தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2192

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை.

2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை.

எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை, அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.

அறிவிப்பவர்: (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ பின் மதீனீ அவர்கள், அந்தக் கூட்டத்தினர் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆவார்கள் என்று கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

குர்ரா பின் இயாஸ் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.


بَابُ مَا جَاءَ فِي الشَّامِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ، لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»

قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: قَالَ عَلِيُّ بْنُ المَدِينِيِّ: هُمْ أَصْحَابُ الحَدِيثِ.
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَوَالَةَ، وَابْنِ عُمَرَ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَأْمُرُنِي؟ قَالَ: «هَاهُنَا»، وَنَحَا بِيَدِهِ نَحْوَ الشَّامِ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2192.
Tirmidhi-Alamiah-2118.
Tirmidhi-JawamiulKalim-2122.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . தயாலிஸீ

4 . ஷுஅபா

5 . முஆவியா பின் குர்ரா

6 . குர்ரா பின் இயாஸ் (ரலி)


 


12 . இந்தக் கருத்தில் குர்ரா பின் இயாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-, திர்மிதீ-2192, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,


மேலும் பார்க்க: புகாரி-71.

திர்மிதீ இமாம்

இமாம் திர்மிதி

முழுப்பெயர்: முகம்மது இப்னு ஈஸா இப்னு ஸுரது இப்னு மூஸா இப்னுல் லிகாகுஸ்ஸில்மிய்யி (திர்மிதி என்ற ஹதீஸ் நூலை தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூஈஸா அத்திர்மிதி அல்லரீருல் ஹாஃபிழ்

இயற்பெயர்: முகம்மது

தந்தைபெயர்: ஈஸா

பிறந்த ஊர்: ஈரானின் வட எல்லையில் உள்ள ஜுஹுன் எனும் ஆற்றோரத்தில் அமைந்திருந்த திர்மிதி எனும் ஊரில் இவர் பிறந்தார். எனவே தான் இவர் திர்மிதி என்று அழைக்கப்படுகிறார்.

பிறப்பு: ஹிஜ்ரி 210ல் பிறந்தார்.

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானிலுள்ள குராஸான், இராக்கிலுள்ள கூஃபா, பக்தாத் போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஹிஜாஸ், பஸரா,  புகாரா, நைஸாபூர், மக்கா, மதினா, வாஸித், ரயீ போன்ற உலகின் பல பாகங்களுக்கும் பயணம் சென்றுள்ளார்.

ஜாமிவுத்திர்மீதி,

அல்இலலுல்கபீர் (அறிவிப்பாளர்களின் குறைகள் தொடர்பானது),

ஷமாயில்,

அஸ்மாவுஸ் ஸஹாபா  (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

அல்அஸ்மாவு வல்குனா (அறிவிப்பாளர்களின் பெயர்கள் தொடர்பானது),

கிதாபுஸ் ஸுஹுத் போன்ற பல புத்தகங்களை தொகுத்துள்ளார்.

முஹம்மது இப்னு இஸ்மாயில் அல்புகாரி, இப்ராஹீம் இப்னு அப்துல்லாஹ் இப்னு முன்திரில் பாஹிலியி அஸ்ஸன்ஆனி, இஸ்ஹாக் இப்னு ராஹவைஹ், குதைபா இப்னு ஸயீத், மஹ்மூத் இப்னு கைலான், ஸிபாஃ இப்னு நல்ர் போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

அபூபக்கர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் அஸ்ஸமர்கந்தி, அபூஹாமீது அஹ்மது இப்னு அப்துல்லாஹ் இப்னு தாவூத் அல் மரூஸி, அஹ்மத் இப்னு யூசுப் அன்நசபீ, அஸத் இப்னு ஹம்தவைஹி அன்நசபீ, ஹுசைன் இப்னு யூசுப் அல்பர்பரீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 279ல் ரஜப் மாதம் பிறை 13 திங்கள் இரவில் தமது சொந்த ஊரில் இமாம் திர்மிதி மரணமடைந்தார். அப்போது அவருக்கு 69 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

மஹ்மூத் பின் ஃகைலான்

محمود بن غيلان

இறப்பு: ஹிஜ்ரி 239, ரமளான் மாதம், மர்வ

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: மஹ்மூத் பின் ஃகைலான்

தந்தை பெயர்: ஃகைலான்

வம்சம்: அல்அத்வீ

புனைப்பெயர்: அபூ அஹ்மத்

ஊர் பெயர்: மர்வ

பயணித்த ஊர்கள்: மர்வ, பக்தாத்

இறப்பு: ஹிஜ்ரி 239, ரமளான் மாதம், மர்வ

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

மஹ்மூத் பின் ஃகைலான் ரஹ் அவர்கள் அபூ அஹ்மத் என்ற குன்யாவுடன் அறியப்பட்டவர். இவர் பலமானவர் ஆவார். இவர் மர்வ மற்றும் பக்தாத் ஆகிய இடங்களில் வாழ்ந்துள்ளார்.

