உத்பா பின் அப்த்-அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு கிராமவாசி வந்தார். அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சொர்க்கத்தில் ஒரு மரத்தைக் குறித்துச் சொல்வதைக் கேட்டேன். அந்த மரத்தை விட அதிகம் முட்கள் கொண்ட ஒரு மரத்தை நான் அறிந்ததில்லை. அது, “தல்ஹ் (கருவேல) மரம்” என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதன் முட்கள் கிடாய் ஆட்டின் கெட்டியான விதைப்பை போன்று அதில் தொங்கிக் கொண்டிருக்கும். அதில் எழுபது வகையான சுவைகள் உள்ளன. ஒன்றின் சுவை மற்றொன்றின் சுவையை ஒத்திருக்காது” என்று கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 13781)حَدَّثَنَا أَبُو زُرْعَةَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو الدِّمَشْقِيُّ، ثَنَا أَبُو مُسْهِرٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُبَارَكِ الصُّورِيُّ، قَالَا: ثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنْ عُتْبَةَ بْنِ عَبْدٍ السُّلَمِيِّ، قَالَ:
كُنْتُ جَالِسًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ أَعْرَابِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَسْمَعُكَ تَذْكُرُ فِي الْجَنَّةِ شَجَرَةً لَا أعْلَمُ أَكْثَرَ شَوْكًا مِنْهَا – يَعْنِي الطَّلْحَ – فَقَالَ: «التَّيْسُ المَلْبُودُ – يَعْنِي الْخَصِيَّ – فِيهَا سَبْعُونَ لَوْنًا مِنَ الطَّعَامِ لَا يُشْبِهُ لَوْنٌ آخَرَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-318.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-13781.
குறிப்பு: தல்ஹ் என்பதற்கு வாழை மரம் என்ற பொருளும் உண்டு. (அல்குர்ஆன்: 56:29) எனும் இறைவசனத்திற்கு சிலர் வாழை மரம் என்றே பொருள் கூறியுள்ளனர். வேறு சிலர் முள் மரம் என்றும் பொருள் கூறியுள்ளனர்.
மேற்கண்ட செய்தியில் முள் மரம் என்று கூறப்படுவதால் இங்கு இதன் கருத்து கருவேல மரமாகும்.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் உத்பா பின் அப்த் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- யஹ்யா பின் ஹம்ஸா —> ஸவ்ர் பின் யஸீத் —> ஹபீப் பின் உபைத் —> உத்பா பின் அப்த் (ரலி)
பார்க்க: அல்பஃஸ்-இப்னுஅபீதாவூத்-, அல்முஃஜமுல் கபீர்-13781, ஹில்யதுல்அவ்லியா-, …
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-3778,
சமீப விமர்சனங்கள்