரிடமிருந்து முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் அறிவித்துள்ளார். இவர் ஹிஜாஸ் பகுதியைச் சேர்ந்தவர். இவரை அபுல்ஹகம் என்று யஹ்யா பின் புகைர் கூறியதாக இஸ்ஹாக் அவர்கள் கூறினார்.

(நூல்: தாரீகுல் கபீர்-1942, 8/7)

(புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் கருத்து

7 . உமர் (ரலி) அவர்களிடம் கேட்டுள்ளார்…கதீப் பஃக்தாதீ அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்கவில்லை. இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)-ஹிஜ்ரீ-73, அவர்களிடம் கேட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

(தா-கபீர்-/ தஹ்-4/93, இக்மால்-11/233)

(கதீப் பஃக்தாதீ அவர்களின் விமர்சனம்-1/128 )…)



இதுவரை கூறப்பட்ட தகவல்களிலிருந்து பெரும்பாலான அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் இவரை சிறிய வயது தாபிஈ என்று கூறியுள்ளனர்.

மேலும் இவர், நபித்தோழர்களிடம் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? இல்லையா? என்பதில் அறிஞர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளதையும் கூறியுள்ளனர்.

1 . இப்னு அப்பாஸ் (ரலி)-இறப்பு ஹிஜ்ரீ-63-73, இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி)-இறப்பு ஹிஜ்ரீ-72-75 ஆகியோரிடம் கேட்கவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

2 . ஜாபிர் (ரலி)-இறப்பு ஹிஜ்ரீ-73-78 அவர்களிடம் கேட்ட விசயத்தில் சந்தேகம்.

3 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)-இறப்பு ஹிஜ்ரீ-88-96 அவர்களிடம் கேட்டுள்ளார் என்று சிலர் கூறுகின்றனர்.

4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) (இறப்பு ஹிஜ்ரீ 57 அல்லது 58) அவர்களிடம் கேட்கவில்லை என்றும், கேட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.

எனவே இந்த அனைத்துக் கருத்துக்களையும் உள்ளடக்கியவாறு முடிவு செய்வது கடினம் ஆகும்.

இவரைப் பற்றிய தேடலில் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் கிடைத்த பெயர்களைப் பற்றிய விவரம்.

1 . அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்.

2 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்.

3 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப்.

4 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்.

முத்தலிபின் இரு மகன்களில் அப்துல்அஸீஸ் என்பவர் பற்றி குறிப்பிடும்போது 2, 3, 4 இல் உள்ள 3 வகை பெயர்களையும், ஹகம் பற்றி குறிப்பிடும்போது 2, 3 இல் உள்ள 2 வகை பெயர்களையும் கூறப்பட்டுள்ளது.



முத்தலிப் என்ற பெயருடன் ஹன்தப் என்ற பெயரை இணைத்து கூறப்படுவோர் பலர் உள்ளனர்.

1 . அல்முத்தலிப் பின் ஹன்த்தப். இவர் ஹன்த்தப் என்பவரின் மகன் என்று விளக்கத் தேவையில்லை.

நம்பர் 1 . அல்முத்தலிப் பின் ஹன்த்தப்.

நம்பர் 2 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்…

நம்பர் 3 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப்.

நம்பர் 4 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்.

5 . (அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்-தக்-1/547)

6 . அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் பின் ஹாரிஸ்..தக்-1/501)


அல்முத்தலிப் என்பவரின் இரு மகன்களை குறிப்பிடும் போதும் இந்தக் குழப்பம் உள்ளது.

  • ஹகம்.

1 . ஹகம் பின் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்

(லிஸானுல் மீஸான்-2704, 3/255)

இவரைப் பற்றி அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் மேற்கண்டவாறும் கூறப்பட்டுள்ளது.

2 . ஹகம் பின் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப்-இப்னு ஹன்த்தப் என்றும் கூறப்பட்டுள்ளது.

(தாரீகுல் இஸ்லாம்-73, 3/398)

  • அப்துல்அஸீஸ்.

1 . அப்துல்அஸீஸ் பின் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப்.

الثقات لابن حبان ط- اخرى (ص: 2)

عبد العزيز بن المطلب بن عبد الله بن حنطب المخزومي المدني

يروي عن عبد الله بن أبي بكر بن عمرو بن حزم، روى عنه ابن أبي أويس وأهل المدينة.

(அஸ்ஸிகாத், பக்:2) 

2 . அப்துல்அஸீஸ் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப் பின் ஹாரிஸ்.

الطبقات الكبرى – متمم التابعين – مخرجا (ص: 460)

عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْمُطَّلِبِ بْنِ حَنْطَبِ بْنِ الْحَارِثِ

(தபகாதுல் குப்ரா-பக்: 460)

3 . அப்துல்அஸீஸ் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் பின் ஹாரிஸ்…

تهذيب الكمال في أسماء الرجال (18/ 206)
3475 – خت م ت ق: عبد العزيز بن المطلب بْن عَبد الله بْن حنطب (4) ، وقيل: عبد العزيز بن المطلب بْن عَبد الله بْن المطلب بن حنطب، وقيل: عبد العزيز بْن المطلب بْن عَبد اللَّه بْن المطلب بْن عَبد اللَّهِ بن حنطب بن الْحَارِث بن عُبَيد بن عُمَر بن مخزوم القرشي المخزومي المدني، قاضي مكة، وقيل: قاضي المدينة. …

(தஹ்தீபுல் கமால்-3475, 18/206)

இதில் மூன்று வகையான பெயர்களையும் கூறப்பட்டுள்ளது.



