தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5054

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

5054. அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் தனது படுக்கைக்குச் சென்றால், “பிஸ்மில்லாஹி வளஃது ஜன்பீ, அல்லாஹும்மஃக்பிர்லீ தன்பீ, வ அக்ஸிஃ ஷைத்தானீ, வ ஃபுக்க ரிஹானீ, வஜ்அல்னீ ஃபின்னதிய்யில் அஃலா” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் என் விலாவைப் (படுக்கையில்) வைக்கிறேன். அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக! என் ஷைத்தானை இழிவுபடுத்தி விரட்டிவிடுவாயாக! என் பிணையிலிருந்து (என் உயிரைப் பற்றிக்கொண்டிருக்கும் பாவங்கள், கடன்கள், ஷைத்தானின் பிடி ஆகியவற்றிலிருந்து) என்னை விடுவிப்பாயாக! மேலும், என்னை மிக உயர்ந்த சபையில் சேர்ப்பாயாக!)


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஸவ்ர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஹம்மாம் அல்அஹ்வாஸீ அவர்கள் (நபித்தோழர் அபுல்அஸ்ஹர் அல்அன்மாரீ (ரலி) என்ற பெயருக்கு பதிலாக) அபூஸுஹைர் அல்அன்மாரீ (ரலி) என்று அறிவித்துள்ளார்.


حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ، عَنْ ثَوْرٍ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي الْأَزْهَرِ الْأَنْمَارِيِّ،

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ مِنَ اللَّيْلِ قَالَ: «بِسْمِ اللَّهِ وَضَعْتُ جَنْبِي اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَأَخْسِئْ شَيْطَانِي، وَفُكَّ رِهَانِي، وَاجْعَلْنِي فِي النَّدِيِّ الْأَعْلَى»

قَالَ أَبُو دَاوُدَ: رَوَاهُ أَبُو هَمَّامٍ الْأَهْوَازِيُّ، عَنْ ثَوْرٍ، قَالَ: أَبُو زُهَيْرٍ الْأَنْمَارِيُّ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4395.
Abu-Dawood-Shamila-5054.
Abu-Dawood-Alamiah-4395.
Abu-Dawood-JawamiulKalim-4397.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

2 . ஜஅஃபர் பின் முஸாஃபிர்-அத்தின்னீஸீ

3 . யஹ்யா பின் ஹஸ்ஸான்-அல்பக்ரீ

4 . யஹ்யா பின் ஹம்ஸா-அல்ஹள்ரமீ

5 . ஸவ்ர் பின் யஸீத்-அர்ரஹபீ

6 . காலித் பின் மஃதான்

7 . அபுல்அஸ்ஹர்-யஹ்யா பின் நுஃபைர்-அல்அன்மாரீ (ரலி)


 


1 . இந்தக் கருத்தில் அபுல்அஸ்ஹர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸவ்ர் பின் யஸீத் —> காலித் பின் மஃதான் —> அபுல்அஸ்ஹர் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-5054, ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-112, அல்முஃஜமுல் கபீர்-18243, 18244, ஹாகிம்-1982, 2012, …


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-7393,

அபூதாவூத் இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

ஜஅஃபர் பின் முஸாஃபிர்-அத்தின்னீஸீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் ஹஸ்ஸான்-அல்பக்ரீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

யஹ்யா பின் ஹம்ஸா-அல்ஹள்ரமீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஸவ்ர் பின் யஸீத்-அர்ரஹபீ

ثور بن يزيد الرحبي

இறப்பு: ஹிஜ்ரி 155, பைத்துல் முகத்தஸ்

தரம்: மிகப் பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: ஸவ்ர் பின் யஸீத் பின் ஸியாத்

தந்தை பெயர்: யஸீத் பின் ஸியாத்

வம்சம்: அர்ரஹ்பீ, அல்குலாஈ

புனைப்பெயர்: அபூ காலித்

ஊர் பெயர்: ஹிம்ஸ்

பயணித்த ஊர்கள்: ஹிம்ஸ், மக்கா, பைத்துல் முகத்தஸ்

இறப்பு: ஹிஜ்ரி 155, பைத்துல் முகத்தஸ்

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஸவ்ர் பின் யஸீத் ரஹ் அவர்கள் ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த ஒரு தாபிஈ ஆவார். இவர் ஹதீஸ் துறையில் மிகப் பலமானவர் என்று அறிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் கத்ரிய்யா கொள்கையைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டாலும், ஹதீஸ் அறிவிப்பில் நம்பகமானவராகவே கருதப்பட்டார்.

