தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-3778

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித்தோழர்கள், “கிராமவாசிகளாலும், அவர்களின் கேள்வியாலும் அல்லாஹ் நமக்கு நன்மையையே தருகின்றான் என்று (சிலசமயம்) கூறுவார்கள். (ஒரு தடவை) ஒரு கிராமப்புற அரபி வந்தார். அவர், “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் குர்ஆனில் துன்பம் தரும் ஒரு மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான். சொர்க்கவாசிக்கு துன்பம் தரும் மரம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்றார்.

நபி (ஸல்) அவர்கள், “அது எந்த மரம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த கிராமவாசி, “அது இலந்தை மரம். அதற்கு முள் இருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத்தினடியில் இருப்பார்கள்” என்ற (அல்குர்ஆன்: 56:28) இறைவசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, “அதன் முட்களை அல்லாஹ் நீக்கிவிட்டு, ஒவ்வொரு முள்ளின் இடத்திலும் ஒரு கனியை உருவாக்குவான். அது எழுபத்திரண்டு நிறங்களில் கனி கொடுக்கும். அதில் ஒரு நிறம் கூட மற்றொன்றை ஒத்திருக்காது” என்று கூறினார்கள்.

(ஹாகிம்: 3778)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، ثنا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:

كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: إِنَّ اللَّهَ يَنْفَعُنَا بِالْأَعْرَابِ وَمَسَائِلِهِمْ أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ ذَكَرَ اللَّهُ فِي الْقُرْآنِ شَجَرَةً مُؤْذِيَةً وَمَا كُنْتُ أَرَى أَنَّ فِي الْجَنَّةِ شَجَرَةٌ تُؤْذِي صَاحِبَهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا هِيَ؟» قَالَ: السِّدْرُ، فَإِنَّ لَهَا شَوْكًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” {فِي سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] يَخْضِدُ اللَّهُ شَوْكَهُ فَيُجْعَلُ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةٌ، فَإِنَّهَا تُنْبِتُ ثَمَرًا تُفْتَقُ الثَّمَرَةُ مَعَهَا عَنِ اثْنَيْنِ وَسَبْعِينَ لَوْنًا مَا مِنْهَا لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ

«صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ»


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-3778.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-3706.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
இமாம்

2 . அபுல்அப்பாஸ்-முஹம்மத் பின் யஃகூப்

3 . ரபீஉ பின் ஸுலைமான்

4 . பிஷ்ர் பின் பக்ர்

5 . ஸஃப்வான் பின் அம்ர்

6 . ஸுலைம் பின் ஆமிர்

7 . அபூஉமாமா (ரலி)


1 . இந்தச் செய்தியை ஸஃப்வான் பின் அம்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள் ஸஃப்வான் பின் அம்ர் —> ஸுலைம் பின் ஆமிர் (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக-நபித்தோழரை விட்டுவிட்டு அறிவித்துள்ளார்.

இவ்வாறு நுஐம் பின் ஹம்மாத், அப்துல்லாஹ் பின் உஸ்மான் ஆகியோர் அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர். நுஐம் பின் ஹம்மாத் அதிகம் தவறிழைப்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர். என்றாலும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் பலமானவர்.

முஸ்தஃபா அல்அதவீ அவர்கள், ஸஃப்வான் பின் அம்ர் அவர்களிடமிருந்து நுஐம் பின் ஹம்மாத் அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். (இது தவறாகும்)

(நூல்: ஸில்ஸிலதுல் ஃபவாஇத்-13/89)

இது அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்களிடமிருந்து நுஐம் பின் ஹம்மாத் அறிவிக்கும் மற்றொரு பிரதியாகும். (அஸ்ஸுஹ்த்-நுஐம் பின் ஹம்மாத்-266)

அப்துல்லாஹ் பின் உஸ்மான் அவர்கள் பலமானவர் என்றாலும் இந்த அறிவிப்பாளர்தொடரை பதிவு செய்தவர் இப்னு அபுத்துன்யா ஆவார். ஸாலிஹ் ஜஸரா அவர்கள் தவிர மற்ற அறிஞர்கள் இவரை நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث என்று கூறியுள்ளனர். ஸாலிஹ் ஜஸரா அவர்கள், இவர் நடுத்தரமானவர். என்றாலும் இவர் முஹம்மத் பின் இஸ்ஹாக் அல்பல்கீ எனும் பொய்யரிடமிருந்து சில செய்திகளை எங்களுக்கு அறிவிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.


