தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1633

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.

(திர்மிதி: 1633)

بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الغُبَارِ فِي سَبِيلِ اللَّهِ

حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ المَسْعُودِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»

هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ هُوَ مَوْلَى أَبِي طَلْحَةَ مَدَنِيٌّ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1557.
Tirmidhi-Shamila-1633.
Tirmidhi-Alamiah-1557.
Tirmidhi-JawamiulKalim-1555.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . ஹன்னாத் பின் ஸரீ

3 . இப்னுல் முபாரக்

4 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ்

5 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்

6 . ஈஸா பின் தல்ஹா

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


الكواكب النيرات في معرفة من اختلط من الرواة الثقات (282/1):
أن الإمام أحمد ذكر أنه اختلط ببغداد وأن سماع من سمع منه هناك ليس بشيء قال ومن سمع منه بالكوفة فسماعه جيد

تهذيب التهذيب (2/ 524):
وقال ابن عمار: ‌كان ‌ثبتا ‌قبل ‌أن ‌يختلط، ومن سمع منه ببغداد فسماعه ضعيف

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21956-அல்மஸ்ஊதீ-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உத்பா (இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மகனின் பேரன்) பலமானவர் தான் என்றாலும் கடைசி காலத்தில் மூளைக் குழம்பியவர் ஆவார் என்று இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இப்னு அம்மார் ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இவரிடமிருந்து பஃக்தாதைச் சேர்ந்தவர்கள் அறிவிப்பது இவர் மூளைக் குழம்பிய பின் என்பதால் அவை பலவீனமானவை என்றும், இவர் மூளைக் குழம்புவதற்கு முன் கூஃபாவிலும், பஸராவிலும் இவரிடமிருந்து செவியேற்றவர்கள் அறிவிக்கும் செய்திகள் சரியானவை என்றும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அபூநுஐம் போன்ற பலர் கூறியுள்ளனர்.

(நூல்கள்: அல்கவாகிபுன் நய்யிராத்-1/282, தஹ்தீபுத் தஹ்தீப்-2/523)

  • அல்மஸ்ஊதீ அவர்களிடமிருந்து இந்தச் செய்தியை தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    இமாம், அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரிஃ, உமர் பின் அலீ, இப்னுல் முபாரக் பிறப்பு ஹிஜ்ரி 118
    இறப்பு ஹிஜ்ரி 181
    வயது: 63
    போன்ற பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் கூஃபாவைச் சேர்ந்தவர்களும் மற்றவர்களும் அறிவித்துள்ளனர்.
  • மேலும் இவரிடமிருந்து முஆவியா பின் அம்ர் போன்ற பஃக்தாதைச் சேர்ந்தவர்களும், யஸீத் பின் ஹாரூன் போன்ற பஃக்தாதில் இவரிடமிருந்து ஹதீஸை செவியேற்றவர்களும் அறிவித்துள்ளனர்.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (8/ 336)
1606- وَسُئِلَ عَنْ حَدِيثٍ رُوِيَ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، لَا يَلِجُ النَّارَ أَحَدٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ، حَتَّى يَلِجُ اللَّبَنُ فِي الضَّرْعِ.
فَقَالَ: يَرْوِيهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى آلِ طَلْحَةَ، عَنْهُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ مِسْعَرٌ، عَنْهُ مَوْقُوفًا، وَاخْتُلِفَ عَنِ الْمَسْعُودِيِّ، فَرَفَعَهُ عَنْهُ قَوْمٌ، وَوَقَفَهُ وَكِيعٌ، عَنْهُ.
وَقِيلَ: عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ مِسْعَرٍ مَرْفُوعًا ولا يثبت.

ஈஸா பின் தல்ஹா அவர்கள், அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மேற்கண்ட செய்தி பற்றி தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்களின் கருத்து:

1 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிஸ்அர் பின் கிதாம் அவர்கள் இதை, முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> ஈஸா பின் தல்ஹா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

2 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்மஸ்ஊதீ அவர்களின் மாணவர்களில் சிலர் இதை, அல்மஸ்ஊதீ —> முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> ஈஸா பின் தல்ஹா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) —> நபி (ஸல்)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

3 . அல்மஸ்ஊதீ அவர்களின் ஆரம்ப மாணவர்களில் ஒருவரான வகீஃ பின் ஜர்ராஹ் அவர்கள் இதை, அல்மஸ்ஊதீ —> முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> ஈஸா பின் தல்ஹா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)
என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்.

4 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மிஸ்அர் பின் கிதாம் அவர்களின் மாணவரான ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அது உறுதியானதல்ல.

(நூல்: அல்இலலுல் வாரிதா-1606)


  • இந்தச் செய்தியை அல்மஸ்ஊதீ அவர்களிடமிருந்து கூஃபா, பஸரா,மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர் பஃக்தாதைச் சேர்ந்தவர்களும் மற்றவர்களும் அறிவித்துள்ளனர். சிலர் நபித்தோழரின் சொல்லாகவும் சிலர் நபியின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர் என்பதால் இரண்டு வகை செய்திகளும் சரியானவைகளாகும்.
  • இந்தக் கருத்தை நபித்தோழர் சுயமாக கூறியிருக்க முடியாது என்பதாலும், நபியின் சொல்லாக அறிவித்தவர்களும் பலமானவர்கள் என்பதுடன் அல்மஸ்ஊதீ அவர்களிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் என்பதாலும் இது சரியான செய்தியாகும்.
  • வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் இந்தச் செய்தியின் கருத்து வந்துள்ளது.
  • சிலர் மேற்கண்ட செய்தியின் முதல் பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர். வேறுசிலர் இரண்டாவது பகுதியை மட்டும் அறிவித்துள்ளனர்.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் —> ஈஸா பின் தல்ஹா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2565 , முஸ்னத் ஹுமைதீ-1122 (1140) , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-19364 , 34708 , அஹ்மத்-10560 , இப்னு மாஜா-2774 , திர்மிதீ-1633 , 2311 , குப்ரா நஸாயீ-, நஸாயீ-3107 , 3108 , இப்னு ஹிப்பான்-4607 , ஹாகிம்-7667 ,


مسند الحميدي ط-أخرى (2/ 420)
1140 – حَدَّثَنَا الْحُمَيْدِىُّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :« لاَ يَجْتَمِعُ غُبَارٌ فِى سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ فِى جَوْفِ مُسْلِمٍ ».

مسند الحميدي (2/ 255)
1122 – حَدَّثَنَا الْحُمَيْدِيُّ قَالَ: ثنا مِسْعَرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ، وَدُخَانُ جَهَنَّمَ فِي جَوْفِ الْمُسْلِمِ»

முஸ்னத் ஹுமைதியின் மேற்கண்ட இரண்டு பிரதிகளில் ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் ஸுபைர்) அவர்களுக்கும், மிஸ்அர் பின் கிதாம் அவர்களுக்கும் இடையில் ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள் கூறப்பட்டு வரும் முதல் பிரதியின் ஹதீஸ் எண்-1140 தான் சரியாக இருக்க வாய்ப்புள்ளது.


கஃகாஃ —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க:

ஸுஹைல் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க:

முஹம்மத் பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க:

ஸுஹ்ரீ —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)

பார்க்க:


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1669 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.