الاسم: المطلب بن عبد الله بن حنطب، ويقال: المطلب بن عبد الله بن المطلب بن حنطب بن الحارث بن عبيد بن عمر بن مخزوم: وقيل: المطلب بن عبد الله بن المطلب بن عبد الله بن حنطب، وقيل: إنهما اثنان

الكنية: أبو الحكم

النسب: القرشي، المخزومي، المدني

علاقات الراوي: مولاه: عمرو بن أبي عمرو، ختن سعيد بن المسيب على ابنته، وقيل: ختنه المطلب بن السائب بن أبي وداعة، أمه: أم أبان بنت الحكم بن أبي العاص، وقد قيل: إن أمه أم سلمة بنت الحكم بن أبي العاص بن أمية، خاله: أبو سلمة، من أولاده: الحكم، سليمان، عبد العزيز، الفضل، الحارث، علي

تاريخ الوفاة: حدود ١٢٠ هـ

طبقة رواة التقريب: الرابعة

الرتبة عند ابن حجر: صدوق كثير التدليس والإرسال

الرتبة عند الذهبي: قال أبو حاتم: لم يدرك عائشة، وقال أبو زرعة: ثقة، أرجو أن يكون سمع منها

மேற்கண்ட செய்தியில் வரும் அல்முத்தலிப் என்பவர் நபித்தோழரா? அல்லது சிறிய வயது தாபிஈயா?

அறிவிப்பாளர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள சில ஹதீஸ்கலை அறிஞர்கள் மக்கா, மதீனாவைச் சேர்ந்த சிலரைப் பற்றி முழுமையாக அறியவில்லை. இராக், ஷாம் வாசிகளைப் பற்றி நன்றாக அறிந்துள்ளனர். எனவே தான் சில அறிவிப்பாளர்கள் விசயத்தில் இவ்வாறு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது; அதில் அல்முத்தலிப் அவர்களின் விசயத்தில் அறிஞர்களின் கருத்து குளறுபடியாக உள்ளது என்று அஹ்மத்-ஷாகிர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அல்முத்தலிப் என்ற பெயரில் பலர் இருந்துள்ளனர். அல்முத்தலிப் பின் ஹன்த்தப் என்ற பெயரில் ஒரு நபித்தோழர் இருந்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை…ஆதாரம்…

ஆனால் அறிவிப்பாளர் பற்றிய நூல்களில் இந்தப் பெயர் இடம்பெற்றவரின் குறிப்பில் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் என்றும், அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப் என்றும் இடம்பெற்றுள்ளது.

எனவே அல்முத்தலிப் என்பவரிடமிருந்து அறிவிக்கும் அம்ர் பின் அபூஅம்ர் அவர்கள் யாரிடமிருந்து அறிவித்துள்ளார்?

1 . அல்முத்தலிப் பின் ஹன்த்தப் அவர்களிடமிருந்தா? அல்லது

2 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் அவர்களிடமிருந்தா? அல்லது

3 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப் அவர்களிடமிருந்தா?

அஹ்மத்-ஷாகிர் அவர்களின் கருத்து:

அம்ர் பின் அபூஅம்ர் தனது ஆசிரியராக குறிப்பிடும் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் என்ற பெயருடையவர்கள் பலர் இருந்துள்ளனர்.

…………………………………………………………………………………………………………………

ஹன்த்தப் என்பவரின் சந்ததிகளில் பலருக்கு இந்தப் பெயர் கூறப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட தகவல்கள் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

«الرسالة للشافعي» (ص87):
«289 – أخبرنا عبد العزيز عن عمرو بن أبي عمرو مَوْلى المُطَّلِب عن المطلب بن حَنْطَبٍ أنَّ رسول الله قال ” مَا تَرَكْتُ شَيْئًا مِمَّا أمَرَكُمْ اللهُ بِهِ إِلاَّ وَقَدْ أمَرْتُكُمْ بِهِ وَلَا تَرَكْتُ شَيْئًا مِمَّا نَهَاكُمْ الله عنه إلا وقد نهيتكم عنه»

«الرسالة للشافعي» (ص93):
«306 – أخبرنا عبد العزيز عن عمرو بن أبي عمرو عن المطلب قال قال رسول الله ” إنَّ الرُّوحَ الأمِيَن قَدْ ألْقَى فِي رُوعِي أنَّهُ لَنْ تَمُوتَ نَفْسٌ حَتَّى تستوفي رزقها فأجملوا في الطلب [*]»

1 . அல்முத்தலிப் பின் ஹன்த்தப்- நபித்தோழர் – முழுப்பெயர்-அல்முத்தலிப் பின் ஹன்த்தப் பின் ஹாரிஸ் பின் உபைத் பின் உமர் பின் மக்ஸூம்.

அம்ர் பின் அபூஅம்ர் அவர்களின் ஆசிரியராக கூறப்படும் அல்முத்தலிப் பின் ஹன்த்தப் என்பவர் நபித்தோழர் ஆவார். இவர் அனஸ் (ரலி), ஜாபிர் (ரலி) போன்றோரின் வயதுக்கு நெருக்கமானவர்.

முஸ்னதுஷ் ஷாஃபிஈ

அபுல்அப்பாஸ் அல்அஸம் அவர்கள், ஷாஃபிஈ இமாம் அவர்கள் அறிவித்த ஹதீஸ்களை முஸ்னதுஷ் ஷாஃபிஈ என்ற பெயரில் தனி நூலாக தொகுத்துள்ளார்.

