தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3972

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

3972. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“அல்லாஹும்ம மத்திஃனீ பிஸம்ஈ, வ பஸரீ, வஜ்அல்ஹுமல் வாரிஸ மின்னீ, வன்ஸுர்னீ அலா மய் யள்லிமுனீ, வகுத் மின்ஹு பிஸஃரீ” என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! என் செவியையும், என் பார்வையையும், எனக்குப் பயனுள்ளவையாக ஆக்குவாயாக! அவ்விரண்டையும் என் வாரிசாக (அதாவது நான் மரணிக்கும் வரை சரியாக இயங்குபவையாக) அமைத்துத் தருவாயாக! எனக்கு அநீதி இழைத்தவனுக்கு எதிராக எனக்கு உதவி செய்வாயாக! மேலும் என் சார்பில் அவனை நீயே பழிவாங்கிக் கொள்வாயாக!)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


حَدثنا يَحْيَى بْنُ مُوسَى, قَالَ: أَخبَرنا جَابِرُ بْنُ نُوحٍ, قَالَ: أَخبَرنا مُحَمَّدُ بْنُ عَمْرٍو, عَنْ أَبِي سَلَمَةَ, عَنْ أَبِي هُرَيْرَةَ, قَالَ:

كَانَ رَسُولُ اللهِ صَلى الله عَليه وسَلم يَدْعُو فَيَقُولُ: اللهُمَّ مَتِّعْنِي بِسَمْعِي وَبَصَرِي وَاجْعَلْهُمَا الوَارِثَ مِنِّي, وَانْصُرْنِي عَلَى مَنْ يَظْلِمُنِي, وَخُذْ مِنْهُ بِثَأْرِي.

قال أَبو عيسى: هذا حديثٌ حسنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-0/3972.
Tirmidhi-Alamiah-3535.
Tirmidhi-JawamiulKalim-3565.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . யஹ்யா பின் மூஸா

3 . ஜாபிர் பின் நூஹ் பின் ஜாபிர்

4 . முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

5 . அபூஸலமா

6 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9982-ஜாபிர் பின் நூஹ் பின் ஜாபிர் என்பவர் பற்றி ஹஃப்ஸ் பின் ஃகியாஸ் அவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை…
  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலமானவர் அல்ல என்றும், பலவீனமானவர் என்றும், இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும் கூறியுள்ளார்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவர் அஃமஷ், இப்னு அபூகாலித் ஆகியோர் வழியாக முன்கராக-பலமானவர்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளார். இவ்வாறு இவர் அதிகம் தவறாக அறிவித்துள்ளார் என்பதால் தனித்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்பவர்களின் பட்டியலில் இவர் சேர்ந்தவர் ஆவார் என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் இவர் சில முன்கரான-ஏற்கமுடியாத செய்திகளை அறிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2/500, அல்காமில்-2/337, தஹ்தீபுல் கமால்-4/459, அல்இக்மால்-3/137, அல்காஷிஃப்-2/197, தஹ்தீபுத் தஹ்தீப்-1/283, தக்ரீபுத் தஹ்தீப்-1/192)

இந்தச் செய்தியின் கருத்தை முஹம்மத் பின் அம்ர் அவர்களிடமிருந்து ஹம்மாத் பின் ஸலமாவும் அறிவித்துள்ளார் என்பதால் இது ஹஸன் லிஃகைரிஹீ ஆகும். இதன்படியே திர்மிதீ இமாம் இதை ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-650.

திர்மிதீ இமாம்

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

யஹ்யா பின் மூஸா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஜாபிர் பின் நூஹ் பின் ஜாபிர்

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா

محمد بن عمرو بن علقمة بن وقاص

இறப்பு: ஹி 145.

தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். சில அறிவிப்புகளை தவறாக அறிவித்துள்ளார்.


இயற்பெயர்: முஹம்மத்

தந்தை பெயர்: அம்ர் பின் அல்கமா

குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ்

குலம்: அல்லைஸீ, அல்மதனீ, அல்ஹிஜாஸீ

இறப்பு: ஹிஜ்ரீ-145

கால கட்டம்: 6.


முஹம்மத் பின் அம்ர் பின் அல்கமா அவர்களின் அறிவிப்பை புகாரீ இமாம் 2 செய்தியிலும், முஸ்லிம் இமாம் 10 செய்திகளிலும் துணை ஆதாரமாக பதிவு செய்துள்ளனர்.

(பார்க்க: புகாரி-782, 3356, முஸ்லிம்-1452)

மேலும் பல ஹதீஸ்நூல்களின் ஆசிரியர்கள் இவர் இடம்பெறும் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.