இவர் ஹிஜ்ரி 239 ரமளான் மாதம் மர்வவில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): வகீஃ பின் அல்ஜர்ராஹ், ஸுஃப்யான் பின் உயைனா, அன்னள்ர் பின் ஷுமைல் அல்மாஸினீ, அல்ஃபள்ல் பின் மூஸா அஸ்ஸைனானீ, இஸ்ஹாக் பின் இப்ராஹீம் பின் யஸீத், முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துர்ரஸ்ஸாக், அப்துஸ்ஸமத் பின் அப்துல் வாரிஸ் பின் ஸயீத், ஹம்மாத் பின் உஸாமா, அஸ்ஹர் பின் ஸஃத் அஸ்ஸம்மான், பிஷ்ர் பின் அஸ்ஸரீ அல்அஃப்வாஹ், ஸயீத் பின் ஆமிர் அத்தப்ஆயீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): புகாரி இமாம், முஸ்லிம் இமாம், இப்னு மாஜா, திர்மிதீ இமாம், நஸாயீ இமாம், அபூ ஹாதிம் அர்ராஸீ, அபூ ஸுர்ஆ அர்ராஸீ, முஹம்மத் பின் யஹ்யா பின் ஃபாரிஸ் அத்தஹ்லீ, அபுல் அஹ்வஸ், முஹம்மத் பின் அல்ஹைஸம், இப்ராஹீம் பின் அபூ தாலிப், இப்னு அபூ துன்யா

வேறு பெயர்கள்: மஹ்மூத் பின் ஃகைலான் அல்அத்வீ, மஹ்மூத் பின் ஃகைலான் அல்மர்வஸீ


ஆதாரம்: muslimscholars.info (30277) · Should verify

தயாலிஸீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

ஷுஅபா

شعبة بن الحجاج

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

தரம்: மிகப் பலமானவர், நினைவாற்றல் மிக்கவர், துல்லியமானவர், வணக்கசாலி


விபரங்கள்

இயற்பெயர்: ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

தந்தை பெயர்: ஹஜ்ஜாஜ் பின் அல்வாரித்

வம்சம்: அல்அஸ்தீ, மவ்லா

புனைப்பெயர்: அபூபஸ்தாம்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: வாஸித், பஸரா

பிறப்பு: ஹிஜ்ரி 82, வாஸித்

இறப்பு: ஹிஜ்ரி 160, பஸரா

கால கட்டம்: தபஉத் தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் ரஹ் அவர்கள் ஒரு மிகப் பலமான, நினைவாற்றல் மிக்க, துல்லியமான, வணக்கசாலியான ஹதீஸ் அறிவிப்பாளர். இவர் ஹிஜ்ரி 82ல் வாஸித் நகரில் பிறந்தார். பஸரா நகரில் வசித்து, ஹிஜ்ரி 160ல் அங்கேயே மரணமடைந்தார்.

ஈராக்கில் ஹதீஸ் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்து, பலவீனமானவர்களை ஒதுக்கிய முதல் அறிஞர் இவரே. ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ இவரை 'ஹதீஸ் கலையின் அமீருல் முஃமினீன்' என்று புகழ்ந்துள்ளார். இமாம் ஷாஃபிஈ அவர்கள் 'ஷுஅபா இல்லையென்றால் ஈராக்கில் ஹதீஸ் அறியப்பட்டிருக்காது' என்று கூறியுள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): கதாதா, அய்யூப் அஸ்ஸக்தியானீ, இஸ்மாயீல் பின் அபூ காலித், அனஸ் பின் ஸீரீன், ஸாபித் பின் அஸ்லம் அல்பனானீ, ஹகம் பின் உதைபா, ஹம்மாத் பின் அபூ சுலைமான், காலித் அல்ஹத்தா, தாவூத் பின் அபூ ஹிந்த், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, சுலைமான் அல்அஃமஷ், மாலிக் இமாம்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அய்யூப் அஸ்ஸக்தியானீ, சுலைமான் அல்அஃமஷ், ஸஃத் பின் இப்ராஹீம், ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, வகீஉ பின் அல்ஜர்ராஹ், அப்துல்லாஹ் பின் இத்ரீஸ், அப்துல்லாஹ் பின் முபாரக், யஸீத் பின் ஸரீஉ, இஸ்மாயீல் பின் இப்ராஹீம் (இப்னு அலிய்யா), ஹம்மாத் பின் உஸாமா

வேறு பெயர்கள்: ஷுஅபா, ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ், ஷுஅபா அல்க்தகீ


ஆதாரம்: muslimscholars.info (20020) · Should verify

முஆவியா பின் குர்ரா

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

குர்ரா பின் இயாஸ் (ரலி)

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.