பாடம்:
கடைத்தெருவுக்குள் நுழையும்போது சொல்ல வேண்டியவை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கடைத்தெருவுக்குள் நுழையும் போது, “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, யுஹ்யீ வ யுமீது, வ ஹுவ ஹய்யுல் லா யமூது, பி யதிஹில் கைரு, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்”
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் ஒருவனே; அவனுக்கு இணையில்லை; அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும்; அவன் உயிர்ப்பிக்கிறான்; அவன் மரணிக்கச் செய்கிறான்; அவன் என்றும் உயிருள்ளவன்; அவன் மரணிக்க மாட்டான்; அவன் கையிலேயே நன்மை உள்ளது; மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றல் மிக்கவன்)
என்று கூறினால், அல்லாஹ் அவருக்காக பத்து லட்சம் நன்மைகளை எழுதுகிறான்; அவருடைய பத்து லட்சம் தீமைகளை அழிக்கிறான்; அவருக்காக பத்து லட்சம் (சொர்க்கத்தின்) படித்தரங்களை உயர்த்துகிறான்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவரும் இதை ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
(திர்மிதி: 3428)بَاب مَا يَقُولُ إِذَا دَخَلَ السُّوقَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ سِنَانٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَاسِعٍ، قَالَ: قَدِمْتُ مَكَّةَ فَلَقِيَنِي أَخِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، فَحَدَّثَنِي، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
” مَنْ دَخَلَ السُّوقَ، فَقَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ، وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ، وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ “
«هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَقَدْ رَوَاهُ عَمْرُو بْنُ دِينَارٍ، وَهُوَ قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، هَذَا الحَدِيثَ نَحْوَهُ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3428.
Tirmidhi-Alamiah-3350.
Tirmidhi-JawamiulKalim-3374.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மனீஃ
3 . யஸீத் பின் ஹாரூன்
4 . அஸ்ஹர் பின் ஸினான்
5 . முஹம்மத் பின் வாஸிஃ
6 . ஸாலிம் பின் அப்துல்லாஹ் பின் உமர்
7 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
8 . உமர் பின் கத்தாப் (ரலி)
ஆய்வின் சுருக்கம்:
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடரிலும் கருத்திலும் பலவீனம் இருப்பதால் இதை பெரும்பாலான அறிஞர்கள் பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.
இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளில் இடம்பெறும் அம்ர் பின் தீனார் என்பவர் பலமான அறிவிப்பாளரான அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
என்று கருதியே சிலர் இதை சரியான செய்தி என்று கூறியுள்ளனர். ஆனால் இவர் ஸுபைர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரின் பொறுப்பாளராக இருந்த அம்ர் பின் தீனார் என்பவர் ஆவார். இவர் பலவீனமானவர்.
வேறு சிலர் இந்தக் கருத்தில் வரும் சில செய்திகளை சேர்த்து இதை ஹஸன் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளனர்.
…
விரிவான தகவல்:
ஆய்வுக்காக: ஸஹீஹா-3139.
1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
அஸ்ஹர் பின் ஸினான் என்பவரின் அறிவிப்புகள்:
பார்க்க: முஸ்னத் அப்து பின் ஹுமைத்-28, தாரிமீ- 2734, திர்மிதீ-3428, அத்துஆ-தப்ரானீ-792, ஹாகிம்- 1974, ஹில்யதுல் அவ்லியா-2/355,
அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
என்பவரின் அறிவிப்புகள்:
பார்க்க: முஸ்னத் தயாலிஸீ- 12, அஹ்மத்- 327, இப்னு மாஜா- 2235, திர்மிதீ-3429, முஸ்னத் பஸ்ஸார்-, …
ஹிஷாம் பின் ஹஸ்ஸான் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: ஹாகிம்-1975,
யஹ்யா பின் ஸுலைம் அவர்களின் அறிவிப்புகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-, ஹாகிம்-1976,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-1975.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-3293,
சமீப விமர்சனங்கள்