தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2350

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் தனது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் போது தொழுகை அறிவிப்பை செவியுற்றால் (என்ன செய்வது?)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

(அபூதாவூத்: 2350)

بَابٌ فِي الرَّجُلِ يَسْمَعُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ

حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2350.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2006.




  • இந்த செய்தி சரியானதல்ல என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் விமர்சித்துள்ளார்.

(நூல்: இலலுல் ஹதீஸ்-759)

இதற்கு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் விரிவான விளக்கத்தைக் கூறாவிட்டாலும் ஆய்வு செய்து பார்க்கும் போது இந்த செய்தியை ஹம்மாத் பின் ஸலமா மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். மேலும் இவர் இந்த செய்தியை சரியாக மனனமிடவில்லை என்பதால் தான் பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடரில் இந்த செய்தியை அறிவித்துள்ளார். மேலும் அம்மார் வழியாக நபித்தோழரின் கூற்றாகவே இந்த செய்தி வந்திருக்கும்போது சிலர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பது இதில் குறையை ஏற்படுத்துகிறது.

மேலும் இந்த செய்தியின் கருத்து (வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! (அல்குர்ஆன்-2:187) வசனத்திற்கும், மற்ற பலமான ஹதீஸ்களுக்கும் (பார்க்க: புகாரி-622) மாற்றமாக இருப்பதால் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற பலர் இதை முன்கர் என்று விமர்சித்துள்ளனர். இந்தக் கருத்தில் வரும் மற்ற செய்திகளும் பலவீனமாக இருப்பதால் இவை பலவீனமானவை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்…

என்றாலும் சிலர் இந்த செய்தியை சரியானது என்றும் இதன்பிரகாரம் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறப்பட்டாலும் அப்போது கையில் இருப்பதை உண்பது தவறல்ல; இது விதிவிலக்கு தரும் சட்டம் என்றும் கூறுகின்றனர்.

இந்தச் செய்தியை சரியானது என்று கூறக்கூடியவர்களில் வேறு சிலர் இந்தச் செய்தியில் கூறப்படும் பாங்கு, முதல் பாங்கு என்று விளக்கம் கூறுகின்றனர்.

….

…(நூல்: அஸ்ஸஹீஹா-1394)

ஆய்வுக்காக:  إذا سمع أحدكم النداء، والإناء على يده .

நாம் பார்த்தவரை இந்த செய்தி பலவீனமானது என்று முடிவு எடுப்பதே சரியாகத் தெரிகிறது.

1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஹம்மாத் பின் ஸலமா —> முஹம்மது பின் அம்ர் —> அபூஸலமா —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: அஹ்மத்-9474 , 10629 , அபூதாவூத்-2350 , தாரகுத்னீ-2182 , ஹாகிம்-729 , 740 , 1552 , குப்ரா பைஹகீ-8019 ,

  • ஹம்மாத் பின் ஸலமா —> அம்மார் பின் அபூஅம்மார் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) —> நபி (ஸல்) 

பார்க்க: அஹ்மத்-10630 , ஹாகிம்-740 , குப்ரா பைஹகீ- 8020 ,

  • ஹம்மாத் பின் ஸலமா —> யூனுஸ் பின் உபைத் —> ஹஸன் பஸரீ  —> நபி (ஸல்) 

பார்க்க: அஹ்மத்-9474 ,

2 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-14755 .

3 . பிலால் பின் ரபாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-23889 .

4 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-7410 .

5 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2010 .

6 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: ..

7 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7369 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-671 ,

2 comments on Abu-Dawood-2350

  1. அல்ஹம்துலில்லாஹ்! மிக அவசியமான, அருமையான இந்தப் பணியை இடைவிடாமல் தொடர்ந்து செய்துக்கொண்டே இருப்பதற்கு அல்லாஹ் உங்களுக்கு பேருதவி புரிவானாக! இதில் பங்குபெறும் அனைவருக்கும் ஈருலகிலும் அருள்புரிவானாக!

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.