தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-283

A- A+


ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

இரு ஸஜ்தாக்களுக்கு இடையே குத்துக்காலிட்டு அமர்வதற்கு அனுமதி.

தாஊஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் இரு ஸஜ்தாக்களுக்கிடையில்) குதிகால்களின் மீது குந்தி அமர்வதைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘அது நபிவழியாகும்’ என்று கூறினார்கள். நாங்கள், ‘அது ஒரு மனிதனுக்கு (சிரமமான அல்லது) கடினமானதாக நாங்கள் கருதுகிறோம்’ என்று கூறினோம். அதற்கு அவர்கள், ‘மாறாக, அது உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்’ என்று கூறினார்கள்.


 

(திர்மிதி: 283)

بَابٌ فِي الرُّخْصَةِ فِي الْإِقْعَاءِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ:

قُلْنَا لِابْنِ عَبَّاسٍ فِي الإِقْعَاءِ عَلَى القَدَمَيْنِ، قَالَ: «هِيَ السُّنَّةُ»، فَقُلْنَا: إِنَّا لَنَرَاهُ جَفَاءً بِالرَّجُلِ، قَالَ: «بَلْ هِيَ سُنَّةُ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»،

هَذَا حَدِيثٌ حَسَنٌ، وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ العِلْمِ إِلَى هَذَا الحَدِيثِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَرَوْنَ بِالإِقْعَاءِ بَأْسًا، وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ مَكَّةَ مِنْ أَهْلِ الفِقْهِ، وَالعِلْمِ، وَأَكْثَرُ أَهْلِ العِلْمِ يَكْرَهُونَ الإِقْعَاءَ بَيْنَ السَّجْدَتَيْنِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-283.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




 

 

 


அரபு மொழியில் ‘இக்ஆ’ (إقعاء) என்று அழைக்கப்படும் அமர்வு முறை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. இந்த இரண்டு வகைகளுக்கும் இடையிலான வேறுபாட்டையும் அதன் சட்டங்களைப் பற்றிய விளக்கம்:

1. முதல் வகை: தடுக்கப்பட்டது.

ஒருவர் தனது இரு பிட்டங்களையும் தரையில் வைத்து, இரண்டு கால்களையும் (கெண்டைக்கால் பகுதியை) செங்குத்தாக நட்டு வைத்து, கைகளை தரையில் ஊன்றி அமர்வதாகும். (முஸ்லிம்-857)

உவமை: இது நாய் அமர்வதைப் போன்ற அமைப்பாகும்.

மொழி அறிஞர்கள்: அபூஉபைதா, அபூஉபைத்-காஸிம் பின் ஸல்லாம் மற்றும் பல மொழி வல்லுநர்கள் இதையே ‘இக்ஆ’ என்று விளக்குகிறார்கள்.

சட்டம்: நபிமொழிகளில் தடுக்கப்பட்ட ‘மக்ரூஹ்’ (வெறுக்கத்தக்க) முறை இதுவாகும்.

2. இரண்டாம் வகை: அனுமதிக்கப்பட்டது.

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் அமரும்போது, தனது இரு பிட்டங்களையும் இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து அமர்வதாகும். அதாவது, பாதங்களை நட்டு வைத்து அதன் மேல் அமருதல்.

ஆதாரம்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது உங்கள் நபியின் வழிமுறையாகும்” என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறிஞர்களின் கருத்து: இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் ‘அல்-புவைதி’ மற்றும் ‘அல்-இம்லா’ ஆகிய நூல்களில், இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் இவ்வாறு அமர்வது ‘முஸ்தஹப்’ (விரும்பத்தக்கது) என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆய்வாளர்கள்: இமாம் பைஹகீ,பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
காழி இயாள் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இந்த முறையையே குறிக்கிறது என்று விளக்கியுள்ளனர்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.