அப்துல்லாஹ் பின் முபாரக், முஹம்மது பின் அப்துல்லாஹ், அபூஹாதிம், திர்மிதீ, நஸாயீ, இப்னு குஸைமா, இப்னு அதீ போன்ற பல அறிஞர்கள் இவரைப்பற்றி சுமாரானவர் என்று கூறியுள்ளனர். இவரின் அறிவிப்புகளை ஆதாரமாக எடுத்துள்ளனர்.

மாலிக் இமாம், யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜவ்ஸஜானீ போன்றோர் (இவரின் சில அறிவிப்புகளில் ஏற்பட்ட தவறினால்) இவர் அந்தளவிற்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.

(யஹ்யா பின் ஸயீத் அவர்கள் ஆரம்பத்தில் இவரை விமர்சித்தாலும் பிறகு இவரிடமிருந்து ஹதீஸை அறிவித்தார் என்று திர்மிதீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜாமிஉ ஃபில்ஜர்ஹி வத்தஃதீல்-4090)

இப்னு மயீன் அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியதாக அஹ்மத் பின் அபூமர்யம் கூறியுள்ளார்.

இப்னு மயீன் அவர்கள் இவர் அபூஸலமா வழியாக தவறாக அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். அதாவது இவர் ஒரு நேரம் அபூஸலமா கூறினார் என்றும், மற்றொரு நேரம் அபூஸலமாவிடமிருந்து அபூஹுரைரா (ரலி) வழியாகவும் ஹதீஸை அறிவித்தார். இதனால் மக்கள் இவரிடம் ஹதீஸைக் கேட்பதில்லை என்று இப்னு மயீன் அவர்கள் கூறியதாக அபூபக்ர் பின் அபூகைஸமா அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/30, தஹ்தீபுல் கமால்-26/212, தாரீகுல் இஸ்லாம்-3/973, ஸியரு அஃலாமின் நுபலா-6/136, அல்காஷிஃப்-4/177, தஹ்தீபுத் தஹ்தீப்-3/662)

இப்னு மயீன் அவர்கள் விமர்சித்தது இவர், அபூஸலமா வழியாக அறிவிக்கும் தஃப்ஸீர் குறித்த செய்தியின் விசயத்தில் தான் என்று தெரிகிறது...

(இந்த விமர்சனத்தின்படி அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இவர் அறிவித்தால் இவர் போன்று மற்றவர்கள் அறிவித்துள்ளார்களா? என்று பார்க்க வேண்டும். அவ்வாறு மற்றவர்கள் அறிவித்தால் இவரின் செய்தி ஏற்கப்படும். அவ்வாறு மற்றவர்கள் அறிவிக்காவிட்டால் இவரின் செய்தி மறுக்கப்படும் என்றும் சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இவரின் அறிவிப்புகளை ஆய்வு செய்த நடுநிலையான ஹதீஸ்கலை அறிஞர்களின் பார்வையில் சுமாரானவர் என்று கருதப்படுகிறார். எனவே தான் நவவீ, தஹபீ, இப்னு ஹஜர் போன்ற பல அறிஞர்கள் இவரின் செய்திகள் ஹஸன் தரத்தில் அமைந்தவை என்று கூறுவதாக அல்பானீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-எண்-203)

இவர் அறிவிக்கும் செய்திகள் ஹஸன் தரம் என்பதால் இதே செய்தி, வேறு சரியான அறிவிப்பாளர்தொடரிலோ அல்லது ஹஸன் தரத்தில் உள்ள அறிவிப்பாளர்தொடரிலோ வந்தால் இவரின் அறிவிப்பு ஸஹீஹுன் லிகைரிஹீ-துணை சான்றால் சரியானது என்ற தரத்தை அடையும் என்பது ஹதீஸ்கலை விதிப்படி உள்ள சட்டமாகும். எனவே தான் ஒரு செய்தியை முஹம்மது பின் அம்ர் போன்று மற்ற சரியான அறிவிப்பாளர்கள் அறிவித்திருந்தால் இவரின் செய்தியை ஹஸன் ஸஹீஹ் என்று அல்பானீ அவர்கள் கூறுவார்.

இப்னு ஹஜர் அவர்கள் முன்சென்ற அறிஞர்களின் குறை, நிறை விமர்சனத்தின் அடிப்படையில் இவரைப்பற்றி ஸதூக்-நடுத்தரமானவர், என்றாலும் சில அறிவிப்புகளில் தவறுசெய்தவர் என்று கூறியுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள், இவர் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என்பதால் இவரின் செய்திகள் ஹஸன் தரம் என்றும், இவர் மற்றவர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அது ஷாத் ஆகும் என்று கூறியுள்ளார்..

