ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஹர்ரா பகுதியின் ஒரு கணவாயின் மீது ஏறி நின்று பார்த்தார்கள். அப்போது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
மதீனா சிறந்த பூமியாகும். தஜ்ஜால் வரும்போது, அதன் ஒவ்வொரு நுழைவுவாயிலிலும் ஒரு வானவர் இருப்பார். அதனால் அவனால் மதீனாவிற்குள் நுழைய முடியாது. அவ்வாறு நிகழும்போது, மதீனா அதன் மக்களைக் கொண்டு மூன்று முறை அதிர்ந்து குலுங்கும். அப்போது எந்த ஒரு முனாஃபிக்-நயவஞ்சக ஆணும் அல்லது நயவஞ்சக பெண்ணும் தஜ்ஜாலிடம் செல்லாமல் இருக்க மாட்டார்கள். (மேலும்) அவனிடம் செல்பவர்களில் அதிகமானோர் பெண்களாக இருப்பார்கள். இதுவே ‘யவ்முத் தக்லீஸ்’ (தூய்மைப்படுத்தும் நாள்) ஆகும். இதுவே மதீனா அசுத்தங்களை நீக்கும் நாளாகும். உலைக்களம் இரும்பின் அசுத்தங்களை நீக்குவது போல, (மதீனா) தீயவர்களை நீக்கும்.
தஜ்ஜாலுடன் 70,000 யூதர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவரிடமும் தஜ்ஜாலின் கொடி மற்றும் அலங்கரிக்கப்பட்ட வாள் இருக்கும். வெள்ளங்கள் சங்கமிக்கும் இடத்தில் இந்த அடியால் அவனது கழுத்து துண்டிக்கப்படும்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஜ்ஜாலின் குழப்பத்தை விட பெரிய குழப்பம் வேறு ஒன்றும் இருந்ததில்லை; மறுமை நாள் வரும் வரை இருக்கப்போவதுமில்லை. எந்த ஒரு நபியும் தனது சமுதாயத்திற்கு அவனைக் குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. எனக்கு முன் எந்த நபியும் தனது சமுதாயத்திற்கு அறிவிக்காத ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். (இதற்கு பிறகு அவர்கள் தங்கள் கையை தங்கள் கண்ணின் மீது வைத்தார்கள்.)
பின்னர் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்ல என்பதற்கு நான் சாட்சி கூறுகிறேன்.
(முஸ்னது அஹ்மத்: 14112)مُسْنَدُ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ زَيْدٍ يَعْنِي ابْنَ أَسْلَمَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ:
أَشْرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَلَقٍ مِنْ أَفْلَاقِ الْحَرَّةِ، وَنَحْنُ مَعَهُ، فَقَالَ: «نِعْمَتِ الْأَرْضُ الْمَدِينَةُ، إِذَا خَرَجَ الدَّجَّالُ عَلَى كُلِّ نَقْبٍ مِنْ أَنْقَابِهَا مَلَكٌ، لَا يَدْخُلُهَا، فَإِذَا كَانَ كَذَلِكَ، رَجَفَتْ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ، لَا يَبْقَى مُنَافِقٌ، وَلَا مُنَافِقَةٌ إِلَّا خَرَجَ إِلَيْهِ، وَأَكْثَرُ – يَعْنِي – مَنْ يَخْرُجُ إِلَيْهِ النِّسَاءُ، وَذَلِكَ يَوْمُ التَّخْلِيصِ، وَذَلِكَ يَوْمَ تَنْفِي الْمَدِينَةُ الْخَبَثَ، كَمَا يَنْفِي الْكِيرُ خَبَثَ الْحَدِيدِ، يَكُونُ مَعَهُ سَبْعُونَ أَلْفًا مِنَ الْيَهُودِ عَلَى كُلِّ رَجُلٍ مِنْهُمْ سَاجٌ، وَسَيْفٌ مُحَلًّى، فَتُضْرَبُ رَقَبَتُهُ بِهَذَا الضَّرْبِ الَّذِي عِنْدَ مُجْتَمَعِ السُّيُولِ»
ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا كَانَتْ فِتْنَةٌ، وَلَا تَكُونُ حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَكْبَرَ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَلَا مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ حَذَّرَهُ أُمَّتَهُ، وَلَأُخْبِرَنَّكُمْ بِشَيْءٍ مَا أَخْبَرَهُ نَبِيٌّ أُمَّتَهُ قَبْلِي» ، ثُمَّ وَضَعَ يَدَهُ عَلَى عَيْنِهِ، ثُمَّ قَالَ: «أَشْهَدُ أَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-14112.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
ஸைத் இப்னு அஸ்லம் (ரஹ்) ஜாபிர் (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா?
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இமாம் கூறுகிறார்:
ஸைத் இப்னு அஸ்லம் (ரலி) அவர்கள் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியுற்றிருக்கிறார்கள். ஏனெனில், ஜாபிர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 79 ஆம் ஆண்டில் வஃபாத் ஆனார்கள்.
உமர் (ரலி) அவர்களின் அடிமையான அஸ்லம் அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், சுமார் ஹிஜ்ரி 50 ஆம் வருடத்தில் வஃபாத் ஆனார்கள். அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வான் இப்னு ஹகம் அவர்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். இதுவே, ஸைத் இப்னு அஸ்லம் (ரலி) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியுற்றார்கள் என்பதற்கான ஒரு சான்றாகும்.
ஸைத் இப்னு அஸ்லம் (ரஹ்) அவர்கள் பெரியவராகவும், நீண்ட காலம் வாழ்ந்தவராகவும் இருந்தார்கள். அவர்கள் ஹிஜ்ரி 136 ஆம் ஆண்டில் வஃபாத் ஆனார்கள்.
(எனவே ஸைத் பின் அஸ்லம் ஹிஜ்ரி 50 க்குள் பிறந்து ஹிஜ்ரி 136 இல் இறந்தார் என்றால் சுமார் 86 வருடம் வாழ்ந்துள்ளார். இவர் ஹிஜ்ரி 79 இல் மரணித்த ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்டிருக்க வாய்ப்புள்ளது)
அபூஉமர்-இப்னு அப்துல்பர் இமாம் கூறுகிறார்:
ஸைத் இப்னு அஸ்லம் (ரஹ்) அவர்கள் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை செவியுறவில்லை என்று ஒரு சாரார் அறிவிக்கிறார்கள். வேறு சிலர், அவர்கள் செவியுற்றார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
என்னைப் பொருத்தவரை, ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் இப்னு அஸ்லம் (ரஹ்) அவர்கள் செவியுற்றார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.
ஏனெனில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்களிடமிருந்தும் ஸைத் இப்னு அஸ்லம் (ரலி) அவர்கள் செவியுற்றிருக்கிறார்கள்.
இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் ஹிஜ்ரி 74 ஆம் ஆண்டிலும், ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 78 (அல்லது 79) ஆம் ஆண்டிலும் வஃபாத் ஆனார்கள்.
அதாவது, ஜாபிர் (ரலி) அவர்களுக்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) அவர்கள் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
ஸைத் பின் அஸ்லம் ஹிஜ்ரி 135 அல்லது 136 இல் வஃபாத் ஆனார்கள்.
சமீப விமர்சனங்கள்