அதில் அல்முத்தலிப் பின் ஹன்த்தப் அவர்கள் இடம்பெறும் செய்திகளின் அறிவிப்பாளர்தொடர்கள்:

1 . அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் —> அம்ர் பின் அபூஅம்ர் (இவர் அல்முத்தலிபின் அடிமை) —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> நபி (ஸல்)

«مسند الشافعي – ترتيب سنجر» (4/ 64):

1798 – أَخْبَرَنَا الشَّافِعِيُّ رضي الله عنه، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو مَوْلَى الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «مَا تَرَكْتُ شَيْئًا مِمَّا أَمَرَكُمُ اللَّهُ بِهِ إِلا وَقَدْ أَمَرْتُكُمْ بِهِ، وَلا تَرَكْتُ شَيْئًا مِمَّا نَهَاكُمُ اللَّهُ عَنْهُ إِلا وَقَدْ نَهَيْتُكُمْ عَنْهُ، وَإِنَّ الرُّوحَ الأَمِينَ قَدْ نَفَثَ فِي رُوعِي أَنَّهُ لَيْسَ تَمُوتُ نَفْسٌ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا فَأَجْمِلُوا فِي الطَّلَبِ» أَخْرَجَهُ مِنْ كِتَابِ الرِّسَالَةِ

இந்த பிரதியில் அம்ர் மட்டும் கூறப்பட்டு முத்தலிப் பின் ஹன்த்தப் விடப்பட்டுள்ளார். ஷாஃபிஈ அவர்கள் தனது ரிஸாலாவில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் இந்தச் செய்தி ஷாஃபிஈ இமாம் அவர்களின் ரிஸாலாவில் 2 செய்திகளாக வந்துள்ளது. ஒரே அறிவிப்பாளர்தொடர் என்பதால் அபுல்அப்பாஸ் ஒரே செய்தியாகக் கூறியுள்ளார்.

«الرسالة للشافعي» (ص87):

«289 – أخبرنا عبد العزيز عن عمرو بن أبي عمرو مَوْلى المُطَّلِب عن المطلب بن حَنْطَبٍ أنَّ رسول الله قال ” مَا تَرَكْتُ شَيْئًا مِمَّا أمَرَكُمْ اللهُ بِهِ إِلاَّ وَقَدْ أمَرْتُكُمْ بِهِ وَلَا تَرَكْتُ شَيْئًا مِمَّا نَهَاكُمْ الله عنه إلا وقد نهيتكم عنه»

«الرسالة للشافعي» (ص93):

«306 – أخبرنا عبد العزيز عن عمرو بن أبي عمرو عن المطلب قال قال رسول الله ” إنَّ الرُّوحَ الأمِيَن قَدْ ألْقَى فِي رُوعِي أنَّهُ لَنْ تَمُوتَ نَفْسٌ حَتَّى تستوفي رزقها فأجملوا في الطلب [*]»

இப்ராஹீம் பின் முஹம்மத் (பின் ஸம்ஆன்) என்பவரின் அறிவிப்புகள்:

2 . இப்ராஹீம் பின் முஹம்மத் —> காலித் பின் ரபாஹ் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> நபி (ஸல்)

«مسند الشافعي – ترتيب سنجر» (2/ 28):

«447 – أَخْبَرَنَا الشَّافِعِيُّ رضي الله عنه، قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ رَبَاحٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ ‌حَنْطَبٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي الْجُمُعَةَ إِذَا فَاءَ الْفَيْءُ قَدْرَ ذِرَاعٍ أَوْ نَحْوَهُ»

3 . இப்ராஹீம் பின் முஹம்மத் —> காலித் பின் ரபாஹ் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> நபி (ஸல்)

«مسند الشافعي – ترتيب سنجر» (2/ 42):
«474 – أَخْبَرَنَا الشَّافِعِيُّ رضي الله عنه، قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ رَبَاحٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ ‌حَنْطَبٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَغْدُو يَوْمَ الْعِيدِ إِلَى الْمُصَلَّى مِنَ الطَّرِيقِ الأَعْظَمِ، فَإِذَا رَجَعَ رَجَعَ مِنَ الطَّرِيقِ الأُخْرَى عَلَى دَارِ عَمَّارِ بْنِ يَاسِرٍ»

முஸ்னதுஷ் ஷாஃபியின் இந்த ஒரு செய்தியில் மட்டும் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் என்று இடம்பெற்றுள்ளது. எனவே இது தவறாக இருக்கலாம்.

4 . இப்ராஹீம் பின் முஹம்மத் —> காலித் பின் ரபாஹ் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> நபி (ஸல்)

«مسند الشافعي – ترتيب سنجر» (2/ 62):

518 – أَخْبَرَنَا الشَّافِعِيُّ رضي الله عنه، قَالَ: أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي خَالِدُ بْنُ رَبَاحٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ ‌حَنْطَبٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ عِنْدَ الْمَطَرِ: «اللَّهُمَّ سُقْيَا رَحْمَةٍ، وَلا سُقْيَا عَذَابٍ وَلا بَلاءٍ وَلا هَدْمٍ وَلا غَرَقٍ، اللَّهُمَّ عَلَى الظِّرَابِ وَمَنَابِتِ الشَّجَرِ، اللَّهُمَّ حَوَالَيْنَا وَلا عَلَيْنَا»