(நூல்கள்: தக்ரீபுத் தஹ்தீப்-1/884, துஹ்ஃபதுல் லபீப்-201, 2/58, அல்மஸாபீஹ்-57)

இன்ஷா அல்லாஹ் இவரைப் பற்றிய கூடுதல் தகவல் பிறகு சேர்க்கப்படும்.

அபூஸலமா

أبو سلمة بن عبد الرحمن بن عوف

இறப்பு: ஹிஜ்ரி 94 அல்லது 104, மதீனா

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்துல்லாஹ்

தந்தை பெயர்: அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்

வம்சம்: குரஷீ அஸ்ஸுஹ்ரீ

புனைப்பெயர்: அபூஸலமா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: ஹிஜ்ரி 20களின் பிற்பகுதியில், மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 94 அல்லது 104, மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரஹ் அவர்கள் அபூஸலமா என்ற குன்யாவால் அறியப்பட்டவர். இவர் மதீனாவில் ஹிஜ்ரி 20களின் பிற்பகுதியில் பிறந்தார். இவர் ஒரு தாபிஈ மற்றும் மதீனாவின் ஏழு ஃபுகஹாக்களில் ஒருவராவார்.

இப்னு ஸஅத், இவர் பலமானவர், ஃபகீஹ், அதிகம் ஹதீஸ் அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். அபூ ஸுர்ஆ இமாம், இவர் பலமானவர், இமாம் என்று கூறியுள்ளார். இவர் மதீனாவில் ஹிஜ்ரி 94 அல்லது ஹிஜ்ரி 104 இல் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப், உஸ்மான் பின் அஃப்பான், தல்ஹா பின் உபைதுல்லாஹ், உபாதா பின் அஸ்ஸாமித், அபூ தர்ரா, ஆயிஷா பின்த் அபூபக்ர், உம்மு ஸலமா, ஸைனப் பின்த் அபூ ஸலமா, அப்துல்லாஹ் பின் ஸலாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): ஸஃத் பின் இப்ராஹீம், அப்துல்மஜீத் பின் ஸஹ்ல், ஸுராரா பின் முஸ்அப், அப்துர்ரஹ்மான் பின் ஹர்மாஸ் அல்அஃரஜ், அப்து ரப்பா பின் ஸயீத், உர்வா பின் அஸ்ஸுபைர், அஸ்ஸுஹ்ரீ, முஹம்மத் பின் இப்ராஹீம் பின் அல்ஹாரிஸ், யஹ்யா பின் அபூ கஸீர், அல்அஸ்வத் பின் அல்அலா பின் ஜாரியா, ஹுமைத் பின் ஸியாத், ஸாலிம் அபூ அந்நள்ர்

வேறு பெயர்கள்: அபூஸலமா, அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்


ஆதாரம்: muslimscholars.info (10567) · Should verify

அபூஹுரைரா (ரலி)

أبو هريرة

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்

தந்தை பெயர்: ஸக்ர்

வம்சம்: தவ்ஸீ

புனைப்பெயர்: அபூ ஹுரைரா

ஊர் பெயர்: யமன்

பயணித்த ஊர்கள்: மக்கா, மதீனா, யமன், பஹ்ரைன்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 12, யமன்

இறப்பு: ஹிஜ்ரி 59, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஹுரைரா ரலி அவர்கள் ஹிஜ்ரிக்கு முன் 12 ஆம் ஆண்டு யமன் நாட்டில் பிறந்தார்கள். இவர்களின் இயற்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஒரு சிறிய பூனையுடன் விளையாடியதால் அபூ ஹுரைரா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டார்கள்.

நபித்தோழர்களில் அதிக ஹதீஸ்களை அறிவித்தவர்களில் இவர்களும் ஒருவர். நபி (ஸல்) அவர்களின் துஆவின் காரணமாக இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருந்தது. ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு மதீனாவில் காலமானார்கள்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), ஃபழ்ல் பின் அல்அப்பாஸ், உபை பின் கஅப், உஸாமா பின் ஸைத், ஆயிஷா பின்த் அபூபக்ர், கஅப் அல்அஹ்பார்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): முஹர்ரர் பின் அபூ ஹுரைரா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், அனஸ் பின் மாலிக், வாஸிலா பின் அல்அஸ்கஃ, ஜாபிர் பின் அப்துல்லாஹ், மர்வான் பின் அல்கம், குபைஸா பின் துவைப், ஸயீத் பின் அல்முஸய்யிப், ஸல்மான் அல்அஃகர், கைஸ் பின் அபூ ஹாஸிம், மாலிக் பின் அபூ ஆமிர்

வேறு பெயர்கள்: அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர், அப்துல்லாஹ் பின் ஸக்ர்


ஆதாரம்: muslimscholars.info (13) · Should verify

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.