அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார் என்னை விட்டு காப்பாற்றும்படி உன்னிடம் கேட்கிறார். எனவே என்னை விட்டு அவரைக் காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.
ஒரு அடியார், அல்லாஹ்விடம் ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “என் இறைவா! உன்னுடைய இன்ன அடியார் என்னை உன்னிடம் கேட்டுள்ளார். எனவே அவரை என்னுள் நுழையச் செய்வாயாக!” என்று சொர்க்கம் கூறுகிறது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(musnad-ishaq-ibn-rahawayh-213: 213)أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ لَيْثِ بْنِ أَبِي سُلَيْمٍ، عَنْ يُونُسَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
مَا اسْتَجَارَ عَبْدٌ مِنَ النَّارِ سَبْعَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النَّارُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا اسْتَجَارَكَ مِنِي فَأَجِرْهُ، وَلَا يَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ سَبْعَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ الْجَنَّةُ: يَا رَبِّ إِنَّ عَبْدَكَ فُلَانًا سَأَلَنِي فَأَدْخِلْهُ
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Tamil-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-TamilMisc-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Shamila-213.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-Alamiah-.
Musnad-Ishaq-Ibn-Rahawayh-JawamiulKalim-177.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49794-யூனுஸ் பின் கப்பாப் என்பவர் பற்றி சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், சிலர் இவர் ராஃபிளா கொள்கையில் ஊறிப்போனவர்; உஸ்மான் (ரலி) அவர்களை திட்டக்கூடியவர்; இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்றும், சிலர் முன்கருல் ஹதீஸ் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை நம்பகமானவர் என்றும் தவறிழைப்பவர் என்றும், ராஃபிளா கொள்கையுடையவர் என்று விமர்சிக்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/468, தக்ரீபுத் தஹ்தீப்-1/1098)
இந்த செய்தியை அபூஅல்கமா அவர்களிடமிருந்து பலமானவரான யஃலா பின் அதாஃ அவர்கள் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் கூற்றாகத்தான் அறிவித்துள்ளார். (பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702)
- மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் யூனுஸ் என்பவர் யூனுஸ் பின் யஸீத் ஆவார் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, ஜரீர் பின் அபூஹாஸிம் அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யூனுஸ் பின் யஸீத் தான். யூனுஸ் பின் கப்பாப் அல்ல என்று கூறி இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-2506)
1 . ஆனால் இது தவறாகும். ஏனெனில் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், லைஸ் பின் அபூஸுலைம் என்பவர் யூனுஸ் பின் கப்பாப் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார் என்று தான் அறிவிப்பாளர்தொடரைக் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-11/188).
2 . இந்த செய்தியை மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் ஜரீர் பின் அப்துல்ஹமீத் என்பவர் லைஸ் பின் ஸுலைம் —> யூனுஸ் —> அபூஹாஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
ஆனால் முஸ்னத் அபூயஃலா-6192 இல் ஜரீருக்கும், யூனுஸ் என்பவருக்கும் இடையில் லைஸ் விடப்பட்டு ஜரீர் —> யூனுஸ் —> அபூஹாஸிம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்று வந்துள்ளதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதில் இடம்பெறும் ஜரீர் என்பவர் ஜரீர் பின் அபூஹாஸிம் என்று நினைத்து இவரின் ஆசிரியர் யூனுஸ் பின் யஸீத் என்ற அடிப்படையில் இந்த செய்தியை சரியானது என்று கூறிவிட்டார். இதில் இடம்பெறும் ஜரீர் என்பவர் ஜரீர் பின் அப்துல்ஹமீத் என்பதே சரி என்பதால் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை சரியானது என்று கூறியிருப்பது தவறு என சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2702 .
சமீப விமர்சனங்கள்