5 . (நான் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்காதவர் அறிவித்தார் என ஷாஃபிஈ கூறினால் அவர் இப்ராஹீம் ஆவார்) இப்ராஹீம் பின் முஹம்மத் —> காலித் பின் ரபாஹ் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> நபி (ஸல்)

«مسند الشافعي – ترتيب سنجر» (2/ 63):

«520 – أَخْبَرَنَا مَنْ لا أَتَّهِمُ، قَالَ: أَخْبَرَنِي خَالِدُ بْنُ رَبَاحٍ، عَنِ الْمُطَّلِبِ بْنِ ‌حَنْطَبٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا بَرَقَتِ السَّمَاءُ أَوْ رَعَدَتْ، عُرِفَ ذَلِكَ فِي وَجْهِهِ، فَإِذَا أُمْطِرَتْ سُرِّيَ عَنْهُ»

6 . இப்ராஹீம் பின் முஹம்மத் —> அம்ர் பின் அபூஅம்ர் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> நபி (ஸல்)

«مسند الشافعي – ترتيب سنجر» (2/ 65):

524 – أَخْبَرَنَا مَنْ لا أَتَّهِمُ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ بْنِ ‌حَنْطَبٍ: أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «مَا مِنْ سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلا نَهَارٍ إِلا وَالسَّمَاءُ يُمْطَرُ فِيهَا يُصَرِّفُهُ اللَّهُ حَيْثُ يَشَاءُ»

7 . இப்ராஹீம் பின் முஹம்மத் —> அம்ர் பின் அபூஅம்ர் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> ஜாபிர் (ரலி) —> நபி (ஸல்)

«مسند الشافعي» (ص186):

أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ بْنِ حَنْطَبٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «لَحْمُ الصَّيْدِ لَكُمْ فِي الْإِحْرَامِ حَلَالٌ مَا لَمْ تَصِيدُوهْ أَوْ يُصَادَ لَكُمْ»

இவற்றில் வரும் இப்ராஹீம் பின் முஹம்மத் பின் ஸம்ஆன்-(இப்ராஹீம் பின் அபூயஹ்யா அல்அஸ்லமீ) என்பவர் பற்றி மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்கள் இவர் கத்ரிய்யா, முஃதஸிலா, ஜஹ்மிய்யா கொள்கையுடையவர் என்பதால் இவரை மார்க்க விசயத்தில் நம்பமுடியாது என்று விமர்சித்துள்ளார். மேலும் சிலர் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும்; முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/83)

8 . இப்னு உயைனா —> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> உமர் (ரலி) 

«مسند الشافعي – ترتيب سنجر» (3/ 114):

«1281 – أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، أَنَّهُ سَمِعَ مُحَمَّدَ بْنَ عَبَّادِ بْنِ جَعْفَرٍ يَقُولُ: أَخْبَرَنِي الْمُطَّلِبُ بْنُ ‌حَنْطَبٍ: أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ أَلْبَتَّةَ، ثُمَّ أَتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: مَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟ قَالَ: قُلْتُ: قَدْ فَعَلْتُ، قَالَ: فَقَرَأَ: {وَلَوْ أَنَّهُمْ فَعَلُوا مَا يُوعَظُونَ بِهِ لَكَانَ خَيْرًا لَهُمْ وَأَشَدَّ تَثْبِيتًا} [النساء: 66] مَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟ قَالَ: قُلْتُ: قَدْ فَعَلْتُ. قَالَ: أَمْسِكْ عَلَيْكَ امْرَأَتَكَ فَإِنَّ الْوَاحِدَةَ تَبُتُّ»

«الأم» للإمام الشافعي (5/ 127 ط الفكر):

«قلت أخبرنا سفيان بن عيينة عن عمرو أنه سمع محمد بن عباد بن جعفر يقول أخبرني المطلب بن حنطب ‌أنه ‌طلق ‌امرأته ‌ألبتة ثم أتى عمر بن الخطاب – رضي الله تعالى عنه – فذكر ذلك له فقال ما حملك على ذلك؟ قال قد فعلته قال فقرأ {ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا} ما حملك على ذلك؟ قلت قد فعلته قال أمسك عليك امرأتك فإن الواحدة لا تبت»

முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஃபர் (ரஹ்) அவர்கள், தனக்கு முத்தலிப் பின் ஹன்த்தப்… அவர்கள் அறிவித்ததாக கூறியதாவது:

முத்தலிப் பின் ஹன்த்தப் அவர்கள், தனது மனைவியை ஒரேயடியாக தலாக் கூறிவிட்டார். பின்பு அவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து (கவலைப்பட்டு) இதைக் கூறினார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், என்ன காரணத்தினால் இவ்வாறு செய்தீர்? என்று கேட்டார். (இப்போது என்ன செய்வது) அதை செய்துவிட்டேன் என அவர் பதிலளித்தார். உமர் (ரலி) அவர்கள், “தமக்கு அறிவுரை கூறப்பட்டவாறு அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாகவும், அதிக உறுதியைக் காட்டுவதாகவும் இருந்திருக்கும்” (அல்குர்ஆன் 4:66) எனும் வசனத்தை ஓதிக்காட்டி மீண்டும் அதற்கான காரணத்தைக் கேட்டார். (இப்போது என்ன செய்வது) அதை செய்துவிட்டேன் என்றே அவர் பதிலளித்தார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீ உனது மனைவியை உன்னிடமே வைத்துக் கொள்! ஒரேயடியாக ஒரு தலாக் கூறினாலும் அது மீட்டிக்கொள்ள முடிந்த தலாக் தான்” என்று கூறினார்.

