தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2801

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

பொதுக் குளியலறைக்குள் குளிப்பது குறித்து வந்துள்ளவை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், கீழாடை அணியாமல் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் குளிக்க வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், தனது மனைவியைக் (திறந்தவெளி) பொதுக் குளியலறைக்குள் அனுப்ப வேண்டாம்.

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர், மதுபானம் பரிமாறப்படும் உணவு மேசையில் அமர வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ‘ஹஸன் ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். தாவூஸ் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.

“லைஸ் பின் அபூஸுலைம் உண்மையாளர் தான்; எனினும் சில நேரங்களில் அவர் தவறாக அறிவிப்பார்” என முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள் கூறினார்.

“லைஸ் என்பவரின் ஹதீஸ்கள் மகிழ்ச்சி தரும் விதத்தில் (ஆதாரபூர்வமாக) இருப்பதில்லை. காரணம் மற்றவர்கள் ‘மவ்கூஃபாக-நபித்தோழரின் சொல்லாக’ அறிவிப்பதை இவர் ‘மர்பூஃவாக-நபியின் சொல்லாக’ அறிவிப்பார். அதனால் தான் அறிஞர்கள் அவரைப் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்” என்று அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி அவர்கள் குறிப்பிட்டார்.

(திர்மிதி: 2801)

بَابُ مَا جَاءَ فِي دُخُولِ الحَمَّامِ

حَدَّثَنَا القَاسِمُ بْنُ دِينَارٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُصْعَبُ بْنُ المِقْدَامِ، عَنْ الحَسَنِ بْنِ صَالِحٍ، عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ طَاوُسٍ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يَدْخُلِ الحَمَّامَ بِغَيْرِ إِزَارٍ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يُدْخِلْ حَلِيلَتَهُ الحَمَّامَ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلَا يَجْلِسْ عَلَى مَائِدَةٍ يُدَارُ عَلَيْهَا بِالخَمْرِ»

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ طَاوُوسٍ، عَنْ جَابِرٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: «لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ صَدُوقٌ وَرُبَّمَا يَهِمُ فِي الشَّيْءِ» وَقَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ: «لَيْثٌ لَا يُفْرَحُ بِحَدِيثِهِ، كَانَ لَيْثٌ يَرْفَعُ أَشْيَاءَ لَا يَرْفَعُهَا غَيْرُهُ فَلِذَلِكَ ضَعَّفُوهُ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2725.
Tirmidhi-Shamila-2801.
Tirmidhi-Alamiah-2725.
Tirmidhi-JawamiulKalim-2744.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்-முஹம்மத் பின் ஈஸா

2 . காஸிம் பின் ஸகரிய்யா பின் தீனார்-அல்குரைஷீ

3 . முஸ்அப் பின் மிக்தாம்

4 . ஹஸன் பின் ஹய் பின் ஸாலிஹ்

5 . லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன்

6 . தாவூஸ் பின் கைஸான்

7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34781-லைஸ் பின் அபூஸுலைம்-லைஸ் பின் அய்மன் என்பவர் பற்றி பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் மூளைக்குழம்பிவிட்டார். இவரின் எந்த செய்திகள் சரியானவை எந்த செய்திகள் தவறானவை என பிரித்து அறியமுடியவில்லை; எனவே இவர் கைவிடப்பட்டுவிட்டார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/484, தக்ரீபுத் தஹ்தீப்-5721)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.


இந்தக் கருத்தில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4010,

2 comments on Tirmidhi-2801

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவை சிறிது வார்த்தை மாற்றங்களுடன், கூடுதல் குறைவாக வந்துள்ளன. அனைத்திலும் சில விமர்சனம் உள்ளது. எனவே இதை சிலர் ஹஸன் லிஃகைரிஹீ என்றும், வேறு சிலர் ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் கூறியுள்ளனர். இன்ஷா அல்லாஹ் பிறகு இதைப் பற்றி விரிவான தகவலை பதிவு செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.