நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஸஹர்’ உணவு உட்கொள்வதன் மூலம் பகல்நேர நோன்புக்கும், நண்பகல் ஓய்வு மேற்கொள்வதன் மூலம் இரவில் நின்று வழிபடுவதற்கும் உதவிதேடிக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
(இப்னுமாஜா: 1693)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَ: حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ، عَنْ سَلَمَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اسْتَعِينُوا بِطَعَامِ السَّحَرِ عَلَى صِيَامِ النَّهَارِ، وَبِالْقَيْلُولَةِ عَلَى قِيَامِ اللَّيْلِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1693.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1683.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16183-ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் பற்றி சிலர் பாராட்டியிருந்தாலும் இமாம் அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அபூஸுர்ஆ, அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற பலர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். - புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இவர் அதிகம் தவறிழைப்பவர் என்றும்; முன்கருல் ஹதீஸ் என்றும் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/635, தக்ரீபுத் தஹ்தீப்-1/340)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-1693 , இப்னு குஸைமா-1939 , அல்முஃஜமுல் கபீர்-11625 , ஹாகிம்-1551 ,
2 . தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 ,
சமீப விமர்சனங்கள்