(நூல்: முஸ்னதுஷ் ஷாஃபிஈ-1281, அல்உம்மு-5/127)

(மேற்கண்ட செய்தியில்-لا تَبُت – (பொருள்: மீட்டிக் கொள்ளுதல் இல்லை) என்ற வார்த்தையில் “லா” என்ற எழுத்து இல்லாமல் வேறு சில பிரதிகளில் வந்துள்ளதாலும், நீ உனது மனைவியை உன்னிடமே வைத்துக் கொள்! என்ற வாசகம் வந்திருப்பதாலும் “ஒரேயடியாக ஒரு தலாக் கூறினாலும் அது மீட்டிக்கொள்ள வேண்டிய தலாக் தான்” என்று அஹ்மத்-ஷாகிர் அவர்கள் பொருள் கூறியுள்ளார்)

(ஷரஹ்-ரிஸாலா-அஷ்ஷாஃபிஈ-பக்: 111)

இந்தச் செய்தியில் அல்முத்தலிப் அவர்களுக்கு அடுத்ததாக மேலுள்ள அனைவரும் பலமானவர்கள்.

இதன் அறிவிப்பாளர்தொடர் ஷாஃபிஈ —> ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
—> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் —> அல்முத்தலிப் பின் ஹன்த்தப் —> உமர் (ரலி)
.

எனவே இதன் அறிவிப்பாளர்தொடர் பலமானது. எனவே இதில் கூறப்படும் அல்முத்தலிப் பின் ஹன்தப் அவர்கள் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் (உமர் (ரலி) இறப்பு ஹிஜ்ரீ 23) வாழ்ந்தவர் என்று தெரிகிறது. எனவே இவர் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி)-(இறப்பு ஹிஜ்ரீ 57 அல்லது 58), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)-(இறப்பு ஹிஜ்ரீ 68 – 79) ஆகியோரின் காலத்தை அடையாதவர் என்று கூறமுடியாது.

ஷாஃபிஈ இமாம் அவர்கள், முர்ஸலான செய்தி என்றால் அதை தனி ஆதாரமாக எடுக்க மாட்டார்கள். அதைப் பலப்படுத்தும் வேறு செய்தி வந்தால் அப்போது அதை ஏற்றுக்கொள்ளலாம் என்பது அவரின் நிலைப்பாடாகும். மேற்கண்ட செய்திகளை அவர்கள் முர்ஸல் என்றும் கூறவில்லை. இத்துடன் துணைச் செய்திகளையும் கூறவில்லை என்பதால் அல்முத்தலிப் பின் ஹன்த்தப் அவர்களின் செய்திகளை ஷாஃபிஈ இமாம் ஏற்றுள்ளார் என்று தெரிகிறது.

ஸீரது இப்னு ஹிஷாம்.

سيرة ابن هشام ت السقا (1/ 659)

(الَّذِينَ أَطْلَقُوا مِنْ غَيْرِ فِدَاءٍ) :

قَالَ ابْنُ إسْحَاقَ: فَكَانَ مِمَّنْ سُمِّيَ لَنَا مِنْ الْأُسَارَى مِمَّنْ مُنَّ عَلَيْهِ بِغَيْرِ فِدَاءٍ، مِنْ بَنِي عَبْدِ شَمْسِ بْنِ عَبْدِ مَنَافٍ: أَبُو الْعَاصِ بْنُ الرَّبِيعِ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ عَبْدِ شَمْسِ مَنَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ أَنْ بُعِثَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِدَائِهِ. وَمِنْ بَنِي مَخْزُومِ (بْنِ يَقَظَةَ) [2] : الْمُطَّلِبُ بْنُ حَنْطَبِ بْنِ الْحَارِثِ بْنِ عُبَيْدَةَ بْنِ عُمَرَ بْنِ مَخْزُومٍ، كَانَ لِبَعْضِ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ، فَتَرَكَ فِي أَيْدِيهِمْ حَتَّى خَلَّوْا سَبِيلَهُ. فَلَحِقَ بِقَوْمِهِ.

(அல்இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபஹ், இஸாபா)

அஸ்ஸிகாத்-3/401.

«الثقات لابن حبان» (3/ 401):

«• ‌الْمطلب ‌بْن ‌حنْطَب بْن الْحَارِث بْن عبيد بْن عمر بْن مَخْزُوم أسر يَوْم بدر وَمن عَلَيْهِ النَّبِي صلى الله عليه وسلم بِغَيْر فدَاء»

நபி (ஸல்) அவர்கள், பத்ருப் போரில் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் சிலரை பிணைத்தொகை வாங்காமல் விடுவித்தார்கள். அதில் மக்ஸூம் கிளையைச் சேர்ந்த அல்முத்தலிப் பின் ஹன்த்தப் இருந்துள்ளார் என்று மேற்கண்ட ஸீரது இப்னு ஹிஷாம்,  அஸ்ஸிகாத்-3/401, இன்னும் பல நூல்களில் கூறப்பட்டுள்ளது.

எனவே இவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளார் என்றும் தெரிகிறது.


2 . இவரின் அடிமையான அம்ர் பின் அபூஅம்ர்-தாபிஈ ஆவார்-(இறப்பு-144). இவர் தனது தந்தையிடமிருந்தும், அனஸ் (ரலி)-(இறப்பு-91-93) அவர்களிடமிருந்தும், ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)-(இறப்பு-95) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார். மேலும் இவர் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்களின் ஆசிரியரும் ஆவார்.