2 . ஸஃப்வான் பின் அம்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் ஹர்ப், பிஷ்ர் பின் பக்ர் ஆகியோர் ஸஃப்வான் பின் அம்ர் —> ஸுலைம் பின் ஆமிர் —> அபூஉமாமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் மவ்ஸூலாக-நபித்தோழரை கூறி அறிவித்துள்ளனர்.

முஹம்மத் பின் ஹர்ப் அவர்கள் பலமானவர் தான் என்றாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் முஹம்மத் பின் உமர் அல்வாகிதீ பிறப்பு ஹிஜ்ரி 130
இறப்பு ஹிஜ்ரி 207
வயது: 77
விடப்பட்டவர் என்று விமர்சிக்கப்பட்டவர்.

எனவே ஸஃப்வான் பின் அம்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பிஷ்ர் பின் பக்ர் அவர்களின் அறிவிப்பாளர்தொடரே பலமாக உள்ளது என்பதால் அதற்கே முன்னுரிமை தரவேண்டும். (சிலர் இது முர்ஸல் என்பதற்கு முன்னுரிமை தந்துள்ளனர்). மேலும் வார்த்தை அமைப்பில் முர்ஸலாக இருந்தாலும் கருத்தின் அடிப்படையில் பார்க்கும் போது ஸுலைம் பின் ஆமிர் அவர்கள் இதை நபித்தோழர்களிடமிருந்தே அறிவிக்கிறார் என்பதால் இதில் பிரச்சனை இல்லை.

ஹதீஸின் கருத்து சொர்க்கத்தின் இன்பத்தை பற்றி கூறப்படும் ஒரு மறைவான செய்தியாகும். இதை தவறு என்று கூறமுடியாது.

இதை ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அஃளமீ போன்றோர் சரியான செய்தி என்று குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்கள்: ஸஹீஹா-2734, அல்ஜாமிஉல் காமில்-11/162, 163, 12/510)


1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸஃப்வான் பின் அம்ர் —> ஸுலைம் பின் ஆமிர் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: ஸிஃபதுல் ஜன்னா-105, ஹாகிம்-3778, அக்பாரு அஸ்பஹான்-2611, அல்பஃஸ் வன்னுஷூர்-பைஹகீ-276,


  • ஸிஃபதுல் ஜன்னா-105.

حَدَّثَنَا هَارُونُ بْنُ سُفْيَانَ، ثنا مُحَمَّدُ بْنُ عُمَرَ، ثنا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ صَفْوَانَ بْنِ عُمَرَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ


  • அல்பஃஸ் வன்னுஷூர்-பைஹகீ-276.

البعث والنشور للبيهقي (ص: 187)
276 – أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ثنا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، ثنا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْفَعُنَا بِالْأَعْرَابِ، وَمَسَائِلِهِمْ، أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَقَدْ ذَكَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الْقُرْآنِ شَجَرَةً مُؤْذِيَةً، وَمَا كُنْتُ أَرَى أَنَّ فِي الْجَنَّةِ شَجَرَةً تُؤْذِي صَاحِبَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا هِيَ؟» قَالَ: السِّدْرُ، فَإِنَّ لَهَا شَوْكًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ: {فِي سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] «يَخْضُدُ اللَّهُ شَوْكَهُ، فَيُجْعَلُ مَكَانَ شَوْكِهِ ثَمَرًا، إِنَّهَا تَنْبُتُ، ثُمَّ انْفَتَقَ الثَّمَرُ مِنْهَا عَنِ اثْنَيْنِ وَسَبْعُونَ لَوْنًا مِنْ طَعَامٍ مَا مِنْهَا لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ»


  • ஸஃப்வான் பின் அம்ர் —> ஸுலைம் பின் ஆமிர் (ரஹ்) —> நபி (ஸல்)

பார்க்க: அஸ்ஸுஹ்த்-நுஐம் பின் ஹம்மாத்-266, ஸிஃபதுல் ஜன்னா-105, (109),


  • அஸ்ஸுஹ்த்-அபூநுஐம்-266.

