தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-71

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 13

அல்லாஹ் யாருக்கு (மிகப்பெரும்) நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.

எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான்.

(போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன்.

இந்தச் சமுதாயத்தில் ஒரு சாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை தாம் செவியேற்றதாக முஆவியா (ரலி) அவர்கள் தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 3

(புகாரி: 71)

بَابٌ: مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعْتُ مُعَاوِيَةَ، خَطِيبًا يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَاللَّهُ يُعْطِي، وَلَنْ تَزَالَ هَذِهِ الأُمَّةُ قَائِمَةً عَلَى أَمْرِ اللَّهِ، لاَ يَضُرُّهُمْ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»


Bukhari-Tamil-71.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-71.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  • இந்த ஹதீஸின் மூன்றாவது பகுதியின் முழுக் கருத்தை தெரிந்துக் கொள்ள பார்க்க: முஸ்லிம்-3889.

1 . இந்தச் செய்தியின் மூன்றாவது பகுதியின் கருத்தில் முஆவியா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸுஹ்ரீ —> ஹுமைத் பின் அப்துர்ரஹ்மான் —> முஆவியா (ரலி)

பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-, புகாரி-7131167312 ,

  • இப்னு ஜாபிர் —> உமைர் பின் ஹானிஃ —> முஆவியா (ரலி)

பார்க்க: புகாரி-36417460 ,


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8274 .

3 . இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2484 .

4 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7643 .

5 . ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3890 .

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-3889 .

7 . ஜாபிர் பின் அப்துல்லாஹ்

8 . ஜாபிர் பின் ஸமுரா

9 . ஸவ்பான்

10 . முஃகீரா பின் ஷுஅபா

11 . உமர்

12 . குர்ரா பின் இயாஸ்

13 . ஸைத் பின் அர்கம்

14 . அனஸ்

15 . ஷுரஹ்பீல் பின் ஸிம்த்

16 . நவ்வாஸ் பின் ஸம்ஆன்

17 . முஆத் பின் ஜபல்

18 . அப்துல்லாஹ் பின் நுஃபைல்

19 . நுஃமான் பின் பஷீர்

20 . ஷத்தாத் பின் அவ்ஸ்

21 . ஸலமா பின் நுஃபைல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-3561.


1 . இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் சிலவற்றில், மறுமைநாள் வரும் வரை ஒரு பிரிவினர் சத்தியத்தில் இருப்பார்கள்; தங்களின் எதிரிகளை வெல்வார்கள் என்றும் பொதுவாக வந்துள்ளது.

2 . சிலவற்றில் இவர்கள், (மதீனாவிற்கு) மேற்குத் திசையில் இருப்பார்கள் என்று வந்துள்ளது. (பார்க்க: முஸ்லிம்-3890)

3 . சிலவற்றில் இவர்கள், ஷாமில் இருப்பார்கள் என்று வந்துள்ளது. (பார்க்க: புகாரி-3641)

4 . சிலவற்றில் இவர்கள், பைத்துல் முகத்தஸில் இருப்பார்கள் என்று வந்துள்ளது. (பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7643)

5 . சிலவற்றில் இவர்கள், பைத்துல் முகத்தஸிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருப்பார்கள் என்றும் வந்துள்ளது. (பார்க்க: அஹ்மத்-22320)

(மதீனாவிற்கு மேற்கே ஷாம் இருப்பதாலும், ஷாம் தேசத்தின் சிறப்பு பற்றி வேறு சில ஹதீஸ்களும் வந்துள்ளதாலும் நபி (ஸல்) அவர்களால், மேற்குவாசிகள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் சிரியாவாசிகள் என்று சிலர் கூறியுள்ளனர். இஸ்லாமிய உலகில் ஷாம் தேசம் என்பது சிரியா, ஜோர்டான், லெபனான், ஃபலஸ்தீன் ஆகியவையாகும். ஃபலஸ்தீனை இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தாலும் ஃபலஸ்தீன் பகுதியில் தான் பைத்துல்முகத்தஸ் உள்ளது.

எனவே ஹதீஸ்களில் மேற்குவாசிகள், ஷாம்வாசிகள், பைத்துல்முகத்தஸ் பகுதியில் இருப்பவர்கள் என்று பலவாறு கூறப்பட்டிருப்பதில் முரண்பாடு இல்லை)


இந்தச் செய்திகள் அனைத்தையும் இணைத்து, ஆய்வு செய்துள்ள சில ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்த நிலை ஒவ்வொரு காலத்திற்கும் மாறுபடும் என்று கூறியுள்ளனர்.

சத்தியவாதிகள் என்போர் போராளிகள், ஹதீஸ்கலை அறிஞர்கள், மார்க்க அறிஞர்கள் போன்ற எல்லா வகையினரிலும் இருப்பார்கள் என்றும்; இந்த வகையினர் உலகின் பலபகுதிகளிலும் இருப்பார்கள்; குறிப்பாக மறுமைநாளின் நெருக்கத்தில் ஷாமில், பைத்துல்முகத்தஸ் பகுதியில் இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-5650 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.