(அல்ஜர்ஹ்-, அஸ்ஸிகாத்-5/185, )…

எனவே அல்முத்தலிப் பின் ஹன்த்தப் அவர்களிடமிருந்து இவர் அறிவிக்கிறார் என்றால் அல்முத்தலிப் இவருக்கு முன்னுள்ளவர் என்றும், இவர் நபித்தோழர்களிடமும் ஹதீஸ்களை கேட்டிருக்கலாம் என்றும் தெரிந்துக் கொள்ளலாம்.


3 . அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்தப் பின் ஹாரிஸ் என்பவர் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் கூறியுள்ள குறிப்பில் உள்ள கலப்படம்.

(நூல்: அஸ்ஸிகாத்-5/450).

«الثقات لابن حبان» (5/ 450):

«• ‌الْمطلب ‌بْن ‌عَبْد ‌اللَّه ‌بْن ‌حنْطَب المَخْزُومِي الْقرشِي يروي عَن عمر وَأبي مُوسَى وَعَائِشَة روى عَنْهُ مُحَمَّد بْن عباد بْن جَعْفَر وَأهل الْمَدِينَة وَكَانَت أمه أم أبان بنت الحكم بن أبي الْعَاصِ وَقد قيل إِن أمه أم سَلمَة بنت الحكم بْن أبي الْعَاصِ بْن أُميَّة وَفد إِلَى هِشَام بن عبد الْملك فَأدى عَنهُ سَبْعَة عشر ألف دِينَار وَهُوَ ‌الْمطلب ‌بن ‌عبد ‌الله ‌بن ‌حنْطَب بن الْحَارِث بْن عبيد بْن عمر بن مَخْزُوم»

இவர் உமர் (ரலி), அபூமூஸா (ரலி), ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) ஆகியோரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபரும், மதீனாவாசிகளும் அறிவித்துள்ளனர்…

(இவரின் ஆசிரியர்கள், மாணவர்களை மேற்கண்டவாறு கூறியதின் மூலம் 2 பேரைப் பற்றிய குறிப்புகளை கலந்து ஒருவரின் விசயத்தில் கூறியுள்ளார்)

  • இவர் ஹிஷாம் பின் அப்துல்மலிக் என்ற பனூஉமைய்யாவின் ஆட்சியாளரிடம் ஒரு குழுவாக சென்றபோது அவர் 17 ஆயிரம் தீனார்களைக் அன்பளிப்பாக கொடுத்தார். ஹிஷாமின் ஆட்சிக்காலம் ஹிஜ்ரீ 105 முதல் 125 வரை ஆகும்.
  • இந்த வரலாற்று செய்தியின்படி இவரை மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் அடைந்திருக்கும் காலம் ஆகும். (மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாமின் பிறப்பு ஹிஜ்ரீ 93, இறப்பு 179).
  • இவர் தான் முதலில் கூறப்பட்ட அல்முத்தலிப் பின் ஹன்த்தப் என்றால் இவரிடமிருந்து மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாம் ஹதீஸ்களை அறிவித்திருப்பார். அல்லது சில காரணத்தால் அறிவிக்கவில்லை என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் இந்த இரண்டும் நடக்கவில்லை.

(எனவே இவர், நபித்தோழர் அல்லாத 2 வது முத்தலிப் ஆவார். இவர் தான் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் ஆவார். இவர் உமர் (ரலி) அவர்களின் தலாக் பற்றிய செய்தியுடன் தொடர்பில்லாதவர்).

4 . பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
அவர்களின் அறிவிப்பில் வரும் அல்முத்தலிப்.

السنن الكبرى للبيهقي (4/ 31)

6840 – أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ، أنبأ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا مَعْنٌ، ثنا هَارُونُ، مَوْلَى قُرَيْشٍ، قَالَ: ” رَأَيْتُ الْمُطَّلِبَ بَيْنَ عُمُودَيْ سَرِيرِ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ “، قَالَ يَعْقُوبُ: كَانَ عِنْدَنَا خَارِجَةٌ، فَقَالَ هِشَامٌ جَابِرٌ

இந்தச் செய்தியில் ஜாபிர் (ரலி) அவர்களின் கட்டில் என்பதை விட காரிஜா என்பவரின் கட்டில் என்பதே சரி என்பதால் காரிஜாவின் இறப்பு ஹிஜ்ரீ 99 அல்லது 100 என்பதால் இதில் இடம்பெறும் அல்முத்தலிப் என்பவர் உமர் (ரலி) அவர்கள் காலத்தில் இருந்த அல்முத்தலிப் அல்ல. இவர் ஹிஷாம் பின் அப்துல்மலிக் நிகழ்வுடன் தொடர்புடையவர் ஆவார். ஏனெனில் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இருந்தவர் என்றால் ஏறக்குறைய 80 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்பதின்படி இவரிடமிருந்து அதிகமான ஹதீஸ்கள் வந்திருக்கும். இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிப்பது ஸனத் ஆலீ-குறைந்த அறிவிப்பாளர்கள் உள்ள அறிவிப்பாளர்தொடர் என்பதால் இவரைப் பற்றி அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் பரவலாக கூறப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை.

எனவே இவர் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் ஆவார். இவரைத் தான் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப் என்றும் கூறப்படுகிறது.

