முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள்.
அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்-அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். இந்த அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறார்! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து என் மார்பின் மீது அமர்வார். (அவர் என்னை ஒரு வியாதி பிடித்தவர் என்று நினைத்து சிகிச்சையளிப்பார்). நான் அவரிடம், ‘அது வியாதியால் அல்ல, பசியால் ஏற்பட்டதுதான்’ என்று கூறுவேன். (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.
மேலும் அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்:
நான் ஒரு காலத்தில் இப்னு அஃப்ஃபான், கஸ்வானின் மகள் ஆகியோரிடம் கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் ஒரு இடத்தில் தங்கியிருக்கும்போது அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்கள் பயணத்தைத் தொடங்கும் போது, அவர்களின் வண்டியை ஓட்டிச்செல்வேன். அப்போது அந்தப் பெண் (ஃகஸ்வானின் மகள்), என்னிடம், “நீ நின்றவாறு வண்டியை ஓட்ட வேண்டும். காலணி இல்லாமல் வரவேண்டும்” என்று திமிராகக் கூறினாள். அல்லாஹ்வின் அருளால், நான் அந்தப் பெண்ணையே திருமணம் செய்தேன். திருமணம் ஆன பிறகு நான் அவளிடம், “நீதான் காலணி இல்லாமல் வரவேண்டும். வண்டி நிற்கும் போது நீதான் அதை ஓட்டவேண்டும்” என்று பதிலுக்குச் சொன்னேன்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள், நகைச்சுவை உணர்வு மிக்கவர். (இந்தச் சம்பவத்தை அவர் நகைச்சுவையுடன் நினைவுகூர்ந்தார்).
(musannaf-abdur-razzaq-14941: 14941)أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
كُنَّا عِنْدَهُ وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ، فَتَمَخَّطَ ثُمَّ مَسَحَ أَنْفَهُ بِثَوبِهِ قَالَ: «الْحَمْدُ للَّهِ يَمْتَخِطُ أَبُو هُرَيْرَةَ فِي الْكِتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مَغْشِيًّا عَلَيَّ مِنَ الْجُوعِ، فَيَجِيءُ الرَّجُلُ فَيَقْعُدُ عَلَى صَدْرِي، فَأَقُولُ لَيْسَ بِي ذَلِكَ إِنَّمَا هُوَ مِنَ الْجُوعِ» قَالَ: وَقَالَ: ” إِنِّي كُنْتُ أَجِيرًا لِابْنِ عَفَّانَ، وَابْنَةِ غَزْوَانَ عَلَى عُقْبَةِ رِجْلِي وَشَبَعِ بَطْنِي – أَوْ قَالَ: بِطَعَامِ بَطْنِي – أَخْدِمُهُمْ إِذَا نَزَلُوا، وَأَسُوقُ بِهِمْ إِذَا ارْتَحَلُوا ” قَالَ: ” فَقَالَتْ يَوْمًا: لَتَرْكَبَنَّهُ قَائِمًا، وَلَتَرِدَنَّهُ حَافِيًا قَالَ: فَزَوَّجَنِيهَا اللَّهُ تَعَالَى، فَقُلْتُ: لَتَرِدِنَّهُ حَافِيَةً، وَلَتَرْكَبِنَّهُ وَهُوَ قَائِمٌ ” قَالَ: وَكَانَتْ فِيهِ مُزَاحَةٌ، يَعْنِي أَبَا هُرَيْرَةَ
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-14941.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-14506.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்
2 . ஹிஸாம் பின் ஹஸ்ஸான்
3 . முஹம்மத் பின் ஸீரீன்
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹிஸாம் பின் ஹஸ்ஸான் அவர்கள் இந்தச் செய்தியை முழுமையாக ஒரே செய்தியாக அறிவித்துள்ளார். வேறு சிலர் இதை தனித்தனியாக இரு செய்திகளாக அறிவித்துள்ளனர்.
இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
அவர்களின் மாணவர்களில் ஹிஸாம் பின் ஹஸ்ஸான் மிகவும் முன்னுரிமை பெற்றவர் ஆவார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1020)
இந்தச் செய்தியின் கருத்தை சிலர் சுருக்கமாகவும், சிலர் விரிவாகவும் அறிவித்துள்ளனர்.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஹிஸாம் பின் ஹஸ்ஸான் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-14941,
- அய்யூப் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: புகாரி-7324, திர்மிதீ-2367, ஷுஅபுல் ஈமான்- 9959, 10207,
- யஸீத் பின் இப்ராஹீம் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஸ்ஸுஹ்த்-இப்னு இம்ரான்-243, அஸ்ஸுஹ்த்-வகீஃ-121, அல்அதபுல் முஃப்ரத்-1283,
- அபூஹிலால் —> இப்னு ஸீரீன் பிறப்பு ஹிஜ்ரி 32
இறப்பு ஹிஜ்ரி 110
வயது: 78
—> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-1339,
- ஜுரைரீ —> முளாரிப் பின் ஹஸ்ன் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, இப்னு ஹிப்பான்-7150,
- ஸலீம் பின் ஹய்யான் —> ஹய்யான் பின் பிஸ்தாம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: இப்னு மாஜா-2445, குப்ரா பைஹகீ-,
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3839,
சமீப விமர்சனங்கள்