பாடம்:
ஒருவர் தன்னை வெறுக்கக்கூடியவர்களுக்கு தொழைவைப்பது பற்றி வந்துள்ள கண்டனம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவரின் தொழுகைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை வானை நோக்கியும் உயராது. (ஏன்) அவர்களின் தலையைக் கூட கடந்து செல்லாது.
அவர்கள்:
1 . மக்கள் அவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்.
2 . கட்டளையின்றி (அனுமதியின்றி) ஜனாஸா தொழுகை நடத்துபவர்.
3 . இரவில் தன் கணவன் அழைத்தும் அவருக்கு கட்டுப்படாமல் மறுத்தவிட்ட பெண்.
அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)
(ibn-khuzaymah-1518: 1518)بَابُ الزَّجْرِ عَنْ إِمَامَةِ الْمَرْءِ مَنْ يَكْرَهُ إِمَامَتَهُ
نا عِيسَى بْنُ إِبْرَاهِيمَ، نا ابْنُ وَهْبٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ عَطَاءِ بْنِ دِينَارٍ الْهُذَلِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
ثَلَاثَةٌ لَا تُقْبَلُ مِنْهُمْ صَلَاةٌ، وَلَا تَصْعَدُ إِلَى السَّمَاءِ، وَلَا تُجَاوِزُ رُءُوسَهُمْ: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَرَجُلٌ صَلَّى عَلَى جَنَازَةٍ وَلَمْ يُؤْمَرْ، وَامْرَأَةٌ دَعَاهَا زَوْجُهَا مِنَ اللَّيْلِ فَأَبَتْ عَلَيْهِ
Ibn-Khuzaymah-Tamil-.
Ibn-Khuzaymah-TamilMisc-.
Ibn-Khuzaymah-Shamila-1518.
Ibn-Khuzaymah-Alamiah-.
Ibn-Khuzaymah-JawamiulKalim-1440.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28486-அதாஉ பின் தீனார் அவர்கள் எந்த நபித்தோழரையும் சந்தித்ததில்லை. இவர் தாபிஈன்களிடமிருந்து தான் ஹதீஸ்களை அறிவிப்பார். எனவே இது முஃளல் என்பதின் படி பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், மேற்கண்ட மூன்று விசயங்களில் இரண்டாவது விசயத்தைத் தவிர மற்றவை சரியானது என்று ஹதீஸ் எண்-1519 இல் இடம்பெறும் செய்தியின் படி கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-650, மிஷ்காத்-1112)…
8 . இந்தக் கருத்தில் அதாஉ பின் தீனார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு குஸைமா-1518 ,
மேலும் பார்க்க: திர்மிதீ-360 .
சமீப விமர்சனங்கள்