அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்த அளவுக்கென்றால்,கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம்: 45
(முஸ்லிம்: 5038)حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ، عَنِ الْعَلَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ، مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»
Muslim-Tamil-5038.
Muslim-TamilMisc-4679.
Muslim-Shamila-2582.
Muslim-Alamiah-4679.
Muslim-JawamiulKalim-4685.
இந்தச் செய்தியின் 3 அறிவிப்பாளர்தொடர்களின் அறிவிப்பாளர்கள்:
1 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம்-முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஹஜ்ஜாஜ்,
2 . யஹ்யா பின் அய்யூப்-அல்மகாபிரீ, 3 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ, 4 . அலீ பின் ஹுஜ்ர்.
5 . இஸ்மாயீல் பின் ஜஅஃபர்-அல்அன்ஸாரீ
6 . அலாஉ பின் அப்துர்ரஹ்மான்
7 . அப்துர்ரஹ்மான் பின் யஃகூப்-அல்ஜுஹனீ
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)-அப்துர்ரஹ்மான் பின் ஸக்ர்
இந்தச் செய்தியின் கருத்து சரியானதா?
அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகளில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் இந்தச் செய்திக்குக் கூறிய விளக்கத்தையே பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர்.
(பார்க்க: ஹாகிம்-3231, 8716)
شرح النووي على مسلم (16/ 136):
[2582] لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ) هَذَا تَصْرِيحٌ بِحَشْرِ الْبَهَائِمِ يَوْمَ الْقِيَامَةِ وَإِعَادَتِهَا يَوْمَ الْقِيَامَةِ كَمَا يُعَادُ أَهْلُ التَّكْلِيفِ مِنَ الْآدَمِيِّينَ وَكَمَا يُعَادُ الْأَطْفَالُ وَالْمَجَانِينُ وَمَنْ لَمْ تَبْلُغْهُ دَعْوَةٌ وَعَلَى هَذَا تَظَاهَرَتْ دَلَائِلُ الْقُرْآنِ وَالسُّنَّةِ قَالَ اللَّهُ تَعَالَى وَإِذَا الْوُحُوشُ حشرت وَإِذَا وَرَدَ لَفْظُ الشَّرْعِ وَلَمْ يَمْنَعْ مِنْ إِجْرَائِهِ عَلَى ظَاهِرِهِ عَقْلٌ وَلَا شَرْعٌ وَجَبَ حَمْلُهُ عَلَى ظَاهِرِهِ قَالَ الْعُلَمَاءُ وَلَيْسَ مِنْ شَرْطِ الْحَشْرِ وَالْإِعَادَةِ فِي الْقِيَامَةِ الْمُجَازَاةُ وَالْعِقَابُ وَالثَّوَابُ وَأَمَّا الْقِصَاصُ مِنَ الْقَرْنَاءِ لِلْجَلْحَاءِ فَلَيْسَ هُوَ مِنْ قِصَاصِ التكليف إذلا تَكْلِيفَ عَلَيْهَا بَلْ هُوَ قِصَاصُ مُقَابَلَةٍ وَالْجَلْحَاءُ بِالْمَدِّ هِيَ الْجَمَّاءُ الَّتِي لَا قَرْنَ لَهَا وَاللَّهُ أَعْلَمُ قَوْلُهُ صلى الله عليه وسلم
இந்தச் செய்திப் பற்றி முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
நூலுக்கு விரிவுரை அளித்த நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் அவர்களின் விளக்கம்:
மறுமை நாளில் மனிதர்களில் விசாரணைக்கு தகுதியானவர்கள், சிறுவர்கள், பைத்தியக்காரர்கள், இஸ்லாமிய அழைப்பு சென்றடையாதவர்கள் போன்ற அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதைப் போன்றே, விலங்குகளும் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு தெளிவான சான்றாகும்.
“விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது…” (அல்குர்ஆன் 81:5) எனும் இறைவசனமும் இதற்குச் சான்றாகும்.
மார்க்க ரீதியான ஒரு சொல் வரும்போது, அதை அதன் நேரடிப் பொருளில் புரிந்துக் கொள்வதற்கு அறிவோ அல்லது மார்க்கமோ தடையாக இல்லாத பட்சத்தில், அதை அதன் நேரடிப் பொருளிலேயே புரிந்துக் கொள்வது அவசியமாகும்.
