தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-27195

 

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்: 228

நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவது பற்றி வந்துள்ளவை.

27195. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் (அரசில் பணிபுரியும்) பணியாளர் ஒருவர் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவதில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்தது. எனவே, “நீ கைலூலா எனும் தூக்கம் தூங்கிக் கொள்! ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) தூங்கமாட்டான் என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அவருக்கு கடிதம் எழுதி (அனுப்பி)னார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

ஷைத்தான்கள் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கமாட்டார்கள்.

(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 27195)

228- ما ذكِر فِي القائِلةِ نِصف النَّهارِ.

حَدَّثنا أَبُو أُسَامَةَ، عَنْ زَائِدَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ قَالَ:

بَلَغَ عُمَرُ أَنَّ عَامِلاً لَهُ لاَ يَقِيل، فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ: قِلْ، فَإِنِّي حُدِّثْتُ أَنَّ الشَّيْطَانَ لاَ يَقِيلُ،

قَالَ مُجَاهِدٌ: إِنَّ الشَّيَاطِينَ لاَ يَقِيلُونَ.


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-27195.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-26094.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35123-முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள், ஹிஜ்ரீ 21 இல் பிறந்தவர் ஆவார். உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 23 இல் மரணமடைந்தார். எனவே முஜாஹித் அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் நேரடியாக இந்தத் தகவலை கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் இது முன்கதிஃ என்பதால் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2, 3 . இந்தக் கருத்தில் உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-27195 ,

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.