நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானவை வேறு எதுவும் இல்லை. (அவ்விரு துளிகள்:)
1 . அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண்ணீர்த் துளி.
2 . அல்லாஹ்வின் பாதையில் ஓட்டப்பட்ட இரத்தத் துளி.
அவ்விரு அடையாளங்கள்:
1 . அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் அடையாளம்.
2 . அல்லாஹ்வின் கடமைகளில் ஏதேனும் ஒரு கடமையை நிறைவேற்றும்போது ஏற்படும் அடையாளம்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
(திர்மிதி: 1669)
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ جَمِيلٍ الفِلَسْطِينِيُّ، عَنْ القَاسِمِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
لَيْسَ شَيْءٌ أَحَبَّ إِلَى اللَّهِ مِنْ قَطْرَتَيْنِ وَأَثَرَيْنِ، قَطْرَةٌ مِنْ دُمُوعٍ فِي خَشْيَةِ اللَّهِ، وَقَطْرَةُ دَمٍ تُهَرَاقُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا الأَثَرَانِ: فَأَثَرٌ فِي سَبِيلِ اللَّهِ، وَأَثَرٌ فِي فَرِيضَةٍ مِنْ فَرَائِضِ اللَّهِ
هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1669.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1590.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47738-வலீத் பின் ஜமீல் பின் கைஸ் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், இவரின் ஹதீஸ்கள் காஸிம் அபூஅப்துர்ரஹ்மானின் ஹதீஸ்களைப் போன்றவை என்று கூறியுள்ளார். (இதன் கருத்து காஸிம் அபூஅப்துர்ரஹ்மான் பலமானவர் என்பதால் இவரும் பலமானவர் என்பதாகும்). - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் முகாரிபுல் ஹதீஸ் என்றும், அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் இவர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். - அபூஸுர்ஆ அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 200
இறப்பு ஹிஜ்ரி 264
வயது: 64
அவர்கள் இவர் வயோதிகர்; சிறிது நினைவாற்றலில் பலவீனமானவர் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவர் நம்பகமானவர்; சிறிது தவறிழைப்பவர் என்றும் கூறியுள்ளனர். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் காஸிம் அவர்கள் வழியாக முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். - இவரின் சில ஹதீஸ்களை குறிப்பிட்ட இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் காஸிம் வழியாகவே ஹதீஸ்களை அறிவித்துள்ளார். மற்றவர்கள் வழியாக இவர் அறிவித்ததாக நான் காணவில்லை என்று கூறியுள்ளார். (என்றாலும் இது விமர்சனம் அல்ல. இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர். மேலும் இவர் மக்ஹூல், யஹ்யா பின் அபூகஸீர் ஆகியோரிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.)
(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2004, 8/362, அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/3, தஹ்தீபுத் தஹ்தீப்-4/315, தக்ரீபுத் தஹ்தீப்-1/1037)
இந்தச் செய்தியை திர்மிதீ அவர்கள் ஹஸன் என்றும், ஸுயூதீ அவர்கள் சரியானது என்றும் கூறியுள்ளனர். பிற்கால அறிஞர்களில் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
ஆகியோரும் ஹஸன் என்று கூறியுள்ளனர்.
- அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்களின் விமர்சனத்தின்படி சிலர் இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் தனித்து அறிவிக்கும் அறிவிப்பாளரையும் முன்கருல் ஹதீஸ் என்று கூறுவார் என்பதால் அவரின் கருத்தைவிட மற்ற அதிகமானோர் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர் என்பதால் அதற்கே நாம் முக்கியத்துவம் தரவேண்டும். - இந்தச் செய்தியின் முதல் பகுதி ஹஸன் பஸரீ வழியாக முர்ஸலாக வந்துள்ளது.
1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1669 , அல்முஃஜமுல் கபீர்-7918 ,
2 . ஹஸன்-பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21210 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-1633 ,
சமீப விமர்சனங்கள்