இதனடிப்படையில் அறிஞர்கள் கூறுகின்றனர்:
மறுமையில் அல்லாஹ்விடமிருந்து நற்கூலியையோ அல்லது தண்டனையையோ பெறக்கூடியவர்களைத் தான் அல்லாஹ் மீண்டும் உயிர்க் கொடுத்து எழுப்பி ஒன்றுத் திரட்ட வேண்டிய தேவை உள்ளது என்று கருதக் கூடாது. அதாவது பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ள ஜின், மனித இனத்தைத் தான் அல்லாஹ் மீண்டும் உயிர்க்கொடுத்து எழுப்புவான் என்று புரிந்துக் கொள்ளக்கூடாது.
கொம்பு உள்ள பிராணியிடமிருந்து கொம்பில்லாத பிராணிக்காக பழி வாங்குவது என்பது இறைச் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்ற சட்டத்திற்குட்டவர்களுக்கு கூறப்படும் சட்டம் போன்றது அல்ல. காரணம் அவற்றின் மீது மார்க்கக் கடமைகள் ஏதுமில்லை. (உலகில் அவைகளால் பாதிப்பு ஏற்பட்டால் அவைகளுக்கு எந்தச் சட்டமும் இல்லை. சில நேரம் அதன் உரிமையாளர்கள் அதனால் தண்டிக்கப்படுவார்கள்)
மாறாக, இது சமநிலைப்படுத்துவதற்காக (நீதியின் அடிப்படையில்) நடப்பதாகும்.
(நூல்: ஷரஹ் நவவீ-16/136)
நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் அவர்களின் கருத்து பற்றி எளிதான விளக்கம்:
-
மீண்டும் உயிர்க்கொடுத்து எழுப்பப்படுவது என்பது மனிதர்களுக்கு, ஜின்களுக்கு மட்டுமல்ல: மறுமை நாளில் உயிர்ப்பிக்கப்பட்டு எழுப்பப்படுவது என்பது, தண்டனை பெறுவதற்கோ அல்லது சொர்க்கம் செல்வதற்கோ மட்டும்தான் என்று நினைக்கக் கூடாது. அல்லாஹ் தனது நீதியை நிலைநாட்ட விலங்குகளையும் எழுப்புவான்.
-
விலங்குகளுக்கு இடையிலான நீதி: இவ்வுலகில் கொம்பு உள்ள ஒரு ஆடு, கொம்பில்லாத ஒரு ஆட்டை முட்டியிருந்தால், மறுமை நாளில் கொம்பில்லாத ஆட்டிற்கு அல்லாஹ் கொம்பைக் கொடுத்து, தன்னை முட்டிய ஆட்டைத் திருப்பி முட்டச் செய்வான்.
-
முக்கியமான வேறுபாடு: விலங்குகளிடையே நடைபெறும் இந்த “பழிவாங்குதல்” என்பது மனிதர்கள் செய்யும் நன்மைகள், தீமைகள் கணக்கைப் போன்றது அல்ல.
-
மனிதர்களுக்கு: அவர்கள் அறிவுடையவர்கள் என்பதால் அவர்கள் மீது மார்க்கக் கடமை உண்டு. எனவே அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சொர்க்கம் அல்லது நரகம் செல்வார்கள்.
-
விலங்குகளுக்கு: அவைகளுக்கு மார்க்க கடமைகள் இல்லை. அவற்றுக்கு பகுத்தறிவு கொடுக்கப்படவில்லை என்பதால் அவற்றின் மீது எந்தச் சட்டக் கடமையும் இல்லை.
-
-
ஏன் இந்த நீதி? விலங்குகளுக்கு இடையே நடக்கும் இந்தத் தீர்ப்பு, அல்லாஹ் எவ்வளவு பெரிய நீதியாளன் என்பதைக் காட்டுவதற்காக மட்டுமே.
شرح المصابيح لابن الملك (5/ 361):
فإن قيل: الشاة غير مكلَّفة، فكيف يُقتصُّ منها؟ قلنا: الله تعالى فعَّال لما يريد: {لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ} [الأنبياء: 23]، والغرض منه: إعلامُ العباد بأن الحقوقَ لا تضيع، بل يُقتصُّ حقُّ المظلوم من الظالم.
இதே கருத்தை முஹம்மத் பின் இஸ்ஸுத்தீன்-இப்னுல் மலக் என்பவரும் கூறியுள்ளார்:
ஆடு பகுத்தறிவற்ற விலங்கு என்பதால் அது மார்க்கச் சட்டங்களுக்கு உட்பட்டது அல்லவே; அவ்வாறிருக்கையில் அதனிடம் எவ்வாறு பழிவாங்கப்படும்?” என்று கேட்கப்பட்டால், அதற்கு நாம் கூறும் பதில்:
அல்லாஹ் தான் நாடியதைச் செய்பவன்.
