தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-7425

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தை இறக்காமல் இறக்குவதில்லை. முதுமையைத் தவிர!

ஆகவே, நீங்கள் பசு மாட்டுப் பாலைப் பருகிக் கொள்ளுங்கள். ஏனெனில், அது பலவகையான தாவரத்திலிருந்து மேய்கிறது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

(ஹாகிம்: 7425)

وَأَمَّا حَدِيثُ طَارِقِ بْنِ شِهَابٍ

فَأَخْبَرَنَاهُ الْحَسَنُ بْنُ يَعْقُوبَ، الْعَدْلُ، ثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ الْفَرَا، أَنْبَأَ جَعْفَرُ بْنُ عَوْنٍ، أَنْبَأَ الْمَسْعُودِيُّ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ الْجَدَلِيِّ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ، يَرْفَعُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً إِلَّا الْهَرَمَ فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ شَجَرٍ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-7425.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-7487.




இந்தச் செய்தியின் கருத்தை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . ஹஸன் பின் யஃகூப்-அல்அத்ல்

3 . முஹம்மத் பின் அப்துல்வஹ்ஹாப்-அல்ஃபரா

4 . ஜஅஃபர் பின் அவ்ன்

5 . உத்பா பின் அப்துல்லாஹ்-அல்மஸ்ஊதீ-அபுல்உமைஸ்

6 . கைஸ் பின் முஸ்லிம்-அல்ஜதலீ

7 . தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

8 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


ஆய்வின் சுருக்கம்:

இந்தச் செய்தியை கைஸ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் அதிகமானோர் இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர் என்பதால் இது நபியின் சொல் என்பதே சரியாகும்…

மேலும் இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் மேற்கண்டவாறு வந்துள்ள வார்த்தை அமைப்பே சரியாகும்.

இதை விட கூடுதலாக வந்துள்ள “பசும்பாலில் அனைத்து நோய்க்கும் நிவாரணம் உள்ளது” என்ற கருத்தும், இதன் நெய், இறைச்சி பற்றி வந்துள்ள வேறு சில வாக்கியங்களும் பலவீனமானவையாகும்…


(நூல்: அல்இலலுல் வாரிதா-958)


அஸ்ஸஹீஹா-1943…


1 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • கைஸ் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> தாரிக் பின் ஷிஹாப் (ரலி) —> இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 33
    (ரலி) —> நபி (ஸல்)

பார்க்க: … முஸ்னத் தயாலிஸீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்-7425, 7423, 8224, …


 


2 . தாரிக் பின் ஷிஹாப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18831.


இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-3855, புகாரி-5678,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.