இவர் ஹிஜ்ரி 155 ஆம் ஆண்டு பைத்துல் முகத்தஸ் நகரில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): மக்ஹூல் அஷ்ஷாமீ, ரஜாஃ பின் ஹய்வா, ஸாலிஹ் பின் யஹ்யா பின் அல்மிக்லாம், அதா பின் அபூ ரபாஹ், இக்ரிமா, முஹம்மத் பின் முஸ்லிம் பின் தத்ரஸ், காலித் பின் மஃதான், ஹபீப் பின் உபைத் அர்ரஹ்பீ, அஸ்ஸுஹ்ரீ, இப்னு ஜுரைஜ், அபுஸ் ஸினாத், காஸிம் பின் அப்துர்ரஹ்மான் அஷ்ஷாமீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): பகிய்யது பின் வலீத், அப்துல்லாஹ் பின் தாவூத் அல்குரைபீ, ஸஃப்வான் பின் ஈஸா, ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, ஈஸா பின் யூனுஸ், மாலிக் இமாம், அல்வலீத் பின் முஸ்லிம், அப்துல்லாஹ் பின் முபாரக், யஹ்யா பின் சயீத் அல்கத்தான், ளஹ்ஹாக் பின் மக்லத் அபூ ஆஸிம் அந்நபீல், இப்னு இஸ்ஹாக், முஹம்மத் பின் அஜ்லான்

வேறு பெயர்கள்: ஸவ்ர் பின் யஸீத் அர்ரஹ்பீ, ஸவ்ர் பின் யஸீத் அல்குலாஈ, ஸவ்ர் பின் யஸீத் அல்ஹிம்ஸீ, ஸவ்ர் பின் யஸீத் அஷ்ஷாமீ


ஆதாரம்: muslimscholars.info (20415) · Should verify

காலித் பின் மஃதான்

خالد بن معدان بن أبي كرب

இறப்பு: ஹி-103-108


இயற்பெயர்: காலித்

தந்தை பெயர்: மஃதான்

வமிசம்: அல்கலாஈ

புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஅப்துல்லாஹ், இப்னு அபூகரிப்

ஊர் பெயர்: பஸரா, ஷாம்-ஹிம்ஸ், தர்த்தூஸ்

இறப்பு: ஹிஜ்ரி-103-108.

கால கட்டம்: 3.


காலித் பின் மஃதான் அவர்கள் பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

2883 - حَدَّثَنَا الْحَوْطِيُّ، نا أَبُو الْمُغِيرَةِ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: «أَدْرَكْتُ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم»

நான் 70 நபித்தோழர்களை சந்தித்துள்ளேன் என்று இவர் கூறியுள்ள தகவல் சரியான அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

1 . இப்னு அபூஆஸிம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா-அல்ஹவ்தீ

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

4 . ஸஃப்வான் பின் அம்ர்-அஸ்ஸக்ஸகீ

5 . காலித் பின் மஃதான்.

(நூல்கள்: அல்ஆஹாத் வல்மஸானீ-2883...)


وقال الإسماعيلي: بينه وبين المقدام بن معدي كرب جبير بن نفير.

இவருக்கும், மிக்தாம் (ரலி) அவர்களுக்கும் இடையில் ஜுபைர் பின் நுஃபைர் இருக்கிறார் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/533)

அதாவது இவர் மிக்தாம் (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்பதை தான் இஸ்மாயீலீ அவர்கள் இவ்வாறு கூறுகிறார். ஆனால் புகாரி அவர்கள் காலித் பின் மஃதான் ---> மிக்தாம் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஹதீஸை அறிவித்துள்ளார். இஸ்மாயீலீ அவர்கள் குறிப்பிடும் அறிவிப்பாளர்தொடர் ஷாத் அல்லது "அல்மஸீத் ஃபீ முத்தஸிலில் அஸானீத்" என்ற வகையில் சேரும்.

(பார்க்க: புகாரி-2072)


حدثنا أبو زرعة قَالَ: حَدَّثَنَا أَبُو مُسْهِرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ أم عبد الله بنت خَالِدٍ، وَأُمِّ الضَّحَّاكِ - مَوْلَاتِهِ - قَالَتَا: أَدْرَكَ ‌خَالِدُ ‌بْنُ ‌مَعْدَانَ سَبْعِينَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.


