தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-282

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வது வெறுப்புக்குரிய செயல்.

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீயே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதையே உமக்கும் விரும்புகின்றேன். எனக்கு எதை நான் வெறுக்கின்றேனோ அதையே உமக்கும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கு இடையில் (கால்களை நட்டி வைத்து, பிட்டத்தை தரையில் வைத்து) குத்துக்காலிட்டு அமர வேண்டாம்” என்று அல்லாஹ்விற்கான தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ (ரலி) வழியாக வரும் இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் —> ஹாரிஸ் அல்அஃவர் —> அலீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் நாம் அறிகிறோம்.

இதில் இடம்பெறும் ஹாரிஸ் அல்அஃவர் என்பவர் பலவீனமானவர் என அறிஞர்களில் சிலர் குறிப்பிட்டுள்ளனர். எனினும், பெரும்பாலான அறிஞர்கள் இந்தச் செய்தியின் அடிப்படையில் (குந்தியமர்ந்து-குத்துக்காலிட்டு) தொழுவதை வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) எனக் கருதுகின்றனர்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அனஸ் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

(திர்மிதி: 282)

بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الإِقْعَاءِ بَيْنَ السَّجْدَتَيْنِ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ: أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ الحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ:

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا عَلِيُّ، أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي، وَأَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي، لَا تُقْعِ بَيْنَ السَّجْدَتَيْنِ»،

«هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عَلِيٍّ، إِلَّا مِنْ حَدِيثِ أَبِي إِسْحَاقَ، عَنِ الحَارِثِ، عَنْ عَلِيٍّ» وَقَدْ ضَعَّفَ بَعْضُ أَهْلِ العِلْمِ الحَارِثَ الأَعْوَرَ ” وَالعَمَلُ عَلَى هَذَا الحَدِيثِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ: يَكْرَهُونَ الإِقْعَاءَ ” وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَنَسٍ، وَأَبِي هُرَيْرَةَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-282.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.