தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-504

 

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

அஸர் தொழுகையின் ஆரம்ப நேரம்.

504. ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையின் நேரங்களைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னுடன் சேர்ந்து தொழுவீராக” என்று கூறினார்கள். முதல் நாளில், சூரியன் உச்சி சாய்ந்தபோது ளுஹர் தொழுகையையும், ஒவ்வொரு பொருளின் நிழலும் அதன் அளவுக்கு வந்தபோது அஸர் தொழுகையையும், சூரியன் மறைந்தபோது மஃரிப் தொழுகையையும், செவ்வானம் மறைந்தபோது இஷா தொழுகையையும் தொழுதார்கள். மறுநாளில், ஒரு மனிதனின் நிழல் அவரது  உயரத்திற்குச் சமமாக வந்தபோது ளுஹர் தொழுகையையும், அவரது நிழல் இருமடங்காக உயர்ந்தபோது அஸர் தொழுகையையும், செவ்வானம் மறைவதற்குச் சற்று முன்பாக மஃரிப் தொழுகையையும் நபியவர்கள் தொழுதார்கள்.

 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

 

 

 

 

 

 

(நஸாயி: 504)

(7) أَوَّلُ وَقْتِ الْعَصْرِ

:أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ، قَالَ: حَدَّثَنَا ثَوْرٌ ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ ، عَنْ جَابِرٍ قَالَ

«سَأَلَ رَجُلٌ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَنْ مَوَاقِيتِ الصَّلَاةِ؛ فَقَالَ: صَلِّ مَعِي، فَصَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ حِينَ كَانَ فَيْءُ كُلِّ شَيْءٍ مِثْلَهُ، وَالْمَغْرِبَ حِينَ غَابَتِ الشَّمْسُ، وَالْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ قَالَ: ثُمَّ صَلَّى الظُّهْرَ حِين كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَهُ، وَالْعَصْرَ حِينَ كَانَ فَيْءُ الْإِنْسَانِ مِثْلَيْهِ، وَالْمَغْرِبَ حِينَ كَانَ قُبَيْلَ غَيْبُوبَةِ الشَّفَقِ. قَالَ عَبْدُ اللهِ بْنُ الْحَارِثِ: ثُمَّ قَالَ فِي الْعِشَاءِ: أُرَى إِلَى ثُلُثِ اللَّيْلِ».


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-504.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.



கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.