2883 - حَدَّثَنَا الْحَوْطِيُّ، نا أَبُو الْمُغِيرَةِ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ قَالَ: «أَدْرَكْتُ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم»

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو، نا أَبُو مُسْهِرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ، عَنْ أُمِّ عَبْدِ اللَّهِ بِنْتِ خَالِدٍ، وَأُمِّ الضَّحَّاكِ مَوْلَاتُهُ قَالَتَا: " أَدْرَكَ خَالِدُ بْنُ مَعْدَانَ سَبْعِينَ رَجُلًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

1 . இப்னு அபூஆஸிம்

2 . அப்துல்வஹ்ஹாப் பின் நஜ்தா-அல்ஹவ்தீ

3 . அபுல்முஃகீரா-அப்துல்குத்தூஸ் பின் ஹஜ்ஜாஜ்

4 . ஸஃப்வான் பின் அம்ர்-

5 . காலித் பின் மஃதான்.


1 . இப்னு அபூஆஸிம்


وَقَال أَبُو مسهر، عَنْ إِسْمَاعِيل بْن عياش: حدثتنا عبدة بنت خالد بْن معدان، وأم الضحاك بنت راشد مولاة خالد بْن معدان أن خالد بْن معدان قال: ‌أدركت ‌سبعين ‌رجلا من أصحاب النَّبِيّ صلى الله عليه وسلم.


وقال أبو مسهر، عن إسماعيل بن عياش: حدثتنا عبدة بنت خالد بن معدان، وأم الضحاك بنت راشد أن خالد بن معدان قال: ‌أدركت ‌سبعين ‌رجلا من أصحاب النبي صلى الله عليه وآله وسلم.


1584 - خالد بن معدان الكلاعي شامي ‌لقي ‌من ‌الصحابة ‌أبا ‌أمامة , والمقدام ‌بن ‌معدي ‌كرب , وعتبة بن عبد وابن أبي عميرة , وعبد الله بن بسر, والحارث بن الحارث [الغامدي - 2], وذا مخبر, وعتبة بن ندر, وأبا الغادية , وعبد الله بن عائذ الثمالي.

روى عنه بحير بن سعد , وثور بن يزيد - سمعت أبي يقول ذلك.


تعليقة على العلل لابن أبي حاتم (ص: 157)

قال ابن عبد الهادي:وَرِوَايَةُ بَقِيَّةَ عَنْ بَحِيرٍ صَحِيحَةٌ، سَوَاءٌ صَرَّحَ بِالْتَّحْدِيثِ أَمْ لا،

அபுல்அஸ்ஹர்-யஹ்யா பின் நுஃபைர்-அல்அன்மாரீ (ரலி)

أبو الأزهر- الأنماري ،النميري ،الشامي

(அபூஸுஹைர்-யஹ்யா பின் நுஃபைர்-நுஃகைர், நுகைர்)

தரம்: நபித்தோழர்.


இயற்பெயர்: யஹ்யா

தந்தை பெயர்: நுஃபைர்-நுஃகைர்...

வமிசம்: அல்அன்மாரீ அல்லது அன்னுமைரீ

புனைப்பெயர்: அபுல்அஸ்ஹர் அல்லது அபூஸுஹைர்,

ஊர் பெயர்: ஷாம்.

கால கட்டம்: 1.


அபுல்அஸ்ஹர்-அபூஸுஹைர் அல்அன்மாரீ (ரலி)

இந்த நபித்தோழர் அபூஸுஹைர் என்றும், அபுல்அஸ்ஹர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அல்அன்மாரீ அல்லது அன்னுமைரீ குலத்தைச் சேர்ந்தவர்.

1 . காலித் பின் மஃதான் (அபூதாவூத் நூல்).

2 . ஷுரைஹ் பின் உபைத்.

3 . கஸீர் பின் முர்ரா.


இவருடைய இயற்பெயர் அறியப்படவில்லை என்று அபூஸுர்ஆ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இவர் மூன்று ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவருடைய பெயர் யஹ்யா பின் நுஃபைர் என்று ஒருவர் குறிப்பிட்டதாக அபூஹாதிமிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவர், "இவரது புனைப்பெயரே (அபூஸுஹைர்) பிரபலமில்லாத போது, இவரது பெயர் எப்படி அறியப்படும்?" எனக் கூறி அந்தப் பெயரை அவர் அறியவில்லை என்று சொல்லிவிட்டார்.

