3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)
என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக பத்து லட்சம் (சொர்க்கத்தின்) படித்தரங்களை உயர்த்துகிறான்.
அறிவிப்பவர்: (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவரும் இதை ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரிலும் கருத்திலும் பலவீனம் இருப்பதால் இதை பெரும்பாலான அறிஞர்கள் பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.
இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளில் இடம்பெறும் அம்ர் பின் தீனார் என்பவர் பலமான அறிவிப்பாளரான அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56 இறப்பு ஹிஜ்ரி 126 என்று கருதியே சிலர் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளனர். ஆனால் இவர் ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவர் ஆவார். இவர் பலவீனமானவர்.
வேறு சிலர் இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளை சேர்த்து இதை ஹஸன் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளனர்.
…
விரிவான தகவல்:
ஆய்வுக்காக: ஸஹீஹா-3139.
1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
Abdul Hakkim on Bukhari-5688: “அஸ்ஸலாமு அலைக்கும். எந்த ஹதீஸ் கேட்கிறீர்கள்?” Oct 19, 08:14
asraa siddiq on Bukhari-5688: “இந்த ஹதீஸ் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது” Oct 18, 18:35
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அபூதாவூத் உடைய 4010-வது ஹதீஸையும் ஏற்கனவே பார்த்தேன். ஜஸாக்கல்லாஹ் ஹைரன். குற்றாலத்தில் பெண்களுக்கென்று சுவர்களால் மூடப்பட்ட அறைகள் போன்ற ஒரு திரைமறைவு வசதியை ஏற்படுத்தியுள்ளார்கள். அதுவும் திறந்தவெளி…” Oct 12, 11:52
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “நம்முடைய குடும்ப பெண்கள் மட்டும் குளிக்கும்போது இந்த தடை இல்லை. அப்போதும் கூட உடல் அவயங்களை மறைத்து குளிப்பது முக்கியம். வேறு பொதுவான ஆதாரத்தை தான் ஏற்கனவே…” Oct 11, 10:22
Ummu Huraira on Shuabul-Iman-7379: “வேறு பொதுவான ஆதாரங்களின்படி இது தடைதான் என்றால் அந்த ஆதாரங்களைத் தரமுடியுமா? இது சம்பந்தமான ஆய்வுக் கட்டுரைகள் ஏதாவது உள்ளதா?” Oct 11, 02:56
Ummu Huraira on Shuabul-Iman-7379: “பொதுக் குளிப்பிடங்கள் என்றால், நமக்கு தெரிந்தவர்களின் தோட்டங்களில் உள்ள போர் தண்ணீருக்கான தொட்டியில், பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் வசதியுடன் திரைகள் எல்லாம் போடப்பட்டுள்ள, அல்லது சுற்றியுள்ள…” Oct 11, 02:51
Abdul Hakkim on Shuabul-Iman-7379: “வ அலைக்கும் ஸலாம். பெண்கள் ஆடை அணிந்து குளித்தாலும் துணி ஈரத்தினால் அவர்களின் உடல்பகுதிகள் தெரியும், மேற்கண்ட கருத்தில் வரும் செய்திகளில் விமர்சனம் உள்ளது. என்றாலும் வேறு…” Oct 10, 19:47
Ummu Huraira on Shuabul-Iman-7379: “அஸ்ஸலாமு அலைக்கும். இந்த ஹதீஸ் பற்றிய ஆய்வுகள் முடிந்துவிட்டதா? இதன் தரம் என்ன? இதில், “அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல…” Oct 10, 12:39
Abdul Hakkim on Bukhari-3835: “அஸ்ஸலாமு அலைக்கும். சில செய்திகளில் இந்தப் பெண் அல்லாஹ்விடம் துஆச் செய்தேன் என்று கூறியதாக வந்துள்ளது. பார்க்க: புகாரி-439.” Oct 4, 17:30
Syed Ibrahim on Bukhari-3835: “BUhari 3835 – இந்தச் சம்பவம் பற்றிய விரிவான செய்தி ஏதும் உண்டா?” Oct 4, 15:41
சமீப விமர்சனங்கள்