5 . முக்தஸர் தாரீக் திமிஷ்க்-7/223, லுபாபுல் ஆதாப்-1/95, இல் கூறப்படும் ஹகம் பின் முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் முத்தலிப் பின் ஹன்த்தப்.

(நிகழ்வைப் பற்றிய தகவல்: …காலித் பின் அப்துல்லாஹ் 106 – 120)

இதில் வரும் ஹகம் என்பவரை குறிப்பிடும் போது இன்ன முத்தலிபின் மகன் என்று மேற்கண்டவாறு இப்னு அஸாகிர் கூறியுள்ளார். இவர் மேற்கண்ட ஹிஷாம் பின் அப்துல்மலிக், காரிஜாவின் நிகழ்வுடன் தொடர்புடையவர் ஆவார்.

6 . அல்அஃகானீ-4/332.

ஹிஜ்ரீ 132 ன் காலத்தை அடைந்த முத்தலிப்.

மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் அல்முத்தலிப் அவர்களைப் பற்றி கூறும் பெரும்பாலான அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் இவரின் இறப்பு ஹிஜ்ரீ 120 இல் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஹிஜ்ரீ 132 ன் காலத்தை அடைந்த அல்முத்தலிபும் உள்ளார்.

الأغاني للأصفهاني (4/ 332)
أخبرني عمي قال حدثنا الكراني قال حدثنا النضر بن عمرو عن الهيثم بن عدي قال
كان المطلب بن عبد الله بن حنطب قاضيا على مكة فشهد عنده أبو سعيد مولى فائد بشهادة

الأغاني (356) (4/ 481)
50 – ذكر أخبار أبي سعيد مولى فائد ونسبه
ولاؤه، وكان مغنيا وشاعرا:
أبو سعيد مولى فائد. وفائد مولى عمرو بن عثمان بن عفّان رضي اللّه تعالى عنه. وذكر ابن خرداذبه أنّ اسم أبي سعيد إبراهيم. وهو يعرف في الشعراء بابن أبي سنّة [1] مولى بني أميّة، وفي المغنّين بأبي سعيد مولى فائد.
وكان شاعرا مجيدا ومغنّيا، وناسكا بعد ذلك، فاضلا مقبول الشهادة بالمدينة معدّلا. وعمّر إلى خلافة الرشيد،

இதில் கூறப்படும் அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் மக்காவின் நீதிபதியாக இருந்துள்ளார். இவர் பனூஅப்பாஸிய்யாக்களின் ஆரம்பக் கால ஆட்சியாளர். பனூஅப்பாஸிய்யாக்களின் ஆட்சி ஹிஜ்ரீ 132 லிருந்து தான் ஆரம்பிக்கிறது. எனவே இவர் ஹிஜ்ரீ 132 இல் உள்ளவர். இவர் உமர் (ரலி) அவர்களின் செய்தியுடன் தொடர்புடையவர் அல்ல.

7 . அல்அஃகானீ-4/526.

الأغاني (356) (4/ 526)
أخبرنا يحيى بن عليّ إجازة قال حدّثني حمّاد بن إسحاق عن أبيه قال حدّثني عبد اللّه بن محمد:
أنّ ابن هرمة قال يمدح أبا الحكم المطّلب بن عبد اللّه:
لمّا رأيت الحادثات كنفنني … وأورثنني بؤسى ذكرت أبا الحكم
سليل ملوك سبعة قد تتابعوا … هم المصطفون والمصفّون بالكرم
فلاموه وقالوا: أتمدح غلاما حديث السنّ بمثل هذا! قال نعم! وكانت له ابنة يلقّبها «عيينة»

இதில் இப்னு ஹர்மா என்பவர் அபுல்ஹகம்-அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ்வை புகழ்ந்ததை கண்ட சிலர் வயதில் குறைந்தவரை இப்படி புகழலாமா? என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இப்னு ஹர்மா என்பவரின் பிறப்பு ஹிஜ்ரீ 70 – இறப்பு 150 ஆகும். எனவே இதில் கூறப்படும் அபுல்ஹகம்-முத்தலிப் பின் அப்துல்லாஹ் என்பவர் உமர் (ரலி) அவர்களின் செய்தியுடன் தொடர்பில்லாதவர் ஆவார்.


ஆய்வின் சுருக்கம்:

மேற்கண்ட தகவல்களை இன்னும் விரிவாக கூறியுள்ள ஹதீஸ்துறை அறிஞர்களில் ஒருவரான அஹ்மத்-ஷாகிர் அவர்கள்,

1 . இவரைப் பற்றிய ஆய்வுக்கு நீண்ட நாட்கள் ஆனது என்றும், இறுதியில் அல்முத்தலிப் என்ற பெயரில் நான்கு பேர் உள்ளனர்; மற்ற மூவர் பற்றி உறுதியாக கூறமுடியாவிட்டாலும் ஷாஃபிஈ இமாம் அவர்களின் அல்உம்மு, ரிஸாலா போன்ற நூல்களில் இடம்பெறும் அல்முத்தலிப் என்பவர் அல்முத்தலிப் பின் ஹன்த்தப் என்பவர் ஆவார்; மேலும் இவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோரைப் போன்ற சிறுவயது நபித்தோழர் ஆவார். மேலும் இவரிடமிருந்து அம்ர் பின் அபூஅம்ர், முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் ஆகியோர் அறிவித்துள்ளனர். அம்ர் பின் அபூஅம்ர், முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் ஆகியோர் தனது ஆசிரியராக குறிப்பிடும் அல்முத்தலிப் என்பவர் சிறுவயது நபித்தோழர் ஆவார் என்று கூறமுடியும் என்று தன்னுடைய முடிவைக் கூறியுள்ளார்.