இப்னு கானிஃ அவர்கள், "அபூஸுஹைர் அன்னுமைரீ அவர்களின் இயற்பெயர் யஹ்யா பின் நுஃபைர் ஆகும், இவர் ஹிம்ஸ் நகரத்தைச் சேர்ந்தவர்" என்று கூறியுள்ளார்.

இப்னு அபூஆஸிம்அவர்கள், "இவரது பெயர் ஹாதிம் என்று கூறியுள்ளார். இதையே தப்ரானீ அவர்கள் 'அல்முஃஜமுல் கபீர்' நூலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அஸ்தீ அவர்கள் தனது 'அல்மக்ஸூன்' நூலில், இவருடைய பெயர் மஃபத் என்றும், இவரிடமிருந்து ஷுரைஹ் மட்டுமே அறிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அவர்கள் 'அல்குனா' நூலில், இவரை "அபூஸுஹைர் அன்னுமைரீ அல்லது அல்அன்மாரீ என்றும், இவர் நபித்தோழர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்னு ஹஜர் அவர்கள் 'அல்இஸாபா' நூலில், "அபூதாவூத் அவர்கள் இவரது ஹதீஸை தனது ஸுனன் நூலில் பதிவு செய்துள்ளார். இந்த ஷாம் நாட்டு அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும். இவரிடமிருந்து கஸீர் பின் முர்ரா, ஷுரைஹ் பின் உபைத் ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.


தப்ரானீ, இப்னு அப்துல்பர், இப்னு ஹஜர் ஆகியோர் அபூஸுஹைர் அல்அன்மாரீ, அபூஸுஹைர் அன்னுமைரீ என்பவர்கள் இருவர் என்று கருதுகின்றனர்.

இப்னு ஹஜர் அவர்கள் அன்னுமைரீ அவர்களைப் பற்றித் தனியாகக் குறிப்பிடும்போது, வேறு ஒரு ஹதீஸைக் குறிப்பிட்டு, இதை அல்பஃகவி மற்றும் தப்ரானீ (முஸ்னதுஷ் ஷாமிய்யீன்) ஆகியோர் அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார். இவரைப் பற்றிய செய்தியில் பஃகவீ அவர்கள் இவர் ஷாம் நாட்டைச் சேர்ந்தவர் என்றே குறிப்பிட்டுள்ளார்.


இப்னு அபூஆஸிம், இப்னு மன்தஹ், அபூநுஐம், இப்னுல் அஸீர் போன்றவர்கள் இவர்கள் இருவரும் ஒருவரே என்கின்றனர்.

இப்னு ஹஜர் அவர்கள் 'தக்ரீப்' நூலில் இவர்கள் இருவரும் ஒருவராக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம் எனக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான வரலாற்று ஆதாரங்களின்படி இவர்கள் இருவரும் ஒருவரே என்பதே சரியான கருத்தாகும். இவர் இறந்த வருடம் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

1 . அல்குனா வல்அஸ்மா-முஸ்லிம் இமாம்-1/40.

2 . அல்ஆஹாத் வல்மஸானி-இப்னு அபீ ஆஸிம்-3/118.

3 . அல்மக்ஸூன்-அல்அஸ்தி-248.

4 . அல்ஜர்ஹ் வத்தஃதீல்-இப்னு அபீ ஹாதிம்-9/374.

5 . முஃஜமுஸ் ஸஹாபா-இப்னு கானிக்-3/239.

6 . மஃரிஃபதுஸ் ஸஹாபா-இப்னு மன்தஹ்-2/869.

7 . மஃரிஃபதுஸ் ஸஹாபா-அபூநுஐம்-5/2898.

8 . அல்இஸ்தீஆப்-இப்னு அப்துல் பர்-708–709.

9 . தஹ்தீபுல் கமால்-அல்மிஸ்ஸி-33/23.

10 . அஸதுல் காபா-இப்னுல் அஸீர்-6/126.

11 . தவ்ளீஹுல் முஷ்தபிஹ்-இப்னு நாஸிருத்தீன்-9/113.

12 . தஹ்தீபுத் தஹ்தீப்-இப்னு ஹஜர்-12/7.

13 . அல்இஸாபா-இப்னு ஹஜர்-7/9, 7/131.


