தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-28

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(almujam-alawsat-28: 28)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ قَالَ: نا عَلِيُّ بْنُ عَيَّاشٍ الْحِمْصِيُّ قَالَ: نا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الْأَطْرَابُلُسِيُّ، عَنْ كَثِيرِ بْنِ مَرْوَانَ، عَنْ يَزِيدَ أبي خَالِدٍ الدَّالِانِيِّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«قِيلُوا فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي خَالِدٍ الدَّالِانِيِّ إِلَّا كَثِيرٌ، وَلَا عَنْ كَثِيرٍ إِلَّا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى، تَفَرَّدَ بِهِ: عَلِيُّ بْنُ عَيَّاشٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-28.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-28.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34547-கஸீர் பின் மர்வான்-அபூமர்வான் (முஹம்மத் பின் கஸீர் என்பவரின் தந்தை) என்பவர் பற்றி இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்றும்; பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறே வேறு சிலஅறிஞர்கள் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும், பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். (இவரைப் பற்றி யாரும் நல்லவிதமாக கூறவில்லை)

(நூல்: லிஸானுல் மீஸான்-6/413, தஃஜீல்-2/147)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் திப்புன் நபவீ-151 , அக்பாரு அஸ்பஹான்-617 , 1208 , 1509 ஆகிய எண்களில் இடம்பெறும் செய்திகளை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஹஸன் லிதாதிஹீ என்றும் அல்லது குறைந்தபட்சம் உமர் (ரலி) வழியாக வரும் செய்தியின் மூலம் இவை ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரமுடையவை என்றும் கூறியுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-1647)

நம்முடைய பார்வையில் இந்தச் செய்திகளில் இடம்பெறும் சிலரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதாலும், சிலர் அறியப்படாதவர்கள் என்பதாலும்; சிலர் பலவீனமானவர்கள் என்பதாலும் இவை ஹஸன் லிஃகைரிஹீ என்ற தரமுடைய செய்திகளாகும்.

الجامع لعلوم الإمام أحمد – علل الحديث (15/ 335)
860 – ما جاء في القيلولة
حديث أنس -رضي اللَّه عنه-: “قيلوا فإن الشيطان لا يقيل” (2).
قال الإمام أحمد: لا أعرفه، إنما هذا عن منصور، عن مجاهد (3) عن عمر (4).

இந்தச் செய்தி பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர்கள், இது தனக்கு தெரியாது என்றும் இந்தக் கருத்து மன்ஸூர் —> முஜாஹித் —> உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் வந்துள்ளது என்றும் பதிலளித்தார்.

(நூல்: அல்ஜாமிஉ லிஉலூமில் இமாம் அஹ்மத்-860)


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் —> அனஸ் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28.


அத்தத்வீன்-3/198.

التدوين في أخبار قزوين (3/ 198)
الاسم التاسع عشر
عبد الْغَنِيِّ بْنُ مُحَمَّدٍ الشَّحَّاذِيُّ سَمِعَ الأُسْتَاذَ الشَّافِعِيَّ حَدَّثَ فِي الْجَامِعِ عَنْ أَبِي بَدْرٍ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ النُّهَاوَنْدِيِّ عَنْ أَبِي الْفُرَاتِيِّ عَنْ جَدِّهِ أَبِي عَمْرٍو أنبا عِمْرَانَ بْنِ مُوسَى أَنْبَأَ أَبُو بَكْرٍ عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الأَنْمَاطِيُّ ثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ الْوَاسِطِيُّ ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ سَيَّارٍ الْوَاسِطِيِّ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ: “قَيِّلُوا فَإِنَّ الشَّيْطَانَ لا يُقَيِّلُ”.
عَبْد الغني بْن أبي نعيم الواريني أَبُو نصر سمع شرح الغاية للفارسي من مُحَمَّد بْن آدم المقرئ سنة أربع وثلاثين وخمسمائة وفيه معجزين أي مثبطين ومانعين والخط يدل عليه ومعاجزين معاندين مشاقين ويقال عاجزت فلانا أي غالبته على إظهار العجز.

