தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-1781

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நபி (ஸல்) அவர்கள் மக்காவிற்குள் நுழைதல்.

உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, அவர்களுக்கு நான்கு சடை(பின்னல்)கள் இருந்தன.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘கரீப்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.

முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ (ரஹ்) அவர்கள், “முஜாஹித் (ரஹ்) அவர்கள் உம்மு ஹானி (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டதாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.


மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளது…

இதில் இடம்பெறும் (அப்துல்லாஹ் அவர்களின் தந்தையான) அபூநஜீஹ் அவர்களின் இயற்பெயர் யஸார் ஆகும்.

மேற்கண்ட ஹதீஸ் ‘ஹஸன்’ தரத்தில் அமைந்தது. அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் மக்காவைச் சேர்ந்தவர் ஆவார்.

(திர்மிதி: 1781)

بَابُ دُخُولِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ:

«قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ»

هَذَا حَدِيثٌ غَرِيبٌ قَالَ مُحَمَّدٌ: «لَا أَعْرِفُ لِمُجَاهِدٍ سَمَاعًا مِنْ أُمِّ هَانِئٍ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ المَكِّيُّ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أُمِّ هَانِئٍ قَالَتْ: «قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَلَهُ أَرْبَعُ ضَفَائِرَ»
أَبُو نَجِيحٍ: اسْمُهُ يَسَارٌ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ مَكِّيٌّ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1703.
Tirmidhi-Shamila-1781.
Tirmidhi-Alamiah-1703.
Tirmidhi-JawamiulKalim-1700.




இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடரின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் யஹ்யா-இப்னு அபூஉமர்

3 . ஸுஃப்யான் பின் உயைனா

4 . அப்துல்லாஹ் பின் யஸார்-இப்னு அபூநஜீஹ்

5 . முஜாஹித் பின் ஜப்ர்

6 . உம்மு ஹானி (ரலி)


1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் பஷ்ஷார்

3 . அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ

4 . இப்ராஹீம் பின் நாஃபிஃ-அல்மக்கீ

5 . அப்துல்லாஹ் பின் யஸார்-இப்னு அபூநஜீஹ்

6 . முஜாஹித் பின் ஜப்ர்

7 . உம்மு ஹானி (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35123-முஜாஹித் பின் ஜப்ர் அவர்கள் ஹிஜ்ரி 21 இல் மக்காவில் பிறந்து, ஹிஜ்ரி 100 – 107 க்குள் இறந்தார் என்று வரலாற்றுத் தகவல் உள்ளது.

(நூல்கள்: தாரீகுல் இஸ்லாம்-3/1489, ஸியரு அஃலாமின் நுபலா-4/449, தக்ரீபுத் தஹ்தீப்-1/921)


உம்மு ஹானி (ரலி) அவர்கள் அபூதாலிப் அவர்களின் மகளும், அலீ (ரலி) அவர்களின் சகோதரியும் ஆவார். இவரும் மக்காவில் பிறந்தவர்.

நபி (ஸல்) அவர்கள் “உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)” அவர்களைத் தமக்காகப் பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஹானீ அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வயதாகி விட்டது; எனக்குக் குழந்தை குட்டிகளும் உள்ளனர்” என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.

(நூல்: முஸ்லிம்-4947)

இவரின் இறப்பு முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலம் என்று வரலாற்றுத் தகவல் உள்ளது.

முஆவியா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 41 இல் ஆட்சிக்கு வந்தார்கள். ஹிஜ்ரி 60 இல் இறந்தார்கள்.

உம்மு ஹானி (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 50 க்கு பிறகு இறந்தார் என்ற தகவலை தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்காஷிஃப்-5/234, தாரீகுல் இஸ்லாம்-2/559, ஸியரு அஃலாமின் நுபலா-2/312, தக்ரீபுத் தஹ்தீப்-1/1386)


العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 294)
سَأَلْتُ مُحَمَّدًا قُلْتُ لَهُ: مُجَاهِدٌ سَمِعَ مِنَ أُمِّ هَانِئٍ؟ قَالَ: رَوَى عَنْ أُمِّ هَانِئٍ. وَلَا أَعْرِفُ لَهُ سَمَاعًا مِنْهَا

உம்மு ஹானி (ரலி) அவர்களிடமிருந்து முஜாஹித் அவர்கள் ஹதீஸைக் கேட்டுள்ளாரா? என்று திர்மிதீ அவர்கள், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களிடம் கேட்கும் போது புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், முஜாஹித் அவர்கள் உம்மு ஹானி (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். ஆனால் நேரடியாக கேட்டுள்ளாரா? என்பதை நான் அறியவில்லை என்று கூறினார்.

(நூல்கள்: திர்மிதீ-1781, அல்இலலுல் கபீர்-545)

மேற்கண்ட தகவல் மூலம் இந்தச் செய்தியில் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் நிபந்தனையான “ஆசிரியருக்கும், மாணவருக்கும் இடையில் சந்திப்பு அல்லது ஸிமாஃ-நேரடியாக கேட்டதை குறிக்கும் வார்த்தை இருக்க வேண்டும்” என்ற அம்சம் இல்லை.

ஆனால் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் அவர்கள் இருவரும் சந்திக்க வாய்ப்பிருந்து தத்லீஸ் செய்யாதவர் என்றால் அவரின் அன்அனா செய்திகளை ஏற்கலாம் என்று கூறியுள்ளார். மேற்கண்ட செய்தி முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாமின் நிபந்தனைப்படி இருப்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
போன்ற அறிஞர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளனர். (முஜாஹித் அவர்கள் தத்லீஸ் செய்யாதவர் என்ற கருத்துக்கே சிலர் முன்னுரிமை தருகின்றனர்)

வேறு சிலர், புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் நிபந்தனைப்படி இதை பலவீனமானது என்று கூறியுள்ளனர்.

(திர்மிதீ இமாம் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்களின் கருத்தைக் கூறினாலும் இந்தச் செய்தியை பற்றி ஃகரீப் என்றும் இறுதியில் ஹஸன் என்றும் கூறியுள்ளார். எனவே திர்மிதீ இமாமின் கருத்துப்படி இது ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் உள்ளதாகும்)


1 . இந்தக் கருத்தில் உம்மு ஹானி (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முஜாஹித் —> உம்மு ஹானி (ரலி)

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-25066, 36917, முஸ்னத் இஸ்ஹாக்-2121, அஹ்மத்-26890, 27389, இப்னு மாஜா-3631, அபூதாவூத்-4191, திர்மிதீ-1781, அல்முஃஜமுல் கபீர்-20521, 20522, 20523


2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-1006.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.