தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3683

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(துணைப் பாடம்)

“அல்லாஹ்வே! அபூஜஹ்ல் பின் ஹிஷாம் அல்லது உமர் பின் கத்தாப் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள்.

காலை நேரத்தில் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த அறிவிப்பாளர்தொடர் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதில் இடம்பெறும் நள்ர் பின் அப்துர்ரஹ்மான்-அபூஉமர் என்பவரை சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.

(திர்மிதி: 3683)

بَابٌ

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ النَّضْرِ أَبِي عُمَرَ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«اللَّهُمَّ أَعِزَّ الإِسْلَامَ بِأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ أَوْ بِعُمَرَ بْنِ الْخَطَّابِ» قَالَ: فَأَصْبَحَ فَغَدَا عُمَرُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ

«هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»، وَقَدْ تَكَلَّمَ بَعْضُهُمْ فِي النَّضْرِ أَبِي عُمَرَ، وَهُوَ يَرْوِي مَنَاكِيرَ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3683.
Tirmidhi-Alamiah-3616.
Tirmidhi-JawamiulKalim-3645.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . அபூகுரைப்-முஹம்மத் பின் அலாஃ

3 . யூனுஸ் பின் புகைர்

4 . நள்ர் பின் அப்துர்ரஹ்மான்-அபூஉமர்

5 . இக்ரிமா

6 . இப்னு அப்பாஸ் (ரலி)


 

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46549-நள்ர் பின் அப்துர்ரஹ்மான்-அபூஉமர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும், இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். இவ்வாறே அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    ஆகியோர் இவர் பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளனர்
  • இப்னு நுமைர்,பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.
  • அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளனர்.
  • அபூஸுர்ஆ அவர்கள் இவர் சிறிது பலவீனமானவர் என்றும், தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.

(நூல்கள்: )

அறிஞர்கள் இவரைப் பற்றி விமர்சித்த வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் இதன் கருத்து இவர் மற்ற பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார்; தனித்து அறிவித்துள்ளார் (இவ்வாறே மக்களிடம் பொய் சொல்பவர் என்ற காரணத்தால்) மிக பலவீனமானவர்; விடப்பட்டவர் என்பதாகும்.


5 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • யூனுஸ் பின் புகைர் —> நள்ர் பின் அப்துர்ரஹ்மான் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: திர்மிதீ-3683, அல்முஃஜமுல் கபீர்-,


  • நாஃபிஃ —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
    இறப்பு ஹிஜ்ரி 74
    வயது: 84
    நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
    (ரலி) —> இப்னு அப்பாஸ் (ரலி)

பார்க்க: ஹாகிம்-4484,


மேலும் பார்க்க: திர்மிதீ-3681.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.