தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-476

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் (ளுஹா எனும்) முற்பகல் நேரத் தொழுகையின் இரண்டு ரக்அத்களை வழமையாக பேணித் தொழுதால் அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு (அதிகமாக) இருந்தாலும் (அல்லாஹ்வால்) மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரிடமிருந்து வகீஃ பின் ஜர்ராஹ், நள்ர் பின் ஷுமைல் போன்ற சில அறிஞர்களும் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவரே (தனித்து) அறிவித்துள்ளார். (மற்ற எவரும் அறிவிக்கவில்லை) என்றே நாம் அறிகிறோம்.

(திர்மிதி: 476)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ، عَنْ شَدَّادٍ أَبِي عَمَّارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ حَافَظَ عَلَى شُفْعَةِ الضُّحَى غُفِرَ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ»

وَقَدْ رَوَى وَكِيعٌ، وَالنَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ هَذَا الحَدِيثَ، عَنْ نَهَّاسِ بْنِ قَهْمٍ «وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-476.
Tirmidhi-Alamiah-438.
Tirmidhi-JawamiulKalim-438.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . முஹம்மத் பின் அப்துல்அஃலா

3 . யஸீத் பின் ஸுரைஃ

4 . நஹ்ஹாஸ் பின் கஹ்ம்

5 . ஷத்தாத் பின் அப்துல்லாஹ்-அபூஅம்மார்

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46718-நஹ்ஹாஸ் பின் கஹ்ம் என்பவர் பற்றி, இமாம் யஹ்யா அல்கத்தான், இமாம் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸயீ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இப்னு அதீ,பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்றும்; இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும்; இவர் முன்கருல் ஹதீஸ் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
  • யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
    இறப்பு ஹிஜ்ரி 168 / 198
    ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அல்கத்தான் அவர்கள், இவர் அதாஃ —>  இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • இமாம் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவர் பலமானவர்களின் ஹதீஸ்களுக்கு மாற்றமாக அறிவிப்பவர். அதனால் இவரின் ஹதீஸ்களை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/243)


  • மேலும் இதில் வரும் ராவீ-19082-ஷத்தாத் அபூஅம்மார் அவர்கள் அவ்ஃப் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    (ரலி), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) ஆகியோரிடமிருந்து எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்று இமாம் ஸாலிஹ் பின் முஹம்மத் அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-12/399)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-, அஹ்மத்-9716 , 10447 , 10480 , முஸ்னத் அப்து பின் ஹுமைத்-, திர்மிதீ-476 , இப்னு மாஜா-1382 ,


  • ளுஹாத் தொழுகையின் சிறப்பு குறித்து வந்துள்ள மற்ற சரியான செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-1302 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.