தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-390

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 171

தொழும்போது பாம்பு, தேள் ஆகியவற்றை (அடித்து)க் கொல்வது தொடர்பாக வந்துள்ளவை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பாம்பு, தேள் ஆகிய இரு கறுப்புநிறத்திலானவைகளை தொழும்போது (அவை வந்தாலும்கூட) கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், இப்னு அப்பாஸ் (ரலி), அபூராஃபிஉ (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், `ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.

இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென நபித்தோழர்கள் உள்ளிட்ட அறிஞர்களில் சிலர் கருதுகின்றனர். அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.

அறிஞர்களில் வேறுசிலர், “தொழும் போது பாம்பு, தேள் ஆகிய(வை தென்பட்டால் அ)வற்றைக் கொல்வது வெறுக்கத்தக்கது” என்கின்றனர்.

(இந்தக் கருத்தையே) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் (கொண்டுள்ளார். காரணம்,) “தொழுகைக்கெனத் தனி ஈடுபாடு தேவைப்படுகிறது” (எனும் அறிவிப்பே இதற்குச் சான்றாகும்) என்று குறிப்பிடுகிறார்கள்.

(எனினும் தொழும்போது பாம்பு, தேள் ஆகியவை தென்பட்டால் அவற்றை அடித்துக் கொல்லலாம் எனும்) முதல் முடிவே மிகச் சரியானதாகும்.

(திர்மிதி: 390)

بَابُ مَا جَاءَ فِي قَتْلِ الْأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَلِيِّ بْنِ المُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ ضَمْضَمِ بْنِ جَوْسٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الأَسْوَدَيْنِ فِي الصَّلَاةِ الحَيَّةُ وَالعَقْرَبُ»

وَفِي البَابِ عَنْ ابْنِ عَبَّاسٍ، وَأَبِي رَافِعٍ،: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»، «وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَغَيْرِهِمْ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ» وَكَرِهَ بَعْضُ أَهْلِ العِلْمِ قَتْلَ الحَيَّةِ وَالعَقْرَبِ فِي الصَّلَاةِ ” قَالَ إِبْرَاهِيمُ: «إِنَّ فِي الصَّلَاةِ لَشُغْلًا»، «وَالقَوْلُ الأَوَّلُ أَصَحُّ»


Tirmidhi-Tamil-355.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-390.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.