பாடம்: 33
பிள்ளைக்கு ஒழுக்கம் போதுப்பது தொடர்பாக வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தம் பிள்ளைக்கு (ஒரேயொருமுறை) ஒழுக்கம் போதுப்பது ஒரு ஸாஉ அளவு தர்மம் செய்வதைவிடச் சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
(திர்மிதி: 1951)بَابُ مَا جَاءَ فِي أَدَبِ الوَلَدِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى، عَنْ نَاصِحٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَأَنْ يُؤَدِّبَ الرَّجُلُ وَلَدَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَتَصَدَّقَ بِصَاعٍ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَنَاصِحٌ هُوَ ابْنُ الْعَلَاءِ كُوفِيٌّ لَيْسَ عِنْدَ أَهْلِ الحَدِيثِ بِالقَوِيِّ وَلَا يُعْرَفُ هَذَا الحَدِيثُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ وَنَاصِحٌ شَيْخٌ آخَرُ بَصْرِيٌّ، يَرْوِي عَنْ عَمَّارِ بْنِ أَبِي عَمَّارٍ وَغَيْرِهِ وَهُوَ أَثْبَتُ مِنْ هَذَا
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-1874.
Tirmidhi-Shamila-1951.
Tirmidhi-Alamiah-1874.
Tirmidhi-JawamiulKalim-1870.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46162-நாஸிஹ் பின் அப்துல்லாஹ் அத்தமீமீ என்பவர் பற்றி, ஹஸன் பின் ஸாலிஹ் என்பவர் மட்டுமே இவரை நல்ல மனிதர் என்று கூறியுள்ளார்.
- அம்ர் பின் அலீ அல்ஃபல்லாஸ் அவர்கள், இவர் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக முன்கரான ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.
- இவ்வாறே இமாம் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
மஸ்லமா பின் ஹஜ்ஜாஜ், அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்ற பலர் இவரை பலவீனமானவர் என்றும் முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளனர். - இவர் நல்லமனிதர் என்றாலும் அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர் என தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும், இவர் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்களும் கூறியுள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/205, தக்ரீபுத் தஹ்தீப்-1/994)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கம் போதிப்பது பற்றி குர்ஆன் வசனங்கள், வேறு சரியான ஹதீஸ்கள் உள்ளன.
1 . இந்தக் கருத்தில் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- நாஸிஹ் பின் அப்துல்லாஹ் —> ஸிமாக் பின் ஹர்ப் —> ஜாபிர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, திர்மிதீ-1951 , முஸ்னத் பஸ்ஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-,
சமீப விமர்சனங்கள்