தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-9273

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை மூன்று பாகங்களைக் கொண்டது. அதன் ஒரு பாகம் (தொழுவதற்கு முன் உளூ எனும்) தூய்மைச் செய்தல். மற்றொரு பாகம் ருகூஉ செய்தல், மற்றொரு பாகம் ஸஜ்தா செய்தல் ஆகியவை ஆகும்.

யார் தன் தொழுகையை அதன் முறைப்படி நிறைவேற்றுகிறாரோ, அவரது தொழுகையும், அத்துடன் அவரது மற்ற எல்லா அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படும். யார் தன் தொழுகையை நிறைவேற்றுவதில் குறை வைக்கிறாரோ, அவரின் தொழுகை நிராகரிக்கப்படும். அத்துடன் அவரது மற்ற அமல்களும் நிராகரிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் அஃமஷ் —> அபூஸாலிஹ் —> கஅபுல் அஹ்பார் என்ற அறிவிப்பாளர்தொடரில் கஅபுல் அஹ்பார் அவர்களின் சொல்லாக வந்துள்ளதே மஹ்ஃபூல் எனும் முன்னுரிமை பெற்ற செய்தியாகும்.

அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக முஃகீரா பின் முஸ்லிம் என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார். இவரைப் போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்றே நாம் அறிகிறோம்.

(bazzar-9273: 9273)

وَبِهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

الصلاة ثلاثة أثلاث الطهور ثلث والركوع ثلث والسجود ثلث فمن أداها بحقها قبلت منه وقبل منه سائر عمله ومن ردت عليه صلاته رد عليه سائر عمله.

وهذا الحديثُ إنما يحفظ من حديث الأعمش , عن أبي صالح عن كعب من قوله ولا نعلم أحدا أسنده فقال عَنْ أَبِي صَالِحٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إلا المغيرة بن مسلم وَلَمْ يُتَابَعْ عَلَيْهِ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9273.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.




இதற்கு முன்னுள்ள செய்தியின் படி இதன் முழுமையான அறிவிப்பாளர்தொடர்:

حدثنا زَكَرِيَّا بن يحيى الضرير حدثنا شبابة بن سوار حدثنا مغيره ابن مسلم عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صالحٍ , عَنْ أَبِي هريرة رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . பஸ்ஸார் இமாம்

2 . ஸகரிய்யா பின் யஹ்யா-அள்ளரீர்

3 . ஷபாபா பின் ஸவ்வார்

4 . முஃகீரா பின் முஸ்லிம்

5 . அஃமஷ்

6 . தக்வான்-அபூஸாலிஹ்

7 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)


 

 


2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஃஜமுஷ் ஷுயூக்-1/323, முஸ்னத் பஸ்ஸார்-9273,


  • முஃஜமுஷ் ஷுயூக்-1/323.

معجم الشيوخ لابن جميع الصيداوي (ص323):
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ أَحْمَدَ الرَّقِّيُّ، حَدَّثَنَا أَبُو فَرْوَةَ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ الْأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «الصَّلَاةُ ثَلَاثَةُ أَجْزَاءٍ، ثُلُثٌ وُضُوءٌ، وَثُلُثٌ رُكُوعٌ ، وَثُلُثٌ سُجُودٌ، فَمَنْ أَكْمَلَهُنَّ قُبِلْنَ ‌مِنْهُ ‌وَمَا ‌سِوَاهُنَّ، ‌وَمَنِ ‌انْتَقَصَ ‌مِنْهُنَّ ‌شَيْئًا ‌رُدِدْنَ ‌عَلَيْهِ ‌وَمَا ‌سِوَاهُنَّ»

 


மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-3748.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.