அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று விஷயங்கள் என் மீது கடமையாக்கப்பட்டுள்ளன; அவை உங்களுக்கு உபரியான (சுன்னத்தான) வணக்கங்களாகும். (அவை:) வித்ருத் தொழுகை, குர்பானி கொடுத்தல், ளுஹாத் தொழுகை ஆகியவையாகும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 2050)حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، عَنْ أَبِي جَنَابٍ الْكَلْبِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:
” ثَلاثٌ هُنَّ عَلَيَّ فَرَائِضُ، وَهُنَّ لَكُمْ تَطَوُّعٌ: الْوَتْرُ، وَالنَّحْرُ، وَصَلاةُ الضُّحَى “
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-2050.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
2 . ஷுஜாஃ பின் வலீத்-அஸ்ஸகூனீ (3. பலமானவர்).
3 . யஹ்யா பின் அபூஹய்யா-அபூஜனாப் (8. பலவீனமானவர்).
4 . இக்ரிமா-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை (3. பலமானவர்).
5 . அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) (1. நபித்தோழர்).
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஜனாப் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-2050, அல்முஃஜமுல் கபீர்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, தாரகுத்னீ-1631, ஹாகிம்-1119, குப்ரா பைஹகீ-,
- ஜாபிர் அல்ஜுஅஃபீ —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, அப்து பின் ஹுமைத்-, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-,
- ஜாபிர் அல்ஜுஅஃபீ —> அபூஜஅஃபர், அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
பார்க்க: அஹ்மத்-,
- முபாரக் பின் அபூஹம்ஸா —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
- ஸிமாக் பின் ஹர்ப் —> இக்ரிமா —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: குப்ரா பைஹகீ-,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-.
3 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஸஃப்வதுத் தஸவ்வுஃப்-,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-5556,
சமீப விமர்சனங்கள்