அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை, மாலை வேளைகளில் இந்த துஆக்களை ஓதுவதை விடுவதே இல்லை:
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆஃபியத ஃபித்துன்யா வல்ஆகிரஹ். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அஃப்வ வல்ஆஃபியத ஃபீ தீனீ, வ துன்யாய, வ அஹ்லீ, வ மாலீ. அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வ ஆமின் ரவ்ஆதீ, அல்லாஹும்மஹ்ஃபள்னீ மிம் பைனி யதைய்ய, வ மின் கல்ஃபீ, வ அன் யமீனீ, வ அன் ஷிமாலீ, வ மின் ஃபவ்கீ. வ அஊது பிஅளமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.
(பொருள்: “அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் உன்னிடம் நான் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது மார்க்கத்திலும், எனது உலக வாழ்விலும், எனது குடும்பத்திலும், எனது செல்வத்திலும் உன்னிடம் மன்னிப்பையும் நல்வாழ்வையும் கேட்கிறேன். அல்லாஹ்வே! எனது குறைகளை மறைப்பாயாக! எனது அச்சங்களைப் போக்கி எனக்கு அமைதி அளிப்பாயாக! அல்லாஹ்வே! எனக்கு முன்னாலிருந்தும், எனக்குப் பின்னாலிருந்தும், எனது வலப்புறத்திலிருந்தும், எனது இடப்புறத்திலிருந்தும், எனக்கு மேலிருந்தும் என்னை நீ பாதுகாப்பாயாக! நான் எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவதை விட்டும் உனது மகத்துவத்தைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
உஸ்மான் பின் அபூஷைபா அவர்களின் அறிவிப்பில், “அல்லாஹும்மஸ்துர் அவ்ரதீ” என்று இடம்பெற்றுள்ளது.
இதன் (அறிவிப்பாளர்களில் ஒருவரான) வகீஃ அவர்கள், “எனக்குக் கீழிருந்து வஞ்சிக்கப்படுவது” என்பதற்கு “நிலநடுக்கம்-அதாவது பூமி பிளந்து உள்வாங்குவதைக் குறிக்கும்” என்று விளக்கமளித்தார்.
(அபூதாவூத்: 5074)حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، قَالَا: حَدَّثَنَا عُبَادَةُ بْنُ مُسْلِمٍ الْفَزَارِيُّ، عَنْ جُبَيْرِ بْنِ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ:
لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُ هَؤُلَاءِ الدَّعَوَاتِ، حِينَ يُمْسِي، وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَتِي»، وَقَالَ عُثْمَانُ: «عَوْرَاتِي وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي»
قَالَ أَبُو دَاوُدَ: «قَالَ وَكِيعٌ يَعْنِي الْخَسْفَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5074.
Abu-Dawood-Alamiah-4412.
Abu-Dawood-JawamiulKalim-4414.
இந்தச் செய்தியின் இரு அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
2 . யஹ்யா பின் மூஸா-அல்ஹதானீ
3 . வகீஉ பின் ஜர்ராஹ்
4 . உபாதா பின் முஸ்லிம்-அல்ஃபஸாரீ
5 . ஜுபைர் பின் அபூஸுலைமான்
6 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
2 . உஸ்மான் பின் அபூஷைபா-அல்அபஸீ
3 . அப்துல்லாஹ் பின் நுமைர்-அல்ஹம்தானீ
4 . உபாதா பின் முஸ்லிம்-அல்ஃபஸாரீ
5 . ஜுபைர் பின் அபூஸுலைமான்
6 . அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20693-உபாதா பின் முஸ்லிம் அவர்களை வகீஃ, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூநுஐம்-ஃபள்ல் பின் துகைன், நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் பலமானவர் என்று கூறியுள்ளனர். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் லா பஃஸ பிஹி என்று கூறியுள்ளார். (இதை இவர் பலமானவர், சுமாரானவர், தனி ஆதாரமாக ஏற்கமுடியாதவர் ஆகியோருக்கும் கூறுவார்). - யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 83
அவர்கள், இவர் சுமாரானவர் என்ற தரத்தில் கூறியுள்ளார். - இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். விமர்சிக்கப்பட்டவர்களின் பட்டியலிலும் கூறியுள்ளார். (இவரைப் பற்றிய விமர்சனம் சரியல்ல) - இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.
(நூல்கள்: தாரீகுல் கபீர்-7/108, அல்மஃரிஃபது வத்தாரீக்-3/234, அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/96, அஸ்ஸிகாத்-7/160, அல்மஜ்ரூஹீன்-2/173, தஹ்தீபுத் தஹ்தீப்-2/286, தக்ரீபுத் தஹ்தீப்-3159)
இவர் பலமானவர் என்ற கருத்தே சரியானது.
பார்க்க: ராவி பெயர்-உபாதா பின் முஸ்லிம்.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: … அஹ்மத்-4785, இப்னு மாஜா-3871, அபூதாவூத்-5074, குப்ரா நஸாயீ-, நஸாயீ-5529, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, ஹாகிம்- 1902, …
சமீப விமர்சனங்கள்