அவன் செய்வது பற்றி விசாரிக்கப்பட மாட்டான். அவர்களே விசாரிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன்: 21:23)
எனவே இதன் நோக்கம் என்னவென்றால்: (மறுமையில்) உரிமைகள் ஒருபோதும் வீணாகாது என்பதையும், அநியாயம் செய்தவனிடமிருந்து அநியாயம் செய்யப்பட்டவனுக்குரிய உரிமை மீட்கப்படும் என்பதையும் அடியார்களுக்குத் தெளிவுபடுத்துவதே ஆகும்.
(நூல்: ஷரஹுல் மஸாபீஹ்-5/361)
மனித, ஜின் கூட்டத்தாரை விட மற்றவர்களுக்கு உயிப்பித்தல் இல்லை என்று கூறியோர்:
ரூஹுல் மஆனீ எனும் குர்ஆன் விரிவுரையின் நூலாசிரியர் ஆலூஸீ அவர்கள் மேற்கண்ட கருத்தில் வரும் ஹதீஸ்களைக் குறிப்பிட்ட பின்பு ஃகஸாலீ இமாமும், வேறு சிலரும் பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ள ஜின், மனித இனத்தைத் தவிர மற்றவர்கள் மீண்டும் உயிர்க் கொடுத்து எழுப்பப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளனர் என்ற கருத்தை குறிப்பிட்ட பின் என்னுடைய கருத்தும் இதுவே என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட செய்திக்கு ஆலூஸீ அவர்கள் கூறும் விளக்கம்: உலகில், முட்டிய ஆட்டையும் பழிவாங்கப்படும் என்று கூறியிருப்பது அல்லாஹ் அந்தளவுக்கு நீதியாளன் என்று சிலேடையாக, இலக்கியமாக கூறுவது நோக்கமாகும்.
இந்த தகவலைக் குறிப்பிட்ட அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை தவறான கருத்து என்று குறிப்பிட்டுவிட்டு ஹதீஸில் வந்துள்ள தகவலை மாற்றுப் பொருள் தர தேவையேற்படாதபோது அதில் உள்ளவாறே (அதாவது நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
இமாம் கூறியுள்ள அடிப்படையில்) புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும், மேற்கண்ட விளக்கங்களையும் கூறியுள்ளார்.
(நூல்கள்: ரூஹுல் மஆனீ-15/255, ஸஹீஹா-1967)
விலங்குகளாலோ (கால்நடைகளாலோ) கிணற்றின் மூலமாகவோ அல்லது சுரங்கத்திலோ ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் (அதன் சொந்தரக்காரனிடம்) நஷ்டஈடு கேட்கப்பட மாட்டாது. (புகாரி-1499)
இந்த ஹதீஸின் அடிப்படையில், மறுமையில் விலங்குகளுக்கு மத்தியில் பழிவாங்குதல் நடைபெறுவதாக வரும் மேற்கண்ட செய்தியை கருத்து சரியில்லை என்று சிலர் மறுக்கின்றனர்.
பார்க்க: விலங்குகளுக்கு மறுமை நிலை என்ன?.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அலாஉ —> அப்துர்ரஹ்மான் பின் யஃகூப் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அஹாதீஸு இஸ்மாயீல் பின் ஜஅஃபர்-282, அஸ்ஸுஹ்த்-அஸத் பின் மூஸா-102, அஹ்மத்-7204, 7996, 8288, 8847, 9333, அல்அதபுல் முஃப்ரத்-183, முஸ்லிம்-5038, திர்மிதீ-2420, முஸ்னத் பஸ்ஸார்-8296, முஸ்னத் அபீ யஃலா-6513, இப்னு ஹிப்பான்-7363, ஃபவாஇத் தம்மாம்-, குப்ரா பைஹகீ-11505, …
- அஹாதீஸு இஸ்மாயீல் பின் ஜஅஃபர்-282.
أحاديث إسماعيل بن جعفر (ص: 344)
282 – حَدَّثَنَا الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى تُقَادَ الشَّاةُ الْجَلْحَاءُ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ»
…
- அஸ்ஸுஹ்த்-அஸத் பின் மூஸா-102.
الزهد لأسد بن موسى (ص: 79)
102 – نا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَتُؤَدُّنَ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ يَوْمَ الْقِيَامَةِ»
…
- அப்துர்ரஹ்மான் பின் அபூநுஃம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-,
- முஹம்மத் பின் கஅப் —> ஒரு மனிதர் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: தஃப்ஸீருத் தபரீ-,
- கஸீர் பின் உபைத் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
- யஸீத் பின் அஸம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க: ஹாகிம்-3231,
2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: ஹாகிம்-8716.
3 . உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
4 . அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-4069,
https://www.youtube.com/watch?v=o1_sYti6seo