الزهد والرقائق لابن المبارك والزهد لنعيم بن حماد (2/ 74)
أنا صَفْوَانُ بْنُ عَمْرٍو، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ قَالَ: كَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ: إِنَّهُ. . . بِالْأَعْرَابِ وَمَسَائِلِهِمْ، قَالَ: أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ ذَكَرَ اللَّهُ فِي الْجَنَّةِ شَجَرَةً مُؤْذِيَةً، وَمَا كُنْتُ أَرَى فِي الْجَنَّةِ شَجَرَةً تُؤْذِي صَاحِبَهَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا هِيَ؟» قَالَ: السِّدْرَةُ، فَإِنَّ لَهُ شَوْكًا مُؤْذِيًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَوَلَيْسَ يَقُولُ: {سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] خَضَّدَ اللَّهُ شَوْكَهُ، فَجَعَلَ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةً، فَإِنَّهَا لَتُنْبِتُ ثَمَرًا لَقِنْوٌ مِنَ الثَّمَرِ مِنْهَا عَلَى اثْنَيْنِ وَسَبْعِينَ لَوْنًا، طَعَامٌ مَا فِيهِ لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ “


  • ஸிஃபதுல் ஜன்னா-105, (109)

صفة الجنة لابن أبي الدنيا ت سليم (ص: 105)
105 – حَدَّثَنَا حَمْزَةُ بْنُ الْعَبَّاسِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أنا صَفْوَانُ بْنُ عُمَرَ، عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ، قَالَ: كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَنْفَعُنَا بِالْأَعْرَابِ وَمَسَائِلِهِمْ، قَالَ: أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ذَكَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِي الْجَنَّةِ شَجَرَةً مُؤْذِيَةً وَمَا كُنْتُ أَرَى شَجَرَةً تُؤْذِي صَاحِبَهَا. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا هِيَ؟» قَالَ: السِّدْرُ، فَإِنَّ لَهَا شَوْكًا مُؤْذِيًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَلَيْسَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَقُولُ: {فِي سِدْرٍ مَخْضُودٍ} [الواقعة: 28] خَضَدَ اللَّهُ عَزَّ وَجَلَّ شَوْكَهُ فَجَعَلَ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةً فَإِنَّهَا لَتُنْبِتُ ثَمَرًا تَفَتَّقُ الثَّمَرَةُ عَنِ اثْنَيْنِ وَسَبْعِينَ لَوْنًا مِنْ طَعَامٍ مَا فِيهِ لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ ”

صفة الجنة لابن أبي الدنيا ت العساسلة (ص113):
109 – حدثنا حَمْزَةُ بْنُ الْعَبَّاسِ حَدَّثَنَا عَبْدُ الله بن عثمان أخبرنا ابن المبارك أخبرنا صفوان بن عمرو عَنْ سُلَيْمِ بْنِ عَامِرٍ قَالَ كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُونَ إِنَّ اللَّهَ عز وجل ‌لَيَنْفَعُنَا ‌بِالْأَعْرَابِ ‌وَمَسَائِلِهِمْ. قَالَ أَقْبَلَ أَعْرَابِيٌّ يَوْمًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ذَكَرَ اللَّهُ عز وجل فِي الْجَنَّةِ شَجَرَةً مُؤْذِيَةً وَمَا كُنْتُ أَرَى شَجَرَةً تُؤْذِي صَاحِبَهَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا هِيَ قَالَ السِّدْرُ. فَإِنَّ لها شوكا مؤذيا. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَلَيْسَ اللَّهُ عز وجل يَقُولُ {فِي سِدْرٍ مَخْضُودٍ} خَضَدَ اللَّهُ عز وجل شَوْكَهُ فَجَعَلَ مَكَانَ كُلِّ شَوْكَةٍ ثَمَرَةً فإنها لتفت ثمرا تفتق الثمر عن اثنتين وَسَبْعِينَ لَوْنًا مِنْ طَعَامٍ مَا فِيهِ لَوْنٌ يُشْبِهُ الْآخَرَ.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-13781,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.