பாடம்:
சிறுவர்கள் மீது இரக்கம் காட்டுவது பற்றி வந்துள்ளவை.
ஒரு முதியவர் நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருளில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன. மேற்கண்ட அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி அரிதான செய்தியாகும். (காரணம் இதில் வரும் அறிவிப்பாளரான) ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் என்பவர் அனஸ் (ரலி) வழியாகவும், மற்றவர்கள் வழியாகவும் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார்.
(திர்மிதி: 1919)بَابُ مَا جَاءَ فِي رَحْمَةِ الصِّبْيَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ بْنُ وَاقِدٍ، عَنْ زَرْبِيٍّ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ:
جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ القَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا»
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَأَبِي هُرَيْرَةَ، وَابْنِ عَبَّاسٍ، وَأَبِي أُمَامَةَ،:
هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَزَرْبِيٌّ لَهُ أَحَادِيثُ مَنَاكِيرُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَغَيْرِهِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1919.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1838.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-27747-உபைத் பின் வாகித் பலவீனமானவர்; ராவீ-16050-ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் முன்கருல் ஹதீஸ் என்று விமர்சிக்கப்பட்டவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/653, 1/337)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)
பார்க்க: திர்மிதீ-1919 , முஸ்னத் அபீ யஃலா-4241 , 4242 ,
- யூஸுஃப் பின் அதிய்யா —> ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-3476 ,
- ஸாயிதா பின் அபுர்ருகாத் —> ஸாபித் —> அனஸ் (ரலி)
பார்க்க: ஷுஅபுல் ஈமான்-10476 ,
- ஜுனாதா —> ஹாரிஸ் பின் நுஃமான் —> அனஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4812 ,
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-4943 .
சமீப விமர்சனங்கள்