2 . இவரை நபித்தோழர் இல்லை என்று கூறினாலும் இவர் மூத்த தாபிஈன்களில் உள்ளவர் என்று உறுதியாகக் கூறமுடியும்.

3 . ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இவர் இன்னின்ன நபித்தோழரின் காலத்தை அடையவில்லை; இன்ன நபித்தோழரிடமிருந்து ஹதீஸைக் கேட்கவில்லை; இந்த நபித்தோழரிடமிருந்து அறிவிப்பது முர்ஸல்-முன்கதிஃ என்று கூறியிருப்பது பலரைப் பற்றிய செய்திகளை ஒருவரிடம் பொருத்தியதால் ஏற்பட்ட குழப்பமாகும் என்றும் கூறியுள்ளார்.


(இதனடிப்படையில் ஹதீஸ்நூல்களில் அல்முத்தலிப் என்று மட்டும் கூறப்படும் அறிவிப்பாளரை, அவரிடமிருந்து அறிவிப்பவர்களை வைத்து எந்த அல்முத்தலிப் என்பதை அடையாளம் காண முடியும்.)


அல்முத்தலிப் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ள செய்திகள்:

1 . அஹ்மத்-1529 ,

10 comments on Tirmidhi-1521

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள அல் முத்தலிப் பின் அப்துல்லா பின் ஹந்தப் அவர்கள் தத்லீஸ் செய்யக்கூடியவர் இவர் ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை அல்பானி அவர்கள் எந்த அடிப்படையில் சஹீஹ் என்று சொல்கிறார்கள்? என்பதை தயவுசெய்து விளக்கவும்.
    – أنَّ جابرَ بنَ عبدِ اللهِ أخبرهُمَا قال شهدتُ مع رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ الأضحَى بالمُصلَّى فلمَّا قضَى خُطبتَهُ نزلَ من منبرِهِ وأَتَي بكبشٍ فذبحَهُ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ بيدِه وقال بسمِ اللهِ واللهُ أكبرُ هذا عنِّي وعمَّن لم يُضَحِّ من أمتي
    الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : إرواء الغليل | الصفحة أو الرقم : 4/349 | خلاصة حكم المحدث : صحيح الإسناد | التخريج : أخرجه أبو داود (2810)، والترمذي (1521)، وأحمد (3/ 356) باختلاف يسير.

    1. வ அலைக்கும் ஸலாம்.
      இந்த செய்தியை ஆய்வுக்கு எடுத்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்.

      1. நன்றி,அல்லாஹ் உங்களுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக…

        1. ஜஸாகல்லாஹு கைரா. மறைவிலும் இந்தப் பிரார்த்தனையை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். அல்லாஹ் உங்களுடைய கல்வி ஞானத்தையும் அதிகப்படுத்த பிரார்த்தனை செய்கிறேன்.

  2. அல்பானி அவர்கள் எந்த அடிப்படையில் சஹீஹ் என்று சொல்கிறார்கள் என்பதை தங்களின் விளக்கத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்.
    அபூதாவூத் தமிழாக்கத்தில் கீழ்காணும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது அது சரியா?
    >> இது ஹஸன் தரத்திலான ஹதீஸ் ஆகும். இது திர்மிதீ (1441), இப்னு மாஜா (3112), முஸ்னது அஹ்மத் (14308, 14364) ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸில் பெருநாள் தொழுகையில் உரை நிகழ்த்திவிட்டு மிம்பரிலிருந்து இறங்கினார்கள் என வந்துள்ளது. ஆனால் பெருநாள் உரையை நபி அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) இல்லாமல் தரையில் நின்றே நிழ்த்தியுள்ளார்கள் என புகாரீ (956), முஸ்லிம் (1612) நூல்களில் வந்துள்ளது. ஆனால் இந்த ஹதீஸில் தெளிவாக நஸல மிம் மின்பரிஹி (தங்கள் சொற்பொழிவு மேடையிலிருந்து இறங்கினார்கள்) என வந்துள்ளது. இதற்குச் சில நேரங்களில் சொற்பொழிவு மேடையிலிருந்தும் பெரும்பாலும் சொற்பொழிவு மேடை இல்லாமலும் பெருநாள் உரை நிகழ்த்தியுள்ளார்கள் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. (பத்லுல் மஜ்ஹுத்) மின்மிம்பரிஹி என்ற வாசகம் இல்லாமல் நஸல என்ற சொல் மட்டும் சில ஹதீஸ்களில் வந்துள்ளது. காண்க: புகாரீ (961, 978), அபூதாவூத் (963), இப்னு மாஜா (1265, 4003). இந்த ஹதீஸ்களில் வந்துள்ள நஸல என்பதற்கு அங்கிருந்து அகன்றார்கள்; அங்கிருந்து கிளம்பினார்கள் என்று பொருளாகும். (அல்லாஹ்வே நன்கறிவோன்).

  3. மாஷா அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸை சரியா என தெரிந்துகொள்ள இவ்வளவு தகவல்களை ஏற்படுத்தி வைத்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும். இந்த தளம் எந்த ஒரு அமைப்பையும் சாராமல் இறுதி வரை நடுநிலையாக ஹதீஸ் சம்பந்தமான தனது நிலைபாட்டை பதிவு செய்ய வேண்டும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த செய்தி சஹீஹ் தான்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.