தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-7150

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

அபூஹுரைரா அத்தவ்ஸீ (ரலி).

முளாரிப் பின் ஹஸ்ன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நான் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒருவர் தக்பீர் சொல்வதைக்கேட்டு எனது ஒட்டகத்தை வேகமாகச் செலுத்தி அவரை அடைந்தேன். அவரிடம், “தக்பீர் சொல்லும் தாங்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “நான் அபூஹுரைரா” என்று பதிலளித்தார்.

நான் “ஏன் தக்பீர் சொல்கிறீர்கள்?” என்று வினவினேன். அவர் “அல்லாஹ்வுக்கு நன்றி சொல்கிறேன்” என்றார். “எதற்காக நன்றி சொல்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, “முன்பு நான் புஸ்ரா பின்த் ஃகஸ்வான் என்பவருக்கு வேலைக்காரனாக இருந்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் பயணம் செய்யும்போது நான் அவர்களின் வாகனங்களை ஓட்டுவேன். இறங்கும்போது அவர்களுக்கு சேவை செய்வேன். ஆனால், அல்லாஹ் அவளை எனக்கு மனைவியாக ஆக்கினான். இன்று அவள் என் மனைவி. அவர்கள் பயணம் செய்யும்போது நானும் பயணிக்கிறேன். அவர்கள் இறங்கும்போது எனக்கு சேவை செய்யப்படுகிறது” என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(இப்னு ஹிப்பான்: 7150)

ذِكْرُ أَبِي هُرَيْرَةَ الدَّوْسِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِي، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، يَعْنِي عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ مُضَارِبِ بْنِ حَزْنٍ، قَالَ:

بَيْنَا أَنَا أَسِيرُ مِنَ اللَّيْلِ إِذَا رَجُلٌ يُكَبِّرُ، فَأَلْحَقْتُهُ بَعِيرِي، قُلْتُ: مَنْ هَذَا الْمُكَبِّرُ؟ قَالَ: «أَبُو هُرَيْرَةَ»، قُلْتُ: مَا هَذَا التَّكْبِيرُ؟ قَالَ: «شُكْرًا»، قُلْتُ: عَلَى مَهْ؟ قَالَ: «عَلَى أَنِّي كُنْتُ أَجِيرًا لِبُسْرَةَ بِنْتِ غَزْوَانَ بعُقْبَةِ رِجْلِي، وَطَعَامِ بَطْنِي، فَكَانَ الْقَوْمُ إِذَا رَكِبُوا، سُقْتُ لَهُمْ، وَإِذَا نَزَلُوا خَدَمْتُهُمْ، فَزَوَّجَنِيهَا اللَّهُ فَهِيَ امْرَأَتِي الْيَوْمَ، فَأَنَا إِذَا رَكِبَ الْقَوْمُ رَكِبْتُ، وَإِذَا نَزَلُوا خُدِمْتُ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-7150.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-7305.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இமாம்

2 . முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (தகீஃப் கூட்டத்தாரின் அடிமையாக இருந்தவர்)

3 . யஃகூப் பின் இப்ராஹீம்-அத்தவ்ரகீ

4 . இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-இப்னு உலய்யா

5 . ஸயீத் பின் இயாஸ்-அல்ஜுரைரீ

6 . முளாரிப் பின் ஹஸ்ன்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-14941.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.