தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5054

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தனது படுக்கைக்குச் சென்றால், “பிஸ்மில்லாஹி வளஃது ஜன்பீ, அல்லாஹும்மஃக்பிர்லீ தன்பீ, வ அக்ஸிஃ ஷைத்தானீ, வ ஃபுக்க ரிஹானீ, வஜ்அல்னீ ஃபின்னதிய்யில் அஃலா” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் என் விலாவைப் (படுக்கையில்) வைக்கிறேன். அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக! என் ஷைத்தானை இழிவுபடுத்தி விரட்டிவிடுவாயாக! என் பிணையிலிருந்து (என் உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பாவங்கள், கடன்கள், ஷைத்தானின் பிடி ஆகியவற்றிலிருந்து) என்னை விடுவிப்பாயாக! மேலும், என்னை மிக உயர்ந்த சபையில் சேர்ப்பாயாக!)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸவ்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹம்மாம் அல்அஹ்வாஸீ அவர்கள் (நபித்தோழர் அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) என்ற பெயருக்கு பதிலாக) அபூஸுஹைர் அல்அன்மாரீ (ரலி) என்று அறிவித்துள்ளார்.

(அபூதாவூத்: 5054)

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي الْأَزْهَرِ الْأَنْمَارِيِّ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ أَبُو هَمَّامٍ الْأَهْوَازِيُّ، عَنْ ثَوْرٍ، قَالَ: أَبُو زُهَيْرٍ الْأَنْمَارِيُّ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4395.
Abu-Dawood-Shamila-5054.
Abu-Dawood-Alamiah-4395.
Abu-Dawood-JawamiulKalim-4397.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

2 . ஜஅஃபர் பின் முஸாஃபிர்-அத்தின்னீஸீ

3 . யஹ்யா பின் ஹஸ்ஸான்-அல்பக்ரீ

4 . யஹ்யா பின் ஹம்ஸா-அல்ஹள்ரமீ

5 . ஸவ்ர் பின் யஸீத்-அர்ரஹபீ

6 . காலித் பின் மஃதான்

7 . அபுல்அஸ்ஹர்-யஹ்யா பின் நுஃபைர்-அல்அன்மாரீ (ரலி)


 


1 . இந்தக் கருத்தில் அபுல்அஸ்ஹர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸவ்ர் பின் யஸீத் —> காலித் பின் மஃதான் —> அபுல்அஸ்ஹர் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-5054, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-112, அல்முஃஜமுல் கபீர்-18243, 18244, ஹாகிம்-1982, 2012, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-7393,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.