முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், தனது ஒரு அடியாரை நோயின் மூலம் சோதிக்கும்போது அவரின் இடப்புறத்து வானவரிடம், “உனது எழுதுக்கோலை உயர்த்திவிடுவீராக! என்றும், அவரின் வலப்புறத்து வானவரிடம், அவர் (இதற்கு முன்) வழமையாக செய்துவந்த நற்செயல்களை (இப்போதும்) எழுதுவீராக!” என்றும் கட்டளையிடுகிறான்.
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 10815)حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ بْنَ رُوَيْمٍ، يَذْكُرُ عَنِ الْقَاسِمِ، عَنْ مُعَاذٍ، قَالَ:
إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ بِالسَّقَمِ، قَالَ لِصَاحِبِ الشِّمَالِ: ارْفَعْ، وَقَالَ لِصَاحِبِ الْيَمِينِ: اكْتُبْ لِعَبْدِي مَا كَانَ يَعْمَلُ
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-10815.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-10588.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . ஜஃபர் பின் அவ்ன்
3 . ஹிஷாம் பின் ஸஃத்
4 . உர்வா பின் ருவைம்
5 . காஸிம் பின் அப்துர்ரஹ்மான்
6 . முஆத் பின் ஜபல் (ரலி)
இது மவ்கூஃபான செய்தி என்பதுடன், இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28360-உர்வா பின் ருவைம் அவர்கள் அதிகம் முர்ஸலாக (அதாவது தனது ஆசிரியரிடமிருந்து ஸிமாஃவை குறிப்பிடாமல் அறிவிப்பவர்) என்ற விமர்சனம் உள்ளது. மிஸ்ஸீ இமாம் அவர்கள் இவர் காஸிம் அவர்களிடமிருந்து பலவீனமான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டும் கூறியுள்ளார். (அது எந்தச் செய்தி என்பதையோ எந்த அறிவிப்பாளர்தொடர் என்பதையோ குறிப்பிடவில்லை)
(நூல்: தஹ்தீபுல் கமால்-20/8)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். என்றாலும் இந்தக் கருத்தில் வேறு சரியான செய்திகளும் உள்ளன.
(பார்க்க: புகாரி-2996, அஹ்மத்-6482…)
1 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10815, ஷுஅபுல் ஈமான்-9474,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7765,
சமீப விமர்சனங்கள்