أبو زُهَير النُّمَيْري ‌يَحْيى ‌بن ‌نُغَيْر بالغين، رَوَى عنه شُرَيْح بن عُبَيْد وأبو المُصَبِّح.


وأما نغير أوّله نون مضمومة وبعدها غين معجمة مفتوحة فهو أبو زهير النميرى واسمه يحيى بن نغير روى عنه شريح بن عبيد وابو المصبح - قاله صاحب تاريخ الحمصيين.


أَبُو زُهَيْر النميري يحيى بن نغير روى عَنهُ شُرَيْح بن عبيد وَأَبُو المصبح المقرئي قلت: وَذكره المُصَنّف فِي حرف النُّون بِالْقَافِ بدل الْغَيْن الْمُعْجَمَة وَلم يشر إِلَى الْخلاف فِي ذَلِك هُنَا وَلَا فِي حرف النُّون وَقد ذكرت الْخلاف فِيهِ فِي حرف النُّون


أَبُو زُهَيْر ‌يَحْيَى ‌بنُ ‌نُغَيْر النُّمَيْريّ، كزُبَيْر، وَيُقَال: الأنْماريّ وَيُقَال: التَّميميّ، وَيُقَال: ابْن نُفَيْر، بالفاءِ، كَذَا فِي نسختنا. وَفِي التَّكْملَة بِالْقَافِ، وَمثله فِي التَّبْصير، صَحابيٌّ، روى عنهُ الحِمْصِيُّون.


أبو زهير، ويقال: أبو الأزهر، الأنماري، ويقال: النُمَيري.

صَحَابيُّ رضي الله عنه كان يسكن الشام، روى عن النبي صلى الله عليه وسلم كما عند أبي داود -

1 - خالد بن معدان - عند أبي داود أيضاً -،

2 - وشُريح بن عبيد،

3 - وكثير بن مرة.

وذكر أبو زرعة أنه لايُسمى، وقد روى ثلاثة أحاديث.

وذُكر لأبي حاتم أن رجلاً سماه: يحيى بن نُفير (1)، فلم يعرفه، وقال: إنه غير معروف بكنيته، فكيف يُعرف اسمه!؟

وقال ابن قانع: أبو زهير النميري: يحيى بن نفير، حمصي.

وقال ابن أبي عاصم: وذكروا أنه اسمه حاتم، وبه جزم الطبراني في «المعجم الكبير» (22/ 296)،

وذكر الأزدي في «المخزون» أن اسمه «معبد» تفرد عنه شريح.

وذكره الإمام مسلم في «الكنى» وقال: أبو زهير النميري أو الأنماري، له صحبة.

وذكره ابن حجر في «الإصابة» وقال: إن أبا داود أخرج حديثه في «السنن» بسند جيد شامي. وذكر ممن روى عنه: كثير بن مرة، وشريح بن عبيد.

وقد فرَّق الطبراني في «الكبير» (22/ 296 - 298)، وابن عبد البر، وابن حجر في «الإصابة» بين أبي زهير الأنماري، وبين أبي زهير النميري، والأخير ترجمه في «الإصابة» أيضاً، وذكر فيه الحديث محل الدراسة، وعزاه إلى البغوي، والطبراني في «مسند الشاميين»، وذكر أن البغوي قال: سكن الشام. وأمَّا ابنُ أبي عاصم، وابن منده، وأبو نعيم، وابن الأثير، وغيرهم، فذكروا أنهما واحد.

وذكر ابن حجر في «التقريب» احتمال أنهما واحد.

والراجح أنهما واحد (1)، كما في سائر مصادر ترجمته، ولم أجد تحديد وفاته.

[«الكنى والأسماء» للإمام مسلم (ص 40)، «الآحاد والمثاني» لابن أبي عاصم (3/ 118)، «المخزون» للأزدي (248)، «الجرح والتعديل» (9/ 374)، «معجم الصحابة» لابن قانع (3/ 239)، «معرفة الصحابة» لابن منده (2/ 869)، «معرفة الصحابة» لأبي نعيم (5/ 2898)، «الاستيعاب» ط. دار الأعلام (ص 708 - 709)، «تهذيب الكمال» (33/ 23)، «أسد الغابة» (6/ 126)، «توضيح المشتبه» لابن ناصر الدين (9/ 113)، «تهذيب التهذيب» (12/ 7)، «الإصابة» (7/ 9)، (7/ 131)]

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.