பாடம்:
(ளுஹா எனும்) முற்பகல்நேரத் தொழுகை குறித்து வந்துள்ளவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ளுஹாத் தொழுகையை 12 ரக்அத்களாக தொழுதால், அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் தங்கத்தாலான மாளிகையை கட்டுகிறான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி உம்மு ஹானீ (ரலி), அபூஹுரைரா (ரலி), நுஐம் பின் ஹம்மார் (ரலி), அபூதர் (ரலி), ஆயிஷா (ரலி), அபூஉமாமா (ரலி), உத்பா பின் அப்துஸ் ஸுலமீ (ரலி), இப்னு அபூஅவ்ஃபா (ரலி), அபூஸயீத் (ரலி), ஸைத் பின் அர்கம் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
அனஸ் (ரலி) அவர்களின் வழியாக வரும் மேற்கண்ட ஹதீஸ் “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இதை இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே நாம் அறிகிறோம்.
(திர்மிதி: 473)بَابُ مَا جَاءَ فِي صَلَاةِ الضُّحَى
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ فُلَانِ بْنِ أَنَسٍ، عَنْ عَمِّهِ ثُمَامَةَ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ صَلَّى الضُّحَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ قَصْرًا مِنْ ذَهَبٍ فِي الجَنَّةِ»
وَفِي البَابِ عَنْ أُمِّ هَانِئٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَنُعَيْمِ بْنِ هَمَّارٍ، وَأَبِي ذَرٍّ، وَعَائِشَةَ، وَأَبِي أُمَامَةَ، وَعُتْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ، وَابْنِ أَبِي أَوْفَى، وَأَبِي سَعِيدٍ، وَزَيْدِ بْنِ أَرْقَمَ، وَابْنِ عَبَّاسٍ: «حَدِيثُ أَنَسٍ حَدِيثٌ غَرِيبٌ» لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ “
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-473.
Tirmidhi-Alamiah-435.
Tirmidhi-JawamiulKalim-435.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அபூகுரைப்-முஹம்மத் பின் அலாஃ
3 . யூனுஸ் பின் புகைர்
4 . முஹம்மத் பின் இஸ்ஹாக்
5 . மூஸா பின் ஃபுலான் பின் அனஸ்-மூஸா பின் ஹம்ஸா
6 . ஸுமாமா பின் அனஸ் பின் மாலிக்
7 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)
இந்தச் செய்தியை முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து,
1 . யூனுஸ் பின் புகைர்,
2 . இப்ராஹீம் பின் ஸஃத்,
3 . ஸலமா பின் ஃபள்ல் ஆகிய 3 பேர் அறிவித்துள்ளனர்.
1 . யூனுஸ் பின் புகைர் அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் சிலவற்றில், முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களின் ஆசிரியரின் பெயர் மூஸா பின் ஃபுலான் பின் அனஸ் என்று இடம்பெற்றுள்ளது.
அபுல்காஸிம் அவர்களின் அறிவிப்பில் இவரின் பெயர் மூஸா பின் ஹம்ஸா பின் அனஸ் என்று இடம்பெற்றுள்ளது.
(சில அறிவிப்பாளர்தொடர்களில் மூஸா பின் அனஸ் என்று உள்ளது. சிலரை இவ்வாறு பாட்டனார் பெயருடன் இணைத்து கூறப்படும் வழக்கம் உள்ளது)
இப்னு அஸாகிர் அவர்களின் அறிவிப்பில் இவரின் பெயர் மூஸா பின் அப்துல்லாஹ் பின் முஸன்னா என்று இடம்பெற்றுள்ளது. (இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர் ஆகும்.)
2 . இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்களின் ஆசிரியரின் பெயர் ஹம்ஸா பின் மூஸா பின் அனஸ் என்று இடம்பெற்றுள்ளது.
3 . ஸலமா பின் ஃபள்ல் அவர்கள் அறிவிக்கும் செய்திகளில் மூஸா பின் ஹம்ஸா பின் அனஸ் என்று இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பாளர்தொடர்களில் வரும் பெயர்களில் மூஸா பின் ஹம்ஸா பின் அனஸ் என்ற பெயரே சரியானதாகும்.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-45731-மூஸா பின் ஹம்ஸா பின் அனஸ் என்பவரிடமிருந்து இப்னு இஸ்ஹாக் அவர்கள் மட்டுமே அறிவித்துள்ளார். இவரைப் பற்றி எந்த அறிஞரின் நன்சான்றோ அல்லது குறையோ இல்லை என்பதால் இவரின் நிலை அறியப்படவில்லை.
(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-29/173, தஹ்தீபுத் தஹ்தீப்-4/192, தக்ரீபுத் தஹ்தீப்-1/987)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
திர்மிதீ, இப்னுல் கய்யிம், இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்ற அறிஞர்களில் சிலர் இதை ஃகரீப் என்றும் சிலர் பலவீனமான செய்தி என்றும் கூறியுள்ளனர்.
(நூல்: ஸாதுல் மஆத்-1/359, அத்தல்கீஸ்-2/20, ளயீஃப் ஜாமிஉஸ் ஸஃகீர்-5658)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1380, திர்மிதீ-473, அல்இலலுல் கபீர்-136, அல்முஃஜமுல் அவ்ஸத்-3955, அல்முஃஜமுஸ் ஸகீர்-506, …
- அல்இலலுல் கபீர்-136.
العلل الكبير للترمذي = ترتيب علل الترمذي الكبير (ص: 85)
136 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ , حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ , عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ , قَالَ: حَدَّثَنِي مُوسَى بْنُ فُلَانِ بْنِ أَنَسِ بْنِ مَالِكٍ , عَنْ عَمِّهِ ثُمَامَةَ بْنِ أَنَسٍ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ صَلَّى الضُّحَى ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ قَصْرًا مِنْ ذَهَبٍ فِي الْجَنَّةِ» .
سَأَلْتُ مُحَمَّدًا فَقَالَ: هَذَا حَدِيثُ يُونُسَ بْنِ بُكَيْرٍ , وَلَمْ يَعْرِفْهُ مِنْ حَدِيثِ غَيْرِهِ
…
2 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3890.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
1 . 12 ரக்அத் சுன்னத் தொழுகையின் சிறப்பு:
பார்க்க: முஸ்லிம்-1319.
2 . ளுஹாத் தொழுகையின் சிறப்பு:
பார்க்க: முஸ்லிம்-1302.
சமீப விமர்சனங்கள்