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41481-அபூபத்ர்-முஹம்மத் பின் அலீ, ராவீ-2983-அபூஅம்ர்-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் அபூஅஹ்மத்
, ராவீ-32052-இம்ரான் பின் மூஸா ஆகியோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


முவள்ளிஹு அவ்ஹாமில் ஜம்இ வத்தஃப்ரீக்-2/158.

«موضح أوهام الجمع والتفريق» (2/ 158):

«240 – أَخْبَرَنَا أَبُو طَالِبٍ مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ الْفَتْحِ حَدَّثَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنَ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ الْحَرْبِيُّ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ عَنْ سَيَّارٍ الْوَاسِطِيِّ عَنْ إِسْحَاقَ بْنِ عبد الله بن أبي طَلْحَة عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: لَا تَتَصَبَّحُوا وَقِيلُوا فَإِنَّ الشَّيَاطِينَ لَا تَقِيلُ

قَالَ أَبُو الْحَسَن تفرد بِهِ أَبُو الحكم سيار بْن وردان عَن إِسْحَاق وَتفرد بِهِ عَنهُ عباد بْن كثير وَلم يروه عَنهُ غير إِسْمَاعِيل بْن عَيَّاش»

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20653-அப்பாத் பின் கஸீர் அல்பஸரீ, அஸ்ஸஃகபீ என்பவர் பற்றி ஸுஃப்யான் ஸவ்ரீ,பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
ஆகியோர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சித்துள்ளனர். வேறுசில அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்.

(நூல்கள்: அல்காமில்-5/538, தஹ்தீபுத் தஹ்தீப்-2/280, தக்ரீபுத் தஹ்தீப்-1/482)

இதில் வரும் அப்பாத் என்பவர், அப்பாத் பின் கஸீர் அர்ரம்லீ என்றால் இவரும் பலவீனமானவர் ஆவார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/281)

எனவே இது பலவீனமான அல்லது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


  • தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 204
    வயது: 71
    —> இம்ரான் பின் தாவர்-அல்கத்தான் —> கதாதா —> அனஸ் (ரலி)

பார்க்க: தபகாதுல் முஹத்திஸீன்-4/176.

طبقات المحدثين بأصبهان والواردين عليها (4/ 176)

605 – أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ إِبْرَاهِيمَ الْقَطَّانُ
شَيْخٌ ثِقَةٌ، كَثِيرُ الْحَدِيثِ، مَاتَ فِي شَعْبَانَ سَنَةَ خَمْسَ عَشْرَ وَثَلَاثِمِائَةٍ.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ , قال: ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ يَزِيدَ , قال: ثنا أَبُو دَاوُدَ , عَنْ عِمْرَانَ الْقَطَّانِ , عَنْ قَتَادَةَ , عَنْ أَنَسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قِيلُوا فَإِنَّ الشَّيْطَانَ لا يَقِيلُ»

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41879-முஹம்மத் பின் உமர் பின் யஸீத் யாரென அறியப்படாதவர்; இவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


முஃஜம் பின் முக்ரிஃ-647.

معجم ابن المقرئ (ص: 206)

647 – قَرَأْتُ بِخَطِّ وَالِدِي إِبْرَاهِيمَ بْنِ عَلِيِّ بْنِ عَاصِمٍ الْمُقْرِئِ رَحِمَهُ اللَّهُ ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ أَخُو رُسْتَةَ ثنا أَبُو دَاوُدَ، ثنا عِمْرَانُ، عَنْ قَتَادٍ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قِيلُوا فَإِنَّ الشَّيْطَانَ لَا يَقِيلُ»

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41879-முஹம்மத் பின் உமர் பின் யஸீத் யாரென அறியப்படாதவர்; இவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


அக்பாரு அஸ்பஹான்-617 , 1208 , 1509 , திப்புன் நபவீ-151 ,


2 . உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-27195 .

3 . முஜாஹித் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-27195 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1693 , புகாரி-905 ,


இந்தச் செய்தி அறிவிப்பாளர்தொடரைக் கவனித்து பலவீனமாக இருந்தாலும் நண்பகலில் சிறிதுநேரம் தூங்குவது நல்லது என்றே உடலியல் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க: மதியம் தூங்குவது . (தமிழில் மாற்றிக்கொள்ளவும்)

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.