தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Thibbun-Nabawi-Abu-Nuaym-151

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 25

தூங்குவதற்கு சிறந்த நேரங்கள்; வெறுப்பிற்குரிய நேரங்கள் பற்றியவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கிங் கொள்ளுங்கள். ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) நண்பகல் நேரத்தில் தூங்கமாட்டான்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(thibbun-nabawi-abu-nuaym-151: 151)

[25] باب أوقات النوم المحمودة والمكروهة

حَدَّثَنا عبد الله بن محمد، حَدَّثَنا علي بن الصباح، حَدَّثَنا عبد الله بن عُمَر بن يزيد الزُّهْرِيّ، حَدَّثَنا أبو داود، حَدَّثَنا عمران القطان، عَن قتادة، عَن أنس، قال: قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم:

قيلوا فإن الشياطين لا تقيل.


Thibbun-Nabawi-Abu-Nuaym-Tamil-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-TamilMisc-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Shamila-151.
Thibbun-Nabawi-Abu-Nuaym-Alamiah-.
Thibbun-Nabawi-Abu-Nuaym-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25207-அப்துல்லாஹ் பின் உமர் பின் யஸீத் அஸ்ஸுஹ்ரீ என்பவரின் நம்பகத்தன்மை பற்றி கூறப்படவில்லை.
  • இவரைப் பற்றி குறிப்பிட்டுள்ள இப்னு அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 240
    இறப்பு ஹிஜ்ரி 327
    வயது: 87
    அவர்கள் இவரின் ஆசிரியர்கள், மாணவர்களை மட்டுமே கூறியுள்ளார். இவரின் குறை, நிறைகளைப் பற்றி கூறவில்லை.
  • இவ்வாறே இவரின் செய்திகளை பதிவு செய்துள்ள அபூநுஐம் அவர்களும் இவரின் தரம் பற்றி எதுவும் கூறவில்லை.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவர் சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார் என்றும்; அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/111, தாரீகுல் இஸ்லாம்-6/106)


மேலும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்களில் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
தயாலிஸீ பிறப்பு ஹிஜ்ரி 133
இறப்பு ஹிஜ்ரி 204
வயது: 71
அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் பலவாறு கூறப்பட்டுள்ளது.

1 . அப்துல்லாஹ் பின் உமர் பின் யஸீத். (அக்பாரு அஸ்பஹான்- திப்புன் நபவீ-151)

(இவரை அப்துர்ரஹ்மான் பின் உமர் பின் யஸீத்-ருஸ்தஹ் என்பவரின் சகோதரர் என்று கூறப்படுகிறது. இவரின் மகன் பெயர் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் உமர் ஆகும்)

2 . முஹம்மத் பின் உமர் பின் யஸீத். (அக்பாரு அஸ்பஹான்-617 , 1509 , தபகாதுல் முஹத்திஸீன்-4/176 , முஃஜம் பின் முக்ரிஃ-647 ,

(இவரையும் அப்துர்ரஹ்மான் பின் உமர் பின் யஸீத்-ருஸ்தஹ் என்பவரின் சகோதரர் என்று கூறப்படுகிறது; இவரின் மகன் பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் உமர் ஆகும்)

3 . உமர் பின் யஸீத். (அக்பாரு அஸ்பஹான்-1208)

இவரின் மகன்களே மேற்கண்ட அப்துல்லாஹ் பின் உமர் பின் யஸீத், முஹம்மத் பின் உமர் பின் யஸீத், அப்துர்ரஹ்மான் பின் உமர் பின் யஸீத்-ருஸ்தஹ் ஆகிய மூவராக இருக்கலாம்.


இவரின் நம்பகத்தன்மை பற்